டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் பிஎஸ்-6 கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

டாடா டியாகோ உள்ளிட்ட மூன்று கார்களின் பிஎஸ்-6 மாடல்களுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் பிஎஸ்-6 கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

வரும் ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கும் நிலையில், கார், பைக் நிறுவனங்கள் பிஎஸ்-6 மாடல்களை சந்தைப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த வரிசையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிஎஸ்-6 மாடல்களை வரிசை கட்ட ஆயத்தமாகி உள்ளது.

டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் பிஎஸ்-6 கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

டியாகோ, டிகோர் மற்றும் நெக்ஸான் கார்களின் பிஎஸ்-6 மாடல்களுக்கு புக்கிங் பணிகளை துவங்கி இருக்கிறது டாடா மோட்டார்ஸ்.ரூ.11,000 முன்பணத்துடன் மூன்று மாடல்களுக்கும் முன்பதிவு ஏற்கப்படுகிறது.

டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் பிஎஸ்-6 கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

அடுத்த மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் டாடா டியோகோ, டிகோர் மற்றும் நெக்ஸான் கார்களின் பிஎஸ்-6 மாடல்கள் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் பிஎஸ்-6 கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

டாடா டியாகோ காரில் பிஎஸ்-6 எஞ்சின் மட்டுமின்றி, கூடுதலாக பல சிறப்பம்சங்களும் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, புதிய பொலிவுடன் வர இருப்பதாக தெரிகிறது.

டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் பிஎஸ்-6 கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

வடிவமைப்பில் மாற்றங்கள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் பிஎஸ்-6 கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

டாடா டியாகோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக வர இருக்கிறது. இந்த எஞ்சின் 83 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்படும்.

டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் பிஎஸ்-6 கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

டாடா டிகோர் காரின் பிஎஸ்-6 மாடலிலும் வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களை எதிர்பார்க்கலாம். இந்த காரில் எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய பம்பர் அமைப்பு, பனி விளக்குளுடன் மாற்றம் கண்டிருக்கும்.

டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் பிஎஸ்-6 கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

அதேபோன்று, உட்புறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மென்மையான உணர்வை தரும் 7.0 அங்குல தொடுதிரையுடன் சாதனம், 8 ஸ்பீக்கர்களுடன் ஹார்மன் ஆடியோ சிஸ்டம் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் பிஎஸ்-6 கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

டாடா டிகோர் பிஎஸ்-6 மாடலில் 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். டியாகோ காரில் இருப்பது போன்றே 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது. டீசல் மாடல்களில் வராது.

டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் பிஎஸ்-6 கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

அடுத்து, டாடா நெக்ஸான் எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடலிலும் பல்வேறு கூடுதல் அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய க்ரில் அமைப்பு, பனி விளக்குகள் அறையுடன் முக அமைப்பின் பொலிவு கூட்டப்பட்டு இருக்கிறது.

டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் பிஎஸ்-6 கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவை பிஎஸ்-6 நிகரான தரத்துடன் வர இருக்கின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் பிஎஸ்-6 கார்களுக்கு முன்பதிவு துவங்கியது

இந்த காரிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கலாம். இதனிடையே, டாடா நெக்ஸான் பிஎஸ்-6 மாடலின் விலை கணிசமாக உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Most Read Articles
English summary
Mumbai based Tata Motors has just announced that it has opened bookings for its new products portfolio. The company has opened bookings for refreshed, BS6 compliant models of the Tiago, the Tigor, and the Tata Nexon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X