ஹிமாச்சல் பிரதேசத்தில் சோதனை செய்யப்பட்ட டாடா எச்பிஎக்ஸ்!! அடுத்த ஆண்டு அறிமுகம்

குளிர்பிரதேசமான ஹிமாச்சல் பிரதேசத்தில் எச்பிஎஸ் மைக்ரோ எஸ்யூவி காரின் சோதனை ஓட்டங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை வீடியோவை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹிமாச்சல் பிரதேசத்தில் சோதனை செய்யப்பட்ட டாடா எச்பிஎக்ஸ்!! அடுத்த ஆண்டு அறிமுகம்

இந்த 2020ஆம் ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட டாடாவின் புதிய தயாரிப்பான எச்பிஎக்ஸ் அடுத்த 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இதன் சோதனை ஓட்டத்தின் ஸ்பை வீடியோவில் டாடா எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவியின் சோதனை கார் லே-மணலி நெடுஞ்சாலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

ஹிமாச்சல் பிரதேசத்தில் சோதனை செய்யப்பட்ட டாடா எச்பிஎக்ஸ்!! அடுத்த ஆண்டு அறிமுகம்

இதற்கு முன்பும் எச்பிஎக்ஸ்-இன் சோதனை மாதிரி வெவ்வேறு விதமான சாலைகளிலும், தட்ப வெப்பநிலைகளிலும் சோதனையில் உட்படுத்தப்பட்டதை பார்த்திருக்கிறோம். பாபா புரியா என்ற யுடியூப் சேனல் மூலமாக கிடைக்க பெற்றுள்ள இந்த வீடியோவில் கார் முழுவதும் மறைக்கப்பட்டு இருந்தாலும், காரின் மொத்த தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த ஐடியா நமக்கு கிடைக்கிறது.

ஹிமாச்சல் பிரதேசத்தில் சோதனை செய்யப்பட்ட டாடா எச்பிஎக்ஸ்!! அடுத்த ஆண்டு அறிமுகம்

காம்பெக்ட் பரிமாணங்களுடன் உயரமான தோற்றம், இது டாடாவின் அடுத்த அறிமுக மாடலான எச்பிஎக்ஸ் என்பதை நமக்கு எளிதில் தெரியப்படுத்துகிறது. முந்தைய சோதனை ஓட்டங்களின் ஸ்பை படங்களின் மூலம் இந்த மைக்ரோ-எஸ்யூவி கார் கண்ட்ரோல்களுடன் தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரத்தை பெற்றுள்ளதை அறிந்திருந்தோம்.

ஹிமாச்சல் பிரதேசத்தில் சோதனை செய்யப்பட்ட டாடா எச்பிஎக்ஸ்!! அடுத்த ஆண்டு அறிமுகம்

இதனுடன் எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் சதுர வடிவில் ஏசி துளைகளையும் இதன் கேபினில் எதிர்பார்க்கலாம். டாடாவின் ஆல்ஃபா ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வெளிவரும் டாடா எச்பிஎக்ஸ், ஹார்ன்பில் என்ற பெயரில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றப்படி என்ஜின் அமைப்பு உள்ளிட்ட எந்த தகவலும் தற்போதைக்கு கிடைக்க பெறவில்லை.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

நமக்கு தெரிந்தவரை இந்த மைக்ரோ எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜினை டாடா வழங்கலாம். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் மஹிந்திரா கேயூவி100 போன்ற தற்சமயம் விற்பனையில் உள்ள மைக்ரோ எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக, ஏற்கனவே கூறியதுபோல் 2021ல் டாடா எச்பிஎக்ஸ் அறிமுகமாகலாம்.

Most Read Articles

English summary
Tata HBX seen testing yet again; this time in cold weather conditions
Story first published: Thursday, November 19, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X