மின்சார வாகனமாக மாறிய ஏழைகளின் கார்... டாடாகூட இப்படியொரு மாடலை அறிமுகம் செய்யவில்லை...

டாடா நிறுவனம்கூட இன்னும் செய்யாத ஓர் விஷயத்தை இளைஞர் ஒருவர் நானோ காரில் செய்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

மின்சார வாகனமாக மாறிய ஏழைகளின் கார்... டாடாகூட இப்படியொரு மாடலை அறிமுகம் செய்யவில்லை...

ஏழைகளின் கார் என்ற புகழுக்குரிய ஒரே வாகனம் டாடா நிறுவனத்தின் நானோ மட்டுமே ஆகும். இதுதான் இந்தியாவில் மிக மிக மலிவு விலையில் களமிறக்கப்பட்ட முதல் கார் ஆகும். இது, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பயன்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு ரத்தன் டாடாவால் அறிமுகம் செய்யப்பட்ட கார் ஆகும். இதனால் இக்காருக்கு ஏழைகளின் கார் என்ற பெயரே உருவாகியது.

மின்சார வாகனமாக மாறிய ஏழைகளின் கார்... டாடாகூட இப்படியொரு மாடலை அறிமுகம் செய்யவில்லை...

ஆனால், இப்போது இந்த கார் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. இருப்பினும், ஒரு சிலர் இக்காரை தற்போதும் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு, தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஓர் கார்தான் மின்சார காராக மாற்றப்பட்டுள்ளது. இதனால், எரிபொருளால் இயங்கிக் கொண்டிருந்த டாடா நானோ மின்சார வெர்ஷனுக்கு உயர்ந்துள்ளது.

மின்சார வாகனமாக மாறிய ஏழைகளின் கார்... டாடாகூட இப்படியொரு மாடலை அறிமுகம் செய்யவில்லை...

டாடா நானோ மின்சார வெர்ஷனுக்கு உயர்த்தப்பட்டதுகுறித்த வீடியோ தொழில்நுட்ப பார்த்தா எனும் யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் டாடா நானோ கார் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டது பற்றிய பல்வேறு தகவல்களை அக்காரை மாடிஃபை செய்த இளைஞர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், டாடா நானோ எத்தகைய சிறப்பான மாடலாக மாறியிருக்கின்றது என்பது தெரியவந்துள்ளது.

மின்சார வாகனமாக மாறிய ஏழைகளின் கார்... டாடாகூட இப்படியொரு மாடலை அறிமுகம் செய்யவில்லை...

அதேசமயம், பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்துக்கொள்ளவில்லை. எனவே, ஒரு சில தகவல்கள் மர்மாமானதாக அமைந்துள்ளது.

ஆனால், நானோவில் பொருத்தப்பட்டிருந்த ஐசி எஞ்ஜின் மாற்றப்பட்டு 1,500 வாட்ஸ் திறன் கொண்ட பிஎல்டி எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

மின்சார வாகனமாக மாறிய ஏழைகளின் கார்... டாடாகூட இப்படியொரு மாடலை அறிமுகம் செய்யவில்லை...

இந்த மின் மோட்டாருக்கு தேவையான மின் சக்தியை 70ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்குகின்றது. இதன் முழுமையான ரேஞ்ஜ் விகிதம் பற்றிய தகவல் தெளிவாக கூறப்படவில்லை. அதேசமயம், இந்த காரில் இடம்பெற்றிருக்கும் மின் மோட்டார் அதிகபட்சம் மணிக்கு 50 வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதனை செல்போன் ஜிபிஎஸ் வாயிலாக அந்த இளைஞர் நமக்கு உறுதிச் செய்துள்ளார்.

மின்சார வாகனமாக மாறிய ஏழைகளின் கார்... டாடாகூட இப்படியொரு மாடலை அறிமுகம் செய்யவில்லை...

இதன் ப்யூவல் எஞ்ஜின் நீக்கப்பட்டு மின்மோட்டராக மாற்றப்பட்டிருந்தாலும் இது பின் வீல் இயக்கம் கொண்ட காராகவே இருக்கின்றது. ஆனால், கியர்பாக்ஸ் வழங்கப்படவில்லை. ஸ்கூட்டரைபோல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே இதில் காணப்படுகின்றது. இது ஓர் ஹோம் மேட் மாடிஃபிகேஷன் என்பதால் ஒரு சில வேலைகள் தற்போது வரை முடிவடையாமலே இருக்கின்றது.

மின்சார வாகனமாக மாறிய ஏழைகளின் கார்... டாடாகூட இப்படியொரு மாடலை அறிமுகம் செய்யவில்லை...

