Just In
- 1 hr ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 2 hrs ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 3 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 3 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- News
திருத்தணியில் கையில் வெள்ளி வேலுடன் தொண்டர்களுக்கு காட்சி அளித்த மு.க ஸ்டாலின்
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதிக வசதிகளுடன் மிக சவாலான விலையில் டாடா நெக்ஸான் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!
மிக குறைவான விலையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட டாடா நெக்ஸான் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த புதிய வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட பல முக்கிய விபரங்களை தொடர்ந்து காணலாம்.

இந்தியாவில் 4 மீட்டருக்கும் குறைவான விலை கொண்ட எஸ்யூவி மாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்தியாவில் அதிக வர்த்தக வளம் மிக்க செக்மென்ட்டுகளில் ஒன்றாகவும் இந்த காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கான விற்பனை தரவுகள் சான்றாக உள்ளன. இதனால், இந்த செக்மென்ட்டில் ஏற்கனவே பல மாடல்கள் இருக்கும் நிலையில், அதிக மதிப்புவாய்ந்த பல புதிய மாடல்களும் அடுத்த ஓரிரு மாதங்களில் வர இருக்கின்றன.

இதனை மனதில் வைத்து, சந்தைப் போட்டியை சமாளித்து வாடிக்கையாளர்களை கவரும் விஷயங்களில் கார் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், நெக்ஸான் எஸ்யூவியின் மதிப்பை உயர்த்தும் விதத்தில் புதிய வேரியண்ட்டை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.

டாடா நெக்ஸான் XM(S) என்ற பெயரில் இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, டாப் வேரியண்ட்டில் மட்டுமே கொடுக்கப்படும் சில முக்கிய விஷயங்களை மிக குறைவான பட்ஜெட்டில் பெறும் விதத்தில் இதன் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி, இந்த புதிய வேரியண்ட்டில் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள் ஆகியவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நெக்ஸான் XM வேரியண்ட்டில் வழங்கப்படும் அனைத்து வசதிகளும் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது, ஏற்கனவே எக்ஸ்எம் வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டியூவல் ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹார்மன் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் கனெக்ட்நெக்ஸ்ட் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மூன்று விதமான டிரைவிங் மோடுகள் ஆகியவை உள்ளன.

டாடா நெக்ஸான் காரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய எக்ஸ்எம்(எஸ்) வேரியண்ட் அறிமுகம் குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவு சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவர் விவேக் ஸ்ரீவத்சா கூறுகையில்," டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெருமைமிகு தயாரிப்புகளில் ஒன்றாக நெக்ஸான் எஸ்யூவி உள்ளது. 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட குளோபல் என்சிஏபி அமைப்பின் பாதுகாப்பு தர சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாடலாக உள்ளது.

டிசைன், ஓட்டுதல் தரம் என அனைத்திலும் சிறந்த மாடல் என்று வாடிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களிடம் இருந்து நன்மதிப்பை பெற்றது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில், தொடர்ந்து எங்களது கார் மாடல்களை மேம்படுத்தவும், கூடுதல் அம்சங்களை வழங்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். அதன் அடிப்படையில், இந்த புதிய நெக்ஸான் வேரியண்ட் அதிகபட்ச வசதிகளுடன் மிக சவாலான விலையில் அறிமுகப்படுத்தி உள்ளோம்," என்று கூறினார்.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளின் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் இந்த புதிய வேரியண்ட்டை வாங்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு உள்ளது. பெட்ரோல் மேனுவல் எக்ஸ்எம் எஸ் வேரியண்ட்டிற்கு ரூ.8.36 லட்சமும், ஏஎம்டி எக்ஸ்எம் எஸ் வேரியண்ட்டிற்கு ரூ.8.96 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோன்று, டீசல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட எக்ஸ்எம் எஸ் வேரியண்ட்டிற்கு ரூ.9.70 லட்சமும், ஏஎம்டி வேரியண்ட்டிற்கு ரூ.10.30 லட்சமும் விலை நிர்ணயிக்ப்பட்டு இருக்கிறது. இந்த புதிய வேரியண்ட்டானது போட்டியாளர்களுக்கு மிக கடும் சவால் தரும் வகையில் அதிகபட்ச வசதிகளுடன் அதிக மதிப்பு கொண்டதாக இருக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் என்று நம்பலாம்.