புதிய டாடா ஹெக்ஸா சஃபாரி எடிசன் அறிமுகம்... கூடுதல் அம்சங்கள் என்னென்ன?

டாடா ஹெக்ஸா காரின் விசேஷ எடிசன் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் சில கூடுதல் சிறப்புகளுடன் வர இருக்கும் இந்த கார் பற்றிய முழுமையான விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா ஹெக்ஸா சஃபாரி எடிசன் அறிமுகம்!

இதன் விலை ரகத்திலான மஹிந்திரா மராஸ்ஸோ, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய எம்பிவி கார்கள் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர் ஆகிய எஸ்யூவி கார்களால் டாடா ஹெக்ஸா காருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. போதாக்குறைக்கு டாடா ஹாரியர் வந்ததும், இந்த காருக்கான மவுசு மங்கிப் போய்விட்டது. இது 7 சீட்டர் என்ற கூடுதல் மதிப்பை பெற்றிருந்தாலும், நவீன டிசைன் அம்சங்களுடன் வரும் புதிய எஸ்யூவி மாடல்களுடன் மல்லுக்கட்ட முடியவில்லை.

டாடா ஹெக்ஸா சஃபாரி எடிசன் அறிமுகம்!

இதனால், டாடா ஹெக்ஸா காருக்கு மாற்று அவசியமாகி இருக்கிறது. இதற்கு பதிலாக ஹாரியர் எஸ்யூவியின் அடிப்படையிலான கிராவிட்டாஸ் என்ற 7 சீட்டர் மாடலை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.

டாடா ஹெக்ஸா சஃபாரி எடிசன் அறிமுகம்!

இந்த சூழ்நிலையில், கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போவில் டாடா ஹெக்ஸா சஃபாரி என்ற விசேஷ பதிப்பு மாடல் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலில் கூடுதல் சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

டாடா ஹெக்ஸா சஃபாரி எடிசன் அறிமுகம்!

இந்த மாடலில் வலிமையான தோற்றத்தை தரும் புதிய பம்பர் அமைப்பு, 17 அங்குல கருப்பு வண்ண அலாய் வீல்கள், பின்புற கதவில் சஃபாரி என்ற பேட்ஜ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

டாடா ஹெக்ஸா சஃபாரி எடிசன் அறிமுகம்!

உட்புறத்தில் வடிவமைப்பு மாற்றங்கள் இல்லை. ஆனால், கருப்பு- பீஜ் என்ற இரட்டை வண்ணக் கலவை மூலமாக வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. இது காருக்கு பிரிமீயம் உணர்வை தரும்.

டாடா ஹெக்ஸா சஃபாரி எடிசன் அறிமுகம்!

புதிய டாடா ஹெக்ஸா சஃபாரி எடிசன் மாடலில் முக்கிய மாற்றமாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு நிகராக இதன் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

டாடா ஹெக்ஸா சஃபாரி எடிசன் அறிமுகம்!

இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், சாதாரண மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

டாடா ஹெக்ஸா சஃபாரி எடிசன் அறிமுகம்!

புதிய டாடா ஹெக்ஸா சஃபாரி எடிசன் மாடலானது வரும் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரூ.13.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் கிடைக்கிறது. ஹெக்ஸா சஃபாரி எடிசன் மாடலுக்கு கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கும்.

Most Read Articles
English summary
Tata Motors has revealed the Hexa Safari Edition at Auto Expo 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X