இருப்பினும், டாடா நானோ காரில் மின்சார வெர்ஷனை அறிமுகப்படுத்தியதற்காக நெட்டிசன்கள் பலர் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

அதேசமயம், இந்தியர்கள் பலர் மத்தியில் டாடா நானோ காரைப் போன்று மலிவு விலைக் கொண்ட மின்சார வாகனத்திற்கான வரவேற்பு மிக மிக அதிகளவில் இருக்கின்றது.

மின்சார வாகனமாக மாறிய ஏழைகளின் கார்... டாடாகூட இப்படியொரு மாடலை அறிமுகம் செய்யவில்லை...

ஆனால், சாத்தியக் கூறு இல்லாத காரணத்தால் மலிவு விலை மின் வாகனங்களைக் களமிறக்குவதில் டாடா போன்ற ஜாம்பவான் நிறுவனங்கள்கூட சிரமப்பட்டு வருகின்றன. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே டாடா நிறுவனம்கூட அறிமுகம் ஓர் வெர்சனில் இளைஞர் ஒருவர் நானோ காரை எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கு உயர்த்தியுள்ளார்.

மின்சார வாகனமாக மாறிய ஏழைகளின் கார்... டாடாகூட இப்படியொரு மாடலை அறிமுகம் செய்யவில்லை...

இந்த திறன் மாற்றத்திற்காக ஒட்டுமொத்தமாக எவ்வளவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், இது மிக மிக குறைந்த தொகையே செலவு செய்யப்பட்டிருக்கும் என்ற கருத்தை ஆட்டோ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மின்சார வாகனமாக மாறிய ஏழைகளின் கார்... டாடாகூட இப்படியொரு மாடலை அறிமுகம் செய்யவில்லை...

அதேசமயம், இதுபோன்ற ப்யூவல் எஞ்ஜின் கொண்ட வாகனங்களை மின்சார வெர்ஷனாக அப்கிரேட் செய்வதற்கு சந்தையில் மின்சார வாகனத்திற்கான கிட் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அவை, புதிய மின்சார கார்களைக் காட்டிலும் பல மடங்கு விலை குறைந்தவை ஆகும். ஆனால், இதுபோன்று வாகனங்களை மாடிஃபை செய்து பயன்படுத்துவது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும்.

மின்சார வாகனமாக மாறிய ஏழைகளின் கார்... டாடாகூட இப்படியொரு மாடலை அறிமுகம் செய்யவில்லை...

எனவே, உரிய அனுமதியுடன் சான்று பெற்றே இதுபோன்ற மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை சாலையில் இயக்க வேண்டும். இல்லையெனில், துறைச் சார்ந்த அதிகாரிகளோ அல்லது போலீஸாரோ பல ஆயிரம் செலவில் உருவாகும் அந்த வாகனத்தை நொடிப் பொழுதில் அழிக்க நேரிடும்.

மின்சார வாகனமாக மாறிய ஏழைகளின் கார்... டாடாகூட இப்படியொரு மாடலை அறிமுகம் செய்யவில்லை...

ஆனால், நம்ப ஊர் ஆட்கள் பலர் இதுபோன்று மாடிஃபிகேஷன் வாகனங்களை எந்தவொரு தயக்கமுமின்றி பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பலர் மாடிஃபிகேஷனை மிக தைரியமாக பல லட்சங்கள் செலவில் செய்தும் வருகின்றனர். இம்மாதிரியான வாகனங்களை களையெடுப்பதற்காக தனி கவனம் செலத்தி வருகின்றனர். இதில், சிக்கிய வாகனங்கள் ஏராளம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மின்சார வாகனமாக மாறிய ஏழைகளின் கார்... டாடாகூட இப்படியொரு மாடலை அறிமுகம் செய்யவில்லை...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நானோ கார்களை இந்தியாவில் ரூ. 1 லட்சம் என்ற விலைக்கு அறிமுகம் செய்திருந்தது. ஏழை மக்கள் பலர் பைக்குகளில் ட்ரிபிள்ஸ் செய்வதைக் கண்டு, அவர்களுக்கு பயனளிக்கும் விதமாக இக்கார் களமிறக்கப்பட்டது. ஆனால், ஆரம்பத்தில் கிடைத்த அமோகமான வரவேற்பு நாளடைவில் மிகக் கடுமையாக குறைந்தது. இதன் விளைவாக அக்கார் சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டது.

Most Read Articles

English summary
Tata Nano Modified Into An Electric Car. Read In Tamil.
Story first published: Monday, June 29, 2020, 14:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X