டெஸ்லா கார்களுக்கு இணையான தொடுத்திரை உடன் டாடா நெக்ஸான் கார்... பிரம்மிக்க வைக்கும் வசதிகள்...

டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் கார் ஒன்று டெஸ்லா கார்களுக்கு இணையாக ஃப்ளோட்டிங் தொடுத்திரை உடன் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் கார் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டெஸ்லா கார்களுக்கு இணையான தொடுத்திரை உடன் டாடா நெக்ஸான் கார்... பிரம்மிக்க வைக்கும் வசதிகள்...

டாடா நிறுவனம் முதன்முதலாக நெக்ஸான் எஸ்யூவி மாடலை 2017ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தி இருந்தது. கம்பீரமான தோற்றம், உறுதியான தரம், ஆற்றல்மிக்க டீசல் என்ஜின் மற்றும் அதிகளவிலான வசதிகளால் இந்த டாடா எஸ்யூவி கார் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் முதன்மையான மாடல்களுள் ஒன்றாக உள்ளது.

டெஸ்லா கார்களுக்கு இணையான தொடுத்திரை உடன் டாடா நெக்ஸான் கார்... பிரம்மிக்க வைக்கும் வசதிகள்...

இதன் டாப் வேரியண்ட்கள், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் பெரிய ஃப்ளோட்டிங் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை 8-ஸ்பீக்கர் ஹர்மன் ஆடியோ அமைப்புடன் கொண்டுள்ளன. இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆரம்பத்தில் 6.5 இன்ச்சில் வழங்கப்பட்டது.

டெஸ்லா கார்களுக்கு இணையான தொடுத்திரை உடன் டாடா நெக்ஸான் கார்... பிரம்மிக்க வைக்கும் வசதிகள்...

அதன்பின் கடந்த ஆண்டில் மேம்படுத்தப்பட்ட தொடுத்திரை அணுகல் மற்றும் சிறப்பான யுஐ இண்டர்ஃபேஸ் உடன் 7 இன்ச்சில் அப்டேட் செய்யப்பட்டது. நெக்ஸானின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உடன் திருத்தியமைக்கப்பட்ட கேபின் மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் இந்த வருட துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

டெஸ்லா கார்களுக்கு இணையான தொடுத்திரை உடன் டாடா நெக்ஸான் கார்... பிரம்மிக்க வைக்கும் வசதிகள்...

இம்பேக்ட் 2.0 டிசைனின் தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் வெளிவந்த பின்பு நெக்ஸான் மாடல் அதிகளவில் கஸ்டமைஸ்ட் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போதும் இந்த கார் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரோஹித் மெஹ்தா சாய் ஆட்டோ ஆக்ஸஸரீகள் என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் இந்த காரில் சிறப்பம்சமாக, பார்பவர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் பெரிய நீட்டமான தொடுத்திரை உடன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருப்பது காட்டப்பட்டுள்ளது.

டெஸ்லா கார்களுக்கு இணையான தொடுத்திரை உடன் டாடா நெக்ஸான் கார்... பிரம்மிக்க வைக்கும் வசதிகள்...

டெஸ்லா கார்களின் ஸ்டைலில் உள்ள இந்த தொடுத்திரை அமேசான் மூலமாக இயங்கக்கூடியது. சுமார் 8 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ள டேப்லெட் வடிவத்திலான இந்த தொடுத்திரை மிரர் திரை ஏற்கக்கூடியதாகவும், ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக்கூடியதாகவும் உள்ளது.

டெஸ்லா கார்களுக்கு இணையான தொடுத்திரை உடன் டாடா நெக்ஸான் கார்... பிரம்மிக்க வைக்கும் வசதிகள்...

இவ்வளவு பெரிய தொடுத்திரையினால் இந்த கஸ்டமைஸ்ட் காரை ஓட்டும் ஓட்டுனர் நிமிர்ந்தபடியே தகவல்களை பெறலாம். பொத்தான்களையும் கொண்டுள்ள இந்த திரையின் மூலமாக ஒரே நேரத்தில் கூகுள் வரைப்படம் மற்றும் இசை என்ற இரு வசதிகளையும் அனுபவிக்க முடியும்.

டெஸ்லா கார்களுக்கு இணையான தொடுத்திரை உடன் டாடா நெக்ஸான் கார்... பிரம்மிக்க வைக்கும் வசதிகள்...

ரிவர்ஸிங்கின் போது பின்பக்க கேமிராவின் பார்வையை வழிகாட்டுதல்களுடன் திரையின் வழியாக பெறலாம். பயன்பாட்டின் எளிமைக்கு, திரையை ஸ்டேரிங் சக்கரத்தின் மூலமாகவும் கட்டுப்படுத்த இயலும்.

டெஸ்லா கார்களுக்கு இணையான தொடுத்திரை உடன் டாடா நெக்ஸான் கார்... பிரம்மிக்க வைக்கும் வசதிகள்...

மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களாக இணைய ஹாட்ஸ்பாட் மற்றும் கூகுளின் ஜிபிஎஸ் நாவிகேஷன் மென்பொருள் அப்ளிகேஷனான வாஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் புதிய டிசைனில் 16 இன்ச்சில் சக்கர கவர்கள் மற்றும் சந்தைக்கு பிறகான ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்றப்படி என்ஜின் அமைப்பில் மாற்றம் எதுவும் இல்லை.

Most Read Articles

English summary
Tata Nexon Customised With Tesla-Like Floating Touchscreen – Video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X