டாடா நெக்ஸானின் போலி மாடல்... மீண்டும் ஷாக் கொடுத்த சீன நிறுவனம்...

வழக்கம்போல சீனாவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்று டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் மாடலை அச்சு அசல் தோற்றத்தில் புதிய கார் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

டாடா நெக்ஸானின் போலி மாடல்... மீண்டும் ஷாக் கொடுத்த சீன நிறுவனம்...

தற்போது டாடா நெக்ஸான் எஸ்யூவி கார். நெக்ஸானின் போலி மாடலை சீனாவை சேர்ந்த கீலே-காண்டி துணை ஃபெங்ஷெங் ஆட்டோமொபைல்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. சீன சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த போலி மாடலுக்கு இந்நிறுவனம் வைத்துள்ள பெயர் மாப்லே 30எக்ஸ்.

டாடா நெக்ஸானின் போலி மாடல்... மீண்டும் ஷாக் கொடுத்த சீன நிறுவனம்...

டாடா நெக்ஸானை போன்று முழுவதும் எலக்ட்ரிக் தரத்தில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள இந்த காருக்கு அந்நாட்டு சந்தையில் இந்திய மதிப்பில் ரூ.7.5 லட்சம் அளவில் ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீன சந்தை பொதுவாகவே மலிவான எலக்ட்ரிக் கார்களுக்கு பெயர் போனது என்பதால் இதன் விலை ஒன்றும் அந்நாட்டு வாடிக்கையாளர்களை ஆச்சிரியப்படுத்தாது.

டாடா நெக்ஸானின் போலி மாடல்... மீண்டும் ஷாக் கொடுத்த சீன நிறுவனம்...

நெக்ஸான் மாடலை பொறுத்தவரையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை புதியதாக இந்த வருட துவக்கத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. பிறகு இதே டிசைன் அமைப்பில் மலிவான விலையில் இதன் எலக்ட்ரிக் வெர்சன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

டாடா நெக்ஸானின் போலி மாடல்... மீண்டும் ஷாக் கொடுத்த சீன நிறுவனம்...

மாப்லே 30எக்ஸ் மாடலின் முன்புற க்ரில் மற்றும் ஹெட்லேம்ப்கள் கிட்டத்தட்ட நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டை ஒத்து காணப்படுகின்றன. இவை மட்டுமின்றி காரின் பொனெட்டும் நெக்ஸானில் இருந்து பெறப்பட்டதுபோல் காட்சியளிக்கிறது. முன்புறத்தை காட்டிலும் காரின் பக்கவாட்டு பகுதிகள் மாப்லே 30எக்ஸ் காரை எந்த விதத்திலும் நெக்ஸான் மாடலில் இருந்து வேறுப்படுத்தி காட்டவில்லை.

டாடா நெக்ஸானின் போலி மாடல்... மீண்டும் ஷாக் கொடுத்த சீன நிறுவனம்...

சீனாவின் போலி காரும் ட்யூல்-டோன் பெயிண்ட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபெங்ஷெங் நிறுவனம் காரின் மேற்புற உள்பட பில்லர்களுக்கும் கருப்பு நிறத்தை வழங்கியுள்ளது. இதில் பி-பில்லர் தவிர்த்து மற்ற அனைத்து பில்லர்களும் நெக்ஸானை ஒத்து காணப்படுகிறது. பி-பில்லர் மட்டும் சிறிது வித்தியாசப்படுகிறது.

டாடா நெக்ஸானின் போலி மாடல்... மீண்டும் ஷாக் கொடுத்த சீன நிறுவனம்...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு எலக்ட்ரிக் மாப்லே 30எக்ஸ் மாடலில் எலக்ட்ரிக் மோட்டார் 70kW பேட்டரி உடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் மூலமாக சிங்கிள் சார்ஜில் 306 கிமீ தூரம் வரையில் காரை இயக்கி செல்ல முடியும். இதன் பேட்டரியை 80% சார்ஜ் செய்ய 30 நிமிடங்கள் தேவைப்படும்.

வழக்கமான ப்ளக்-இன் சார்ஜர் மூலமாகவும் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். ஆனால் இது எடுத்து கொள்ளும் நேரம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. முழுவதும் டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை கொண்டுள்ள நெக்ஸானின் இந்த போலி மாடல் சீனாவில் ஏற்கனவே விற்பனையை துவங்கிவிட்டது.

டாடா நெக்ஸானின் போலி மாடல்... மீண்டும் ஷாக் கொடுத்த சீன நிறுவனம்...

மாப்லே ப்ராண்ட்டில் வெளியாகியுள்ள முதல் கார் இதுவே. மேலும் இந்த ப்ராண்ட்டில் இருந்து வருங்காலங்களில் புதிய தயாரிப்புகள் வெளிவரும் என சீன வாடிக்கையாளர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. நெக்ஸான் மாடலுக்கு இந்திய சந்தையில் விற்பனையில் எந்த பாதிப்பும் இல்லை. டாடாவின் இந்த எஸ்யூவி கார் கடந்த மார்ச் மாதத்தில் 198 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
China’s latest ‘copycat car’ is a Tata Nexon rip-off
Story first published: Friday, April 24, 2020, 23:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X