சியரா எஸ்யூவியை வேற லெவலுக்கு மாற்றிக் காட்டிய டாடா மோட்டார்ஸ்!

பழைய சியரா எஸ்யூவியை மனதில் வைத்து ஒரு அசத்தலான எலெக்ட்ரிக் எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த புதிய கார் பற்றிய விபரங்கள், படங்களை இந்த ெய்தியில் காணலாம்.

டாடா சியரா அடிப்படையில் புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட்!!

டாடா நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடலாக உருவாக்கப்பட்ட சியரா இந்திய ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மாடல். டாடா சியரா என்று இப்போது காதில் விழுந்தாலும், அவர்களுக்கு பொறி தட்டும். அந்த அளவுக்கு இந்திய கார் பிரியர்களுடன் நெஞ்சில் பதிந்துவிட்ட சியரா பெயரில் ஒரு அசத்தலான மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் பார்வைக்கு நிறுத்தி உள்ளது.

டாடா சியரா அடிப்படையில் புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட்!!

பழைய சியரா எஸ்யூவி போலவே, மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை பெற்றிருக்கும் இந்த புதிய கான்செப்ட் மாடலானது மின்சார மாடலாக உருவாக்கப்பட்டு இருப்பது முக்கிய வித்தியாசம். மற்றபடி, பழைய சியரா காரில் இருப்பது போன்று, பி பில்லர் மற்றும் சி பில்லர்களுக்கு இடையில் கூரை மற்றும் ஜன்னல்கள் ஒரே கண்ணாடியால் கொடுக்கப்பட்ட தோற்றத்துடன் வந்துள்ளது.

டாடா சியரா அடிப்படையில் புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட்!!

முகப்பு மிக பிரம்மாண்டமாக இருக்கிறது. அதேநேரத்தில், மெல்லிய எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எலெக்ட்ரிக் கார்களுக்கே உரித்தான மூடிய முன்பகுதி அமைப்பு, கம்பீரமான பம்பர் அமைப்பு ஆகியவை குறிப்பிடத்தக் விஷயங்களாக இருக்கின்றன.

டாடா சியரா அடிப்படையில் புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட்!!

இந்த காரில் மிகவும் வலிமையான பாடி கிளாடிங் சட்டங்கள், டியூவல் டோன் அலாய் வீல்கள், மெல்லிய எல்இடி லைட் பாருடன் டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை நவீன யுக கார் மாடலாக டாடா சியரா மாறி இருக்கிறது.

டாடா சியரா அடிப்படையில் புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட்!!

வரும் காலத்தில் இதன் அடிப்படையில் ஒரு ஆஃப்ரோடு எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி அறிமுகப்படுத்தினால், இது பழைய டாடா சியரா வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல, ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியிலும் அதிக வரவேற்பை பெறும்.

டாடா சியரா அடிப்படையில் புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட்!!

இந்த புதிய மாடலை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்வது பற்றி டாடா மோட்டார்ஸ் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், நிச்சயம் இதன் அடிப்படையில் ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா சியரா அடிப்படையில் புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட்!!

பழைய டாடா சியரா எஸ்யூவி 1991ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டெல்கோலைன் பிக் அப் டிரக் அடிப்படையில் சியரா எஸ்யூவி உருவாக்கப்பட்டது. டாடா சியரா எஸ்யூவிக்கு அந்த காலத்தில் கார் பிரியர்கள் மத்தியில் தனி வரவேற்பும், வாடிக்கையாளர் வட்டமும் இருந்தது. நவீன யுக எஸ்யூவி மாடல்களால் இதற்கான மவுசு படிப்படியாக குறைந்துபோனது.

Most Read Articles
English summary
Tata Motors has showcased a new electric concept SUV called the Sierra at the 2020 Auto Expo.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X