அல்ட்ராஸ் டர்போ மாடலுக்காக பிரத்யேக டீசர் வீடியோ வெளியிட்ட டாடா... அட்டகாசமா இருக்கு!!

அல்ட்ராஸ் டர்போ வேரியண்டின் அறிமுகத்தை முன்னிட்டு டாடா நிறுவனம் இக்காருக்கான பிரத்யேக டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அல்ட்ராஸ் டர்போ மாடலுக்காக பிரத்யேக டீசர் வீடியோ வெளியிட்ட டாடா... அட்டகாசமா இருக்கு!!

டாடா நிறுவனம் தனது அல்ட்ராஸ் மாடலில் புதிய டர்போ எஞ்ஜின் தேர்வை வழங்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த தகவல் டாடா வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், ஆவலையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், புதிய எஞ்ஜின்தேர்வு கொண்ட காரின் அறிமுகத்தை முன்னிட்டு டீசர் வீடியோ ஒன்றை அது வெளியிட்டிருக்கின்றது. மேலும், இக்காரின் அறிமுக தேதியும் தற்போது வெளியாகியுள்ளது.

அல்ட்ராஸ் டர்போ மாடலுக்காக பிரத்யேக டீசர் வீடியோ வெளியிட்ட டாடா... அட்டகாசமா இருக்கு!!

முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோரின் நடிப்பில் வெளி வரவிருக்கும் மாஸ்டர் பட ரிலீஸ் தேதி அன்றே இக்கார் விற்பனைக்கு வரவிருக்கின்றது. ஆமாங்க, வரும் ஜனவரி 13ம் தேதி அன்றே டாடா அல்ட்ராஸ் டர்போ விற்பனைக்கு வர இருக்கின்றது. இதனை தற்போது வெளியாகியிருக்கும் டீசர் வீடியோ மற்றும் தகவல்கள் உறுதி செய்திருக்கின்றன.

ஆகையால், ஜனவரி 13ம் தேதி எதிர்நோக்கி விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி டாடா கார் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். புதிய எஞ்ஜின் தேர்வில் வரும் டாடா அல்ட்ராஸ் இதுவரை எந்தவொரு டாடா காரும் பெறாத புத்தம் புதிய மரினா நீல நிறத்தைப் பெறவிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இக்காரை வாங்குவோர் இரட்டை பலனை அடைய முடியும் என தெரிகின்றது.

அல்ட்ராஸ் டர்போ மாடலுக்காக பிரத்யேக டீசர் வீடியோ வெளியிட்ட டாடா... அட்டகாசமா இருக்கு!!

டாடா அல்ட்ராஸ் ஓர் பிரீமியம் ஹேட்ச்பேக் காராகும். ஆகையால், இதில் எண்ணற்ற சொகுசு மற்றும் பிரீமியம் வசதிகளை நம்மால் காண முடிகின்றது. இத்துடன், இது 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற காரும்கூட. இதன் விலை பற்றிய தகவல் இன்னும் வெளிவரவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அல்ட்ராஸ் டர்போ மாடலுக்காக பிரத்யேக டீசர் வீடியோ வெளியிட்ட டாடா... அட்டகாசமா இருக்கு!!

தற்போது விற்பனையில் இருக்கும் டாடா அல்ட்ராஸ் கார் 5.44 லட்சம் ரூபாய் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும் அதிகபட்ச விலையாக ரூ. 7.89 லட்சம் வரையில் இது விற்கப்படுகின்றது. இவையிரண்டுமே எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

அல்ட்ராஸ் டர்போ மாடலுக்காக பிரத்யேக டீசர் வீடியோ வெளியிட்ட டாடா... அட்டகாசமா இருக்கு!!

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, டாடா அல்ட்ராஸ் காரின் டர்போ வேரியண்ட் 4 விதமா தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது. அனைத்து பெட்ரோல் எஞ்ஜினைக் கொண்டதாக மட்டுமே இருக்கும் என அந்த தகவல் கூறுகின்றது. ஆகையால், இது இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் ஐ10 டர்போ, மாருதி பலினோ, ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Tata Revealed New officiall teaser for Altroz Turbo. Read In Tamil.
Story first published: Thursday, December 31, 2020, 16:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X