வெறும் மூன்றே வருடங்களில், 1.5 லட்சமாவது நெக்ஸான் காரை வெளியேற்றியது டாடா!!

இந்தியாவில் அறிமுகம் செய்து மூன்று வருடங்களுக்கு உள்ளாக நெக்ஸானின் விற்பனையில் 1.5 லட்சம் என்ற மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் மூன்றே வருடங்களில், 1.5 லட்சமாவது நெக்ஸான் காரை வெளியேற்றியது டாடா!!

டாடா மோட்டார்ஸின் புனே, ரஞ்சகான் தொழிற்சாலையில் இருந்து 1,50,000வது நெக்ஸான் கார் தயாரிப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த மைல்கல்லை அடைந்திருப்பதன் மூலம் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்று என்பதை மீண்டும் ஒருமுறை நெக்ஸான் உறுதிப்படுத்தியுள்ளது.

வெறும் மூன்றே வருடங்களில், 1.5 லட்சமாவது நெக்ஸான் காரை வெளியேற்றியது டாடா!!

முன்னதாக 50,000 யூனிட்களின் விற்பனையை 2018 செப்டம்பர் மாதத்தில் பதிவு செய்திருந்த இந்த டாடா கார், 1 லட்சம் என்ற மைல்கல்லை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அடைந்திருந்தது. உலகளாவிய என்சிஏபி பாதுகாப்பு சோதனையில் முழு 5-நட்சத்திரத்தையும் பெற்ற முதல் இந்திய கார் என்பதுதான் நெக்ஸானின் அடையாளமாகும்.

வெறும் மூன்றே வருடங்களில், 1.5 லட்சமாவது நெக்ஸான் காரை வெளியேற்றியது டாடா!!

2018ல் இந்த அடையாளத்தை நெக்ஸான் பெற்றது. இதனை தொடர்ந்து அல்ட்ராஸ், டியாகோ மற்றும் டிகோர் என வரிசையாக டாடா கார்கள் இந்த மதிப்பை பெற்று விற்பனையில் உள்ளன. நெக்ஸானின் பிஎஸ்6 வெர்சனை இந்த ஆண்டு துவக்கத்தில் டாடா நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்தது.

வெறும் மூன்றே வருடங்களில், 1.5 லட்சமாவது நெக்ஸான் காரை வெளியேற்றியது டாடா!!

இதுமட்டுமில்லாமல் புதிய எக்ஸ்.எம்(எஸ்) வேரியண்ட்டையும் ரூ.8.36 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் தயாரிப்பு நிறுவனம் நெக்ஸானில் கொண்டுவந்துள்ளது. இந்த ட்ரிம்மில் எலக்ட்ரிக் சன்ரூஃப், தானியங்கி ஹெட்லைட்கள், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள் மற்றும் கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்பட்டு வருகின்றன.

வெறும் மூன்றே வருடங்களில், 1.5 லட்சமாவது நெக்ஸான் காரை வெளியேற்றியது டாடா!!

இவை மட்டுமின்றி எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி ப்ரோகிராம், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்களுடன் எல்இடி டிஆர்எல்கள், மேடுகளில் தேவையான கண்ட்ரோல், ஓட்டுனர் மற்றும் சக பயணிக்கான காற்றுப்பைகள், ஹார்மனின் கனெக்ட்நெக்ஸ்ட் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அதிக எண்ணிக்கையில் ட்ரைவ் மோட்கள் போன்றவையும் எக்ஸ்.எம்(எஸ்) ட்ரிம்மில் வழங்கப்படுகின்றன.

வெறும் மூன்றே வருடங்களில், 1.5 லட்சமாவது நெக்ஸான் காரை வெளியேற்றியது டாடா!!

காம்பெக்ட்-எஸ்யூவி பிரிவில் நிலைத்து நின்று ஆட உதவும் நெக்ஸான், டாடா மோட்டார்ஸின் முதன்மை தயாரிப்பு என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஏனெனில் கியா சொனெட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் போன்ற புதிய அறிமுகங்களினால் காம்பெக்ட்-எஸ்யூவி கார்களே இந்திய சந்தையில் தற்சமயம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

Most Read Articles

English summary
Tata Motors rolls out the 1,50,000th Nexon – India’s 1st GNCAP 5 Star Rated Car
Story first published: Friday, November 6, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X