மூன்று கார்களின் கலவையில் ஒரு எஸ்யூவி கார்... மீண்டும் மாஸ் காட்டியுள்ள கேரள சேத்தன்கள்...

டாடா சியாரா, மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் மிட்சுபிஷி பஜேரோ என்ற மூன்று பிரபலமான கார்களை இணைத்து கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட கார் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த கார்டாக் செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மூன்று கார்களின் கலவையில் ஒரு எஸ்யூவி கார்... மீண்டும் மாஸ் காட்டியுள்ள கேரள சேத்தன்கள்...

கார் மாடிஃபிகேஷன், வளர்ந்த நாடுகளில் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவிலும் கார்களை கஸ்டமைஸ்ட் செய்வோர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் தான் உள்ளது. இந்த வகையில் பல கஸ்டமைஸ்ட் கார்கள் மற்றும் பைக்குகளை பற்றிய தகவல்களை நாம் நமது செய்தி தளத்தில் பார்த்திருப்போம்.

மூன்று கார்களின் கலவையில் ஒரு எஸ்யூவி கார்... மீண்டும் மாஸ் காட்டியுள்ள கேரள சேத்தன்கள்...

அவற்றில் ஒரு சிலர் கார்களின் முன் மற்றும் பின்புற தோற்றத்தை மட்டும் சற்று மாற்றியமைத்திருப்பர். அல்லது வெளியே தவிர்த்து உட்புற வசதிகளை அதிகரித்து இருப்பர். ஒரு சிலரோ இன்னும் ஆழமாக இறங்கி காரின் இயந்திர பாகங்கள் உள்பட மொத்த காரையும் தலைக்கீழாக புரட்டி போட்டு இருப்பர்.

மூன்று கார்களின் கலவையில் ஒரு எஸ்யூவி கார்... மீண்டும் மாஸ் காட்டியுள்ள கேரள சேத்தன்கள்...

இதில் மொத்தமாக முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட காரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். படத்தில் உள்ள காரை பார்க்கும்போது இந்திய சந்தையில் ஒரு காலத்தில் ஆட்சி செய்த டாடா சியாரா, மிட்சுபிஷி பஜேரோ மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல்களில் ஏதேனும் ஒன்றின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக இருக்கும் என்று தான் பலர் நினைத்திருப்பீர்கள்.

மூன்று கார்களின் கலவையில் ஒரு எஸ்யூவி கார்... மீண்டும் மாஸ் காட்டியுள்ள கேரள சேத்தன்கள்...

ஆனால் இந்த மாடிஃபைடு கார் மேற்கூறப்பட்ட மூன்று கார்களின் கலவையாகும். கடவுளின் தேசமான கேரளாவை சேர்ந்தது இந்த கார். மலையாளிகள் வாகனங்களின் மாடிஃபிகேஷன் பணிகளில் அதிகம் ஆர்வம் கொண்டவர்கள் என்பது நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய போவதில்லை.

மூன்று கார்களின் கலவையில் ஒரு எஸ்யூவி கார்... மீண்டும் மாஸ் காட்டியுள்ள கேரள சேத்தன்கள்...

ஒரு கோணத்தில் பார்த்தால் இந்த காரில் மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் மிட்சுபிஷி பஜேரோ மாடல்களை இருப்பதை அறிய முடியும். ஆனால் மறு கோணத்தில் பார்த்தால் தான் இந்த எஸ்யூவி கஸ்டமைஸ்ட் காரில் டாடா சியாரா ஒளிந்திருப்பது தெரியவரும்.

மூன்று கார்களின் கலவையில் ஒரு எஸ்யூவி கார்... மீண்டும் மாஸ் காட்டியுள்ள கேரள சேத்தன்கள்...

குறிப்பாக காரின் பக்கவாட்டை பார்க்கும்போது டாடா சியாரா நமது கண்ணுக்கு தெரியும். அதேபோல் முன்புறத்தை பார்த்தவுடன் மஹிந்திரா ஸ்கார்பியோ என்றும், பெயிண்ட் அமைப்பை பார்த்தவுடன் மிட்சுபிஷி பஜேரோ என்றும் உங்களால் எளிதாக அடையாளப்படுத்த முடியும்.

மூன்று கார்களின் கலவையில் ஒரு எஸ்யூவி கார்... மீண்டும் மாஸ் காட்டியுள்ள கேரள சேத்தன்கள்...

ஆனால் ஆட்டோமொபைல் துறையை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த மாடிஃபைடு காரில் என்னென்ன கார்கள் கலந்துள்ளன என்பதை பற்றி தெரிய வாய்ப்பில்லை. மற்றப்படி இந்த மாடிஃபைடு காரில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் அமைப்பை பற்றி உறுதியாக கூற முடியாது. இதன் பதிவு விவரங்களில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று கார்களின் கலவையில் ஒரு எஸ்யூவி கார்... மீண்டும் மாஸ் காட்டியுள்ள கேரள சேத்தன்கள்...

இவ்வாறு முழுவதும் மாற்றியமைக்கப்பட்ட கார்களுக்கு பதிவு சான்றிதழ்களை வாங்குவது அவசியமானதாகும். ஏனெனில் தகுந்த ஆவணங்கள் இன்றி இவ்வாறான மாடிஃபைடு கார் இயக்கத்தில் உள்ளதை மோட்டார் வாகன துறை அறிய நேர்ந்தால் எந்தவொரு கருணையும் இன்றி கார் பறிமுதல் தான்.

Most Read Articles

English summary
Tata Sierra, Mahindra Scorpio & Mitsubishi Pajero: Three SUVs in one SUV
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X