வெறும் ரூ.5,999 மாதத் தவணையில் டாடா நெக்ஸான் வாங்கும் வாய்ப்பு!

டாடா நெக்ஸான் எஸ்யூவிக்கு ரூ.5,999 மாதத் தவணை கொண்ட சிறப்பு கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் குறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெறும் ரூ.5,999 மாதத் தவணையில் டாடா நெக்ஸான் வாங்கும் வாய்ப்பு!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக டாடா நெக்ஸான் எஸ்யூவி இருந்து வருகிறது. விற்பனையிலும் மிக முக்கிய இடத்தை தக்க வைத்து வருகிறது. இந்த நிலையில், ஏற்கனவே மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ கார்கள் தவிர்த்து, கியா சொனெட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகிய மாடல்கள் வந்ததால் நெருக்கடி அதிகரித்துள்ளது.

வெறும் ரூ.5,999 மாதத் தவணையில் டாடா நெக்ஸான் வாங்கும் வாய்ப்பு!

இதையடுத்து, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மிக குறைவான மாதத் தவணை கொண்ட சிறப்பு கடன் திட்டங்களை நெக்ஸான் எஸ்யூவிக்கு டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.

வெறும் ரூ.5,999 மாதத் தவணையில் டாடா நெக்ஸான் வாங்கும் வாய்ப்பு!

இதன்படி, ரூ.5,999 மாதத் தவணை கொண்ட சிறப்பு கடன் திட்டம் டாடா நெக்ஸான் காருக்கு வழங்கப்படுகிறது. ஆனால், முதல் ஆறு மாதங்களுக்கு மட்டுமே இந்த குறைவான மாதத் தவணை செலுத்தும்படியாக வகுக்கப்பட்டு இருக்கிறது. ஏழாவது மாதத்திலிருந்து 5 ஆண்டுகள் வரை மாதத் தவணை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே செல்லும்.

வெறும் ரூ.5,999 மாதத் தவணையில் டாடா நெக்ஸான் வாங்கும் வாய்ப்பு!

இறுதியில் மீதமுள்ள தொகையை ஒரே தவணையிலோ அல்லது மறு கடன் அடிப்படையில் அதனை திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இதுதவிர்த்து, காரின் ஆன்ரோடு விலைக்கு முழுமையாக கடன் பெறும் திட்டமும், முதல் ஆறு மாதங்களுக்கு மாதத் தவணை கட்டுவதிலிருந்து விலக்கு பெறும் வகையிலான சிறப்பு கடன் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

வெறும் ரூ.5,999 மாதத் தவணையில் டாடா நெக்ஸான் வாங்கும் வாய்ப்பு!

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் டர்போ எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

வெறும் ரூ.5,999 மாதத் தவணையில் டாடா நெக்ஸான் வாங்கும் வாய்ப்பு!

டாடா நெக்ஸான் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் பெறும் வாய்ப்பு உள்ளது.

வெறும் ரூ.5,999 மாதத் தவணையில் டாடா நெக்ஸான் வாங்கும் வாய்ப்பு!

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், டியூவல் டோன் அலாய் வீல்கள், டியூவோல் டோன் வண்ணத் தேர்வுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

வெறும் ரூ.5,999 மாதத் தவணையில் டாடா நெக்ஸான் வாங்கும் வாய்ப்பு!

இந்த காரில் வழங்கப்படும் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். ஐஆர்ஏ கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் உள்ளது.

வெறும் ரூ.5,999 மாதத் தவணையில் டாடா நெக்ஸான் வாங்கும் வாய்ப்பு!

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட் ஆகிய வசதிகள் உள்ளன. எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியும் இடம்பெற்றிருக்கிறது. ரூ.6.99 லட்சம் ஆரம்ப விலையில் டாடா நெக்ஸான் எஸ்யூவி கிடைக்கிறது.

Most Read Articles

English summary
Tata Motors has announced special loan schemes for the Nexon SUV to woo customers.
Story first published: Tuesday, September 29, 2020, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X