Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 6 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாதுகாப்பில் எங்க கார்தான் பெஸ்ட்... அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக்கிற்கு புது டிவிசி வெளியிட்ட டாடா
டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காருக்கு, புதிய டிவிசி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிறப்பான கட்டுமான தரம் கொண்ட பாதுகாப்பான கார்களை சந்தைக்கு கொண்டு வருவதால், இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புகழ்பெற்று விளங்குகிறது. பாதுகாப்பு என்ற மிக முக்கியமான விஷயத்தை மையமாக வைத்துதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களை விளம்பரப்படுத்துகிறது. டாடா நிறுவனத்திடம் இருந்து வெளிவந்துள்ள புதிய கார்களில் ஒன்று அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக்.

நடப்பாண்டு தொடக்கத்தில்தான் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரை டாடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மற்ற டாடா கார்களை போலவே, அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக்கும் புதிய டிசைன் மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறப்பான கட்டுமான தரம் காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த கார் புகழ்பெற்று விளங்குகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் டாடா நிறுவனம் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள கார் அல்ட்ராஸ்தான். மாருதி சுஸுகி பலேனோ, சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹூண்டாய் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுடன் டாடா அல்ட்ராஸ் போட்டியிட்டு வருகிறது.
புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ரிவியூ... ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? விரிவாக அலசும் வீடியோ!
இந்த சூழலில், அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காருக்கு டாடா நிறுவனம் தற்போது புதிய டிவிசி ஒன்றை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி இந்த டிவிசி உருவாக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் சேனலில் இந்த காணொளி பதிவேற்றப்பட்டுள்ளது. அல்ட்ராஸ் காரின் டிசைன் மற்றும் வசதிகளை காட்டுவதுடன் இந்த காணொளி தொடங்குகிறது.

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திரங்களை பெற்ற டாடா நிறுவனத்தின் இரண்டாவது கார் அல்ட்ராஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக்கிற்கு முன்னதாக டாடா நிறுவனத்தின் நெக்ஸான் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திரங்களை பெற்றிருந்தது.

அதை தொடர்ந்து டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரும் பாதுகாப்பில் முழுமையாக 5 நட்சத்திரங்களை அள்ளியது. இதன் மூலம் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டிலேயே மிகவும் பாதுகாப்பான கார் என்ற பெருமையை டாடா அல்ட்ராஸ் பெற்றுள்ளது. பாதுகாப்பு தவிர டாடா அல்ட்ராஸ் காரில் வழங்கப்படும் வசதிகள் பற்றியும் இந்த புதிய டிவிசியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதில், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ஆம்பியண்ட் லைட்டிங், டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் ஸ்க்ரீன் மற்றும் மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் ஆகியவை முக்கியமானவை. இம்பேக்ட் 2.0 டிசைன் தத்துவத்தை டாடா அல்ட்ராஸ் பெற்றுள்ளது. எனவே பாதுகாப்பு மட்டுமின்றி, இதன் டிசைனும் கவர்ந்திழுக்க கூடிய வகையில் அமைந்துள்ளது.
இதனிடையே டாடா அல்ட்ராஸ் காரின் டர்போ பெட்ரோல் வெர்ஷன் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இந்த புதிய வேரியண்ட் நடப்பாண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு காரை டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கும் என தெரிகிறது.