டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது? உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ

டாடா ஹெரியரின் புதிய டிவிசி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது? உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ

இந்தியாவில் பிரபலமான காம்பெக்ட் க்ராஸ்ஓவர் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக உள்ள டாடா ஹெரியருக்கு ஹூண்டாய் க்ரெட்டா, எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் போன்ற எஸ்யூவி கார்கள் முக்கிய போட்டியாக விளங்குகின்றன.

டாடா நிறுவனத்தால் முதன்முதலாக கடந்த 2015ஆம் ஆண்டு ஹெரியர் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின் இந்த வருட துவக்கத்தில் ஹெரியரின் அப்டேட் வெர்சன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டிவிசி வீடியோ இதோ...

டாடா மோட்டார்ஸின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் ஹெரியரில் வழங்கப்படும் பனோராமிக் சன்ரூஃப் முக்கிய அம்சமாக காட்டப்பட்டுள்ளது. முன்பு டாப் ட்ரிம்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த பனோராமிக் சன்ரூஃப் தற்போது எக்ஸ்டி+ ட்ரிம்மிலும் வழங்கப்படுகிறது.

டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது? உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ

வழக்கமான எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் ட்ரிம்களுக்கு மேலே எக்ஸ்டி+ ட்ரிம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அப்டேட் செய்யப்பட்ட ஹெரியரில் ரீடிசைனில் அலாய் சக்கரங்கள், புதிய நிறத்தேர்வுகள், புதிய டிசைனில் பின்புறம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது? உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ

உட்புறத்தில் இந்த காரில் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, பெரிய அளவில் சன்ரூஃப் மற்றும் தானாக ஒளி மங்கக்கூடிய ஐஆர்விஎம்கள் போன்றவை பொருத்தப்படுகின்றன. இதுமட்டுமின்றி தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், லெதர் உள்ளமைவு போன்றவற்றையும் முந்தைய வெர்சனில் இருந்து கார் பெற்றுள்ளது.

டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது? உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ

ஆனால் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட போது கார் கொண்டிருந்த ஆட்டோமேட்டிக் சன்ரூஃப்-ஐ அப்டேட் ஹெரியர் இழந்தது. இருப்பினும் ஆட்டோமேட்டிக் ஹெரியருக்கு சந்தையில் தேவை அதிகரிக்கவே ஹூண்டாயின் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டரை டாடா நிறுவனம் இந்த எஸ்யூவி காரில் கொண்டுவந்தது.

டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது? உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ

பிஎஸ்6 தரத்தில் இந்த காரில் வழங்கப்படுகின்ற 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 170 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. அதுவே இந்த டீசல் என்ஜின் பிஎஸ்4 வெர்சனில் 140 பிஎச்பி பவரை வெளிப்படுத்தியது.

டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது? உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ

டாடா ஹெரியரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.13.69 லட்சத்தில் இருந்து ரூ.16.25 லட்சம் வரையில் உள்ளது. அதேநேரம் இந்த டிவிசி வீடியோவில் காட்டப்படும் எக்ஸ்டி+ ட்ரிம்மின் விலை ரூ.17.20 லட்சமாக உள்ளது.

Most Read Articles

English summary
Tata Harrier new TVC released Check it out
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X