வைரலாகும் வீடியோ... பாதுகாப்பு இல்லாத டாடா நானோ காரை உரிமையாளர் எப்படி மாற்றியுள்ளார்? என பாருங்க...

பாதுகாப்பு இல்லாத டாடா நானோ காரை, அதன் உரிமையாளர் பிக்-அப் டிரக்காக மாற்றம் செய்துள்ளார்.

வைரலாகும் வீடியோ... பாதுகாப்பு இல்லாத டாடா நானோ காரை உரிமையாளர் எப்படி மாற்றியுள்ளார்? என பாருங்க...

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய சந்தையில் அறிமுகமான கார் டாடா நானோ. இந்திய சந்தை மட்டுமல்லாது, உலகம் முழுவதும் டாடா நானோ மீது எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதன் மலிவான விலையே இதற்கு காரணம். முடிந்த வரை மலிவான விலையில், மக்களின் கார் என்ற பட்டத்துடன் வந்தாலும், வர்த்தக ரீதியில் டாடா நானோ வெற்றி பெற தவறியது.

வைரலாகும் வீடியோ... பாதுகாப்பு இல்லாத டாடா நானோ காரை உரிமையாளர் எப்படி மாற்றியுள்ளார்? என பாருங்க...

டாடா நானோ கார் குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்த அச்சங்கள், அதன் படுதோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டன. டாடா நானோ கார் தற்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை. அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் இன்னமும் கூட டாடா நானோ கார் செய்திகளில் அவ்வப்போது அடிபட்டு வருகிறது.

வைரலாகும் வீடியோ... பாதுகாப்பு இல்லாத டாடா நானோ காரை உரிமையாளர் எப்படி மாற்றியுள்ளார்? என பாருங்க...

டாடா நானோ காரின் உரிமையாளர்கள் பலர், தங்கள் வாகனத்தை வெவ்வேறு விதங்களில் மாற்றியமைத்து வருகின்றனர். இதில், சில மாற்றங்கள் சிரிப்பை வரவழைப்பவையாகவும் உள்ளன. இதன் காரணமாகதான் டாடா நானோ இன்னமும் செய்திகளில் அடிபடுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, டாடா நானோ கார் ஒன்று ஹெலிகாப்டரின் தோற்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

வைரலாகும் வீடியோ... பாதுகாப்பு இல்லாத டாடா நானோ காரை உரிமையாளர் எப்படி மாற்றியுள்ளார்? என பாருங்க...

இந்த வரிசையில் தற்போது மற்றொரு நானோ கார் பிக்-அப் டிரக்காக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நானோ கார் உரிமையாளர் ஒருவர் செய்துள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலை தளங்களில் வலம் வந்து கொண்டுள்ளது. இது 2012ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பிஎஸ்-3 டாடா நானோ எல்எக்ஸ் கார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைரலாகும் வீடியோ... பாதுகாப்பு இல்லாத டாடா நானோ காரை உரிமையாளர் எப்படி மாற்றியுள்ளார்? என பாருங்க...

இந்த காரின் பின்பகுதியில் மேற்கூரை அகற்றப்பட்டுள்ளது. ஆனால் டாடா நானோ கார் ஒன்றின் மேற்கூரை அகற்றப்படுவது இது முதல் முறை கிடையாது. இந்தியாவில் மேற்கூரை இல்லாத டாடா நானோ கார்கள் பலவும் வலம் வந்து கொண்டுள்ளன. தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள டாடா நானோ காரின் முன் பகுதியில் மேற்கூரை அப்படியே விடப்பட்டுள்ளது.

வைரலாகும் வீடியோ... பாதுகாப்பு இல்லாத டாடா நானோ காரை உரிமையாளர் எப்படி மாற்றியுள்ளார்? என பாருங்க...

பின் பகுதியில் மட்டும்தான் மேற்கூரை அகற்றப்பட்டுள்ளது. அத்துடன் பின் பகுதி நீட்டிக்கப்பட்டிருப்பதை போலவும் தோற்றமளிக்கிறது. இந்த காரின் முன் பகுதியில் க்ராஷ் கார்டு சேர்க்கப்பட்டுள்ளது. காருடைய கேபினின் முதல் பாதி அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் அதன் உரிமையாளருக்கு பயன்தரக்கூடியதாக இருக்கலாம்.

வைரலாகும் வீடியோ... பாதுகாப்பு இல்லாத டாடா நானோ காரை உரிமையாளர் எப்படி மாற்றியுள்ளார்? என பாருங்க...

ஆனால் சட்டப்பூர்வமாக பார்த்தால், இந்த கார் சாலையில் இயக்குவதற்கு உகந்தது கிடையாது. பிக்-அப் டிரக் போன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள டாடா நானோ காரின் காணொளியை ரஷ்லேன் வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

பொதுவாக கார்களை இப்படி மாற்றம் செய்வது பாதுகாப்பானது கிடையாது. இத்தகைய மாற்றங்களை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி அவ்வப்போது இதுபோன்ற மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதுவும் டாடா நானோ காரில் இப்படி ஒரு மாற்றத்தை செய்வதென்பது மிகவும் அபாயகரமானது.

வைரலாகும் வீடியோ... பாதுகாப்பு இல்லாத டாடா நானோ காரை உரிமையாளர் எப்படி மாற்றியுள்ளார்? என பாருங்க...

ஏனெனில் அது ஏற்கனவே பாதுகாப்பு இல்லாத கார். குளோபல் என்சிஏபி அமைப்பு சோதனை செய்த கார்களில், பாதுகாப்பு இல்லாத கார்களில் ஒன்று என்ற பெயரை டாடா நானோ சம்பாதித்துள்ளது. இந்தியாவின் 38 கார்களை குளோபல் என்சிஏபி அமைப்பு சோதனை செய்துள்ளது. இந்த பட்டியல் சமீபத்தில்தான் வெளியானது.

வைரலாகும் வீடியோ... பாதுகாப்பு இல்லாத டாடா நானோ காரை உரிமையாளர் எப்படி மாற்றியுள்ளார்? என பாருங்க...

இதில், டாடா நானோ கார் கடைசி இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே ஏற்கனவே பாதுகாப்பு இல்லாத ஒரு காரில் இத்தகைய மாற்றங்களை செய்வது தவறான ஒரு விஷயம்தான். இது இந்த காரில் பயணம் செய்பவர்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது. கூடவே சாலையில் பயணம் செய்யும் மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

Most Read Articles

English summary
Tata Nano Modified Into Pick Up Truck - Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X