நெக்ஸானில் இருந்து நீக்கப்பட்ட க்ரில் டிசைன்... புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி காரில் வழங்கியது டாடா

'3-அம்பு' டிசைன் கொண்ட க்ரில் மற்றும் ட்யூல்-டோன் சக்கரங்களுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த அறிமுக மாடலான எச்பிஎக்ஸ் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நெக்ஸானில் இருந்து நீக்கப்பட்ட க்ரில் டிசைன்... புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி காரில் வழங்கியது டாடா

சில தினங்களுக்கு முன்பு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸானின் க்ரில்லில் வழங்கப்படும் டிசைனை ‘3-அம்பு'-ல் இருந்து ‘2-அம்பு' டிசைனிற்கு மாற்றி வெளியிட்டது. ஏனெனில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் லோகோவுடன் ‘3-அம்பு' டிசைன் மிகவும் நெருக்கமாக ஒத்திருந்ததால் டாடா நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருந்தது.

நெக்ஸானில் இருந்து நீக்கப்பட்ட க்ரில் டிசைன்... புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி காரில் வழங்கியது டாடா

இருப்பினும் ‘3-அம்பு' க்ரில் டிசைனை இந்நிறுவனம் கைவிடுவதுபோல் இல்லை. ஏனெனில் இந்த டிசைனை கொண்ட க்ரில் அமைப்புடன் இந்நிறுவனத்தின் அடுத்த இந்திய அறிமுக மாடலான டாடா எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி கார் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்டோ ஹூபின் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த சோதனை ஸ்பை படங்களில் இதனை தெளிவாக பார்க்க முடிகிறது.

நெக்ஸானில் இருந்து நீக்கப்பட்ட க்ரில் டிசைன்... புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி காரில் வழங்கியது டாடா

இது முன்பு நெக்ஸானில் வழங்கப்பட்டு வந்த க்ரில் டிசைன் தான். ஆனால் இந்த காரில் தலைக்கீழாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த க்ரில் அமைப்பு மட்டுமின்றி எல்இடி டிஆர்எல்களுடன் கிடைமட்ட வடிவில் ஹெட்லேம்ப்கள், இண்டிகேட்டர்கள் மற்றும் பம்பரில் ப்ரோஜெக்டர் விளக்குகள் உள்ளிட்டவற்றையும் பார்க்க முடிகிறது.

நெக்ஸானில் இருந்து நீக்கப்பட்ட க்ரில் டிசைன்... புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி காரில் வழங்கியது டாடா

சக்கரங்கள் புதிய டிசைனில் ட்யூல்-டோன் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இவை கிட்டத்தட்ட 15 இன்ச்சில் இருக்கலாம். இந்நிறுவனத்தின் அல்ட்ராஸின் முந்தைய சோதனை ஓட்ட ஸ்பை படங்களில் இதே டிசைனிலான அலாய் சக்கரங்களை பார்க்க முடிந்தது. ஆனால் அவை ட்யூல்-டோனில் இல்லை.

நெக்ஸானில் இருந்து நீக்கப்பட்ட க்ரில் டிசைன்... புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி காரில் வழங்கியது டாடா

இந்த அலாய் சக்கரங்கள் மிகவும் ப்ரீமியம் தரத்தில் உள்ளதால் அநேகமாக எச்பிஎக்ஸ் காரின் டாப் ட்ரிம்களில் மட்டும் வழங்கப்படலாம். இவற்றுடன் முழு-எல்இடி டெயில்லைட்கள், மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் ரூஃப் ரெயில்களையும் இந்த ஸ்பை படங்களில் பார்க்க முடிகிறது.

நெக்ஸானில் இருந்து நீக்கப்பட்ட க்ரில் டிசைன்... புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி காரில் வழங்கியது டாடா

எச்பிஎக்ஸ் காரில் வழக்கமான 1.2 லிட்டர், இன்லைன்-3 என்ஜினை டாடா நிறுவனம் வழங்கவுள்ளது. டாடா டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ராஸ் கார்களில் தற்சமயம் வழங்கப்பட்டு வருகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 86 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

நெக்ஸானில் இருந்து நீக்கப்பட்ட க்ரில் டிசைன்... புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி காரில் வழங்கியது டாடா

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் எச்பிஎக்ஸ்-ல் வழங்கப்படவுள்ளன. இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வும் அறிமுகத்திற்கு பிறகு இந்த எதிர்கால டாடா தயாரிப்பில் கொடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெக்ஸானில் இருந்து நீக்கப்பட்ட க்ரில் டிசைன்... புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி காரில் வழங்கியது டாடா

இவற்றுடன் எலக்ட்ரிக் வாகனமாகவும் வருங்காலத்தில் டாடா எச்பிஎக்ஸ் வழங்கப்படலாம். இந்த எலக்ட்ரிக் கார் குறித்து இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் எச்பிஎக்ஸ் இவி காரில், விரைவில் தயாரிப்பு பணிகளில் உட்படுத்தப்படவுள்ள அல்ட்ராஸ் இவி காரில் வழங்கப்படவுள்ள அதே எலக்ட்ரிக் மோட்டார் தான் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இந்த இரு எலக்ட்ரிக் கார் மாடல்களும் டாடாவின் மாடுலர் ஆல்ஃபா ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படவுள்ளன. டாடா எச்பிஎக்ஸ் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகலாம். எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
Tata HBX Spied Again, Gets New ‘Tri-Arrow’ Grille And Dual-Tone Wheels
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X