விநாயகர் சதுர்த்தி நன்னாளில்... நெக்ஸான் இவி காரை டெலிவிரி செய்த டாடா நிறுவன தலைவர்...

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் நெக்ஸான் இவி கார் ஒன்றை நிறுவனத்தின் சேர்மன் என்.சந்திரசேகரன் அவர்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டெலிவிரி செய்து பணியாளர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

விநாயகர் சதுர்த்தி நன்னாளில்... நெக்ஸான் இவி காரை டெலிவிரி செய்த டாடா நிறுவன தலைவர்...

முன்னதாக சமீபத்தில் தான் டாடா நிறுவனம் நெக்ஸான் இவி காரின் விற்பனையில் 1000வது மாதிரிகளை கடந்த சாதனை படைத்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்த டெலிவிரி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி நன்னாளில்... நெக்ஸான் இவி காரை டெலிவிரி செய்த டாடா நிறுவன தலைவர்...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் இவி காரை மாதத்திற்கு ரூ.41,900 என்ற ஆரம்ப விலையிலும் புதிய எலக்ட்ரிக் வாகன சந்தா திட்டத்தின்படி வழங்குகிறது. நெக்ஸான் இவி கார் முதன்முறையாக இந்தியாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

விநாயகர் சதுர்த்தி நன்னாளில்... நெக்ஸான் இவி காரை டெலிவிரி செய்த டாடா நிறுவன தலைவர்...

3-பேஸ் நிரத்தர காந்தக ஒத்திசைவு மோட்டார் உடன் விற்பனை செய்யப்பட்டுவரும் இந்த எலக்ட்ரிக் காரில் ஐபி67 சான்று பெற்ற 30.2 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது. ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகின்ற இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 129 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

விநாயகர் சதுர்த்தி நன்னாளில்... நெக்ஸான் இவி காரை டெலிவிரி செய்த டாடா நிறுவன தலைவர்...

இதன் பேட்டரியை விரைவான சார்ஜர் மூலம் சார்ஜ் ஏற்றினால் 0-வில் இருந்து 80 சதவீதம் நிறைய 60 நிமிடங்கள், அதாவது 1 மணிநேரம் தேவைப்படும். அதுவே வழக்கமான சார்ஜர் பேட்டரியின் சார்ஜை 20%-ல் இருந்து 80% வரை நிரப்ப 8 மணிநேரங்களை எடுத்துக்கொள்ளும்.

விநாயகர் சதுர்த்தி நன்னாளில்... நெக்ஸான் இவி காரை டெலிவிரி செய்த டாடா நிறுவன தலைவர்...

டாடா நெக்ஸான் இவி காரின் ரேஞ்ச் 312கிமீ என ஏஆர்ஏஐ அமைப்பு சான்றழித்துள்ளது. காரின் வெளிப்புறத்தில் சிறப்பம்சங்களாக ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், கார்னரிங் திறன் உடன் ஃபாக் விளக்குகள், 16 இன்ச் டைமண்ட் அலாய் சக்கரங்கள் மற்றும் இரட்டை நிறங்களில் மேற்கூரை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தி நன்னாளில்... நெக்ஸான் இவி காரை டெலிவிரி செய்த டாடா நிறுவன தலைவர்...

இதன் உட்புற கேபின் ப்ரீமியம் தரத்திலான லெதர் இருக்கைகள், 7 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், புஷ்-பொத்தான் ஸ்டார்ட், லெதர் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரம் மற்றும் சன்ரூஃப் போன்றவற்றை கொண்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி நன்னாளில்... நெக்ஸான் இவி காரை டெலிவிரி செய்த டாடா நிறுவன தலைவர்...

எக்ஸ்எம், எக்ஸ்இசட்+ மற்றும் எக்ஸ்இசட்+ லக்ஸ் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டு வரும் டாடா நெக்ஸான் இவி காரின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.13.99 லட்சத்தில் இருந்து ரூ.15.99 லட்சம் வரையில் உள்ளது. நெக்ஸான் இவி காருக்கு வரவேற்பு அதிகரித்து வருவதை மறுப்பதற்கில்லை, அத்தகைய கார் இந்த நல்ல நாளில் அதன் தயாரிப்பாளரிடமே சென்றடைந்து இருப்பது உண்மையில் நல்ல சகுணமே.

Most Read Articles

English summary
Tata Nexon EV Delivered To Chairman
Story first published: Sunday, August 23, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X