ரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்...

ஏழைகளின் கார் என்றழைக்கப்படும் டாடா நானோ கார் வெறும் 36 ஆயிரம் ரூபாயில் அட்டகாசமான வாகனமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்... வீடியோ!

ஒரு லட்ச ரூபாய் கார், ஏழைகளின் வாகனம் என பல புனைப் பெயர்களைக் கொண்ட காரே டாடா நானே. இக்காரை ஏழை மற்றும் எளிய மக்களின் பயன்பாட்டிற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. புதிய பாதுகாப்பு விதி மற்றும் மேலும் சில குறிப்பிட்ட காரணங்களால் இப்போது இக்கார் விற்பனையில் இல்லை.

ரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்... வீடியோ!

Image Courtesy: AutoTrend TV

இக்கார் சார்ந்த அனைத்து செயல்பாட்டையும் டாடா நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே நிறுத்தியது. இருப்பினும், ஒரு சிலரால் இக்கார் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையிலான ஓர் டாடா நானே காரையே கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அட்டகாசமான காராக மாற்றியிருக்கின்றனர்.

ரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்... வீடியோ!

இதுகுறித்து ஆட்டோ டிரெண்ட் கராஜ் வெளியிட்டிருக்கும் வீடியோ பற்றிய தகவலைதான் இந்த பதிிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இந்த மாடிஃபிகேஷனால் டாடா நானே மெகாபிக்சல் எடிசனாக மாறியுள்ளது. இதற்காக பல்வேறு இழப்புகள் மற்றும் புது கூறுகள் சேர்ப்பு ஆகியவற்றை டாடா நானோ சந்தித்திருக்கின்றது.

ரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்... வீடியோ!

முதலில் டாடா நானோவின் முகப்பு பகுதியில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கலாம். எல்இடி டிஆர்எல்கள் சூழ்ந்திருக்க அதே எல்இடி தரத்திலான ஹெட்லேம்ப் முன் பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இது, முகப்பு பகுதியில் செய்யப்பட்டிருக்கும் மாற்றத்திலேயே மிகவும் அட்டகாசமான மாற்றம் ஆகும். அநேகரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இது அமைந்துள்ளது.

ரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்... வீடியோ!

ஹெட்லேம்பைச் சுற்றியிருக்கும் டிஆர்எல் மின் விளக்கை ஒளிர விடுவதற்காக தனி ஸ்விட்ச்கள் காரின் உட்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. ஆகையால், தேவையென்றால் அந்த மின் விளக்கை பகல் நேரத்திலும் எரிய விட்டுக்கொள்ளலாம். இருப்பினும், இரவு நேரத்தில் இந்த மின் விளக்கை ஒளிரச் செய்யும்போதே டாடா நானே மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைப் பெறுகின்றது.

ரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்... வீடியோ!

இதுபோன்ற பல்வேறு வியத்தகு மாற்றங்களை டாடா நானோ உரிமையாளர் அதில் மேற்கொண்டிருக்கின்றார். மேலும், சிறப்பான இயங்கும் திறனைப் பெற வேண்டும் என்பதற்காக டயர் மற்றும் வீல் ஆகியவற்றையும் அவர் மாற்றியிருக்கின்றார். இது 13 இன்ச் அளவுள்ள வீல் ஆகும். இதில், 155/65ஆர்13 டைப் சியாட் மைலேஸ் டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

ரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்... வீடியோ!

இந்த வீல் முன்பு இருந்ததைக் காட்டிலும் சற்று பெரியதாக இருந்தாலும் மிக துள்ளியமாக பொருந்தியிருப்பதாக அதன் உரிமையாளர் கூறுகின்றார். இதைத்தொடர்ந்து, வீலின் ரிம்மிற்கு புதிய நிறமும் வழங்கப்பட்டுள்ளது. கண்ணாடியைப் போல் மினு மினுக்கும் கருப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இரண்டாவது நிறமாக சிவப்பு நிற ஸ்டிக்கர்கள் அதில் ஒட்டப்பட்டுள்ளன.

ரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்... வீடியோ!

மேலும், சில்வர் நிறத்திலான ரிம் குவார்ட்கள் அதன் மீது பொருத்தப்பட்டிருக்கின்றது. இதேபோன்று வெளிப்புற நிறமும் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. மேற்புற நிறத்திற்கு அதிகம் மினு மினுக்கும் சிவப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், டாடா நானேவைக் குறிக்கும் ஸ்டிக்கர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற பல்வேறு சிறப்பு வசதிகள் டாடா நானோவில் சேர்க்கப்பட்டுள்ளது.

ரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்... வீடியோ!

வெளிப்புறத்தைப் போலவே காரின் உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இருக்கைக்கு லெதர் போர்வை வழங்கப்பட்டுள்ளது. மேலும், செல்போன் தாங்கி, மன நிலைக்கு எரிய கூடிய மின் விளக்கு, குளோவ் பாக்ஸ் மற்றும் ஏராளானமான புதிய வசதிகள் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்குமே ரூ. 36 ஆயிரம் மட்டுமே செலவு செய்திருப்பதாக மாடிஃபிகேஷன் குழு தெரிவித்துள்ளது.

ரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்... வீடியோ!

இது, கேட்கும் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதேசமயம், இவ்வளவு குறைந்த விலையில் டாடா நானோ காரை இவ்ளோ அழகுப்படுத்த முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. டாடா நிறுவனம், நானோ காரை 2008ம் ஆண்டே முதல் முறையாக நாட்டில் அறிமுகப்படுத்தியது.

ரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்... வீடியோ!

624சிசி திறன் கொண்ட பெட்ரோல் மோட்டார், 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸில் இது விற்பனைக்குக் கிடைத்தது. இந்த கார் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரேவற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக கார் பெரிய அளவில் பிரபலமடையவில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களினாலயே இக்கார் தற்போது விற்பனையில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றது.

ரூ. 36 ஆயிரத்தில் அட்டகாசமான காராக மாறிய டாடா நானோ... தமிழகத்தில் அரங்கேறிய ஆச்சரியம்... வீடியோ!

இருப்பினும், டாடா நிறுவனம் இந்த காரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக கடந்த 2018ம் ஆண்டு வரை விற்பனையில் ஈடுபடுத்தி வந்தது. பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் இக்காரின் உற்பத்தியை தடையில்லாமல் 2018ம் ஆண்டு வரை நகர்த்திக் கொண்டு வந்தது. இதையடுத்தே அக்கார் சார்ந்து செய்யப்பட்டு வந்த அனைத்து செயல்பாட்டுக்கும் டாடா மோட்டார்ஸ் தடை விதித்தது.

Most Read Articles

English summary
Tata Nano Modified Like MegaPixel Edition Concept. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X