டாடாவின் கவனம் இனி எலக்ட்ரிக் கார்களின் மீதுதான் போல!! டிகோர் இவி மும்பையில் சோதனை ஓட்டம்

முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் டாடா டிகோர் செடானின் எலக்ட்ரிக் வெர்சன் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடாவின் கவனம் இனி எலக்ட்ரிக் கார்களின் மீதுதான் போல!! டிகோர் இவி மும்பையில் சோதனை ஓட்டம்

மும்பையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்களை கார்அண்ட்பைக் செய்திதளம் வெளியிட்டுள்ளது. இந்த படங்களில் கார் முழுவதும் மறைக்கப்பட்டுள்ளதால் தோற்றத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

டாடாவின் கவனம் இனி எலக்ட்ரிக் கார்களின் மீதுதான் போல!! டிகோர் இவி மும்பையில் சோதனை ஓட்டம்

சோதனை காரில் இரும்பு சக்கரங்கள் மற்றும் சக்கர மூடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இது விலை குறைவான வேரியண்ட்டாக இருக்கும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் செடான் காரின் அப்டேட் செய்யப்பட்ட இவி வெர்சனை தொடர்ந்து பொது சாலையில் சோதித்து வருகிறது.

டாடாவின் கவனம் இனி எலக்ட்ரிக் கார்களின் மீதுதான் போல!! டிகோர் இவி மும்பையில் சோதனை ஓட்டம்

இந்த வகையில் சமீபத்தில் வெளியாகியிருந்த ஸ்பை படங்களில் டிகோர் எலக்ட்ரிக் ஃபேஸ்லிஃப்ட் காரும் பெரும்பான்மையாக அதன் பெட்ரோல் வெர்சனையே ஒத்து காணப்படுகிறது. இதனால் இந்த இவி காரிலும் பளபளப்பான கருப்பு நிற க்ரில் அமைப்பை எதிர்பார்க்கலாம்.

டாடாவின் கவனம் இனி எலக்ட்ரிக் கார்களின் மீதுதான் போல!! டிகோர் இவி மும்பையில் சோதனை ஓட்டம்

இருப்பினும் புதிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டிஆர்எல் விளக்குகளுடன் காரின் முன்பக்கம் கூர்மையானதாக மாற்றப்பட வாய்ப்புண்டு. இவற்றுடன் டிகோர் எலக்ட்ரிக் கார் அகலமான ஏர்-டேம் உடன் புதிய பம்பர் மற்றும் மூடுபனி விளக்குகளுக்கு ஸ்டைலிஷான் கிடைமட்ட ஹௌசிங் உள்ளிட்டவற்றையும் பெற்று வரவுள்ளது.

டாடாவின் கவனம் இனி எலக்ட்ரிக் கார்களின் மீதுதான் போல!! டிகோர் இவி மும்பையில் சோதனை ஓட்டம்

ஸ்போர்டியான தோற்றத்திற்கு இரு நிறங்களில் அலாய் சக்கரங்களும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. வழக்கமான பெட்ரோல் வெர்சனில் இருந்து வேறுபடுவதற்காக காரின் பின்பக்கத்தில் இவி முத்திரை வழங்கப்படும்.

டாடாவின் கவனம் இனி எலக்ட்ரிக் கார்களின் மீதுதான் போல!! டிகோர் இவி மும்பையில் சோதனை ஓட்டம்

உட்புறத்தில் வித்தியாசமான நிறங்களுடன் சில கூடுதல் தொழிற்நுட்ப வசதிகள் கொண்டுவரப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. இதன்படி, அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரில் இருந்து 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரத்தை டிகோர் இவி ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுவரலாம்.

டாடாவின் கவனம் இனி எலக்ட்ரிக் கார்களின் மீதுதான் போல!! டிகோர் இவி மும்பையில் சோதனை ஓட்டம்

இதுமட்டுமின்றி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உடன் அப்டேட் செய்யப்பட்ட தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஓட்டுனருக்கு பல விதமான தகவல்களை வழங்கக்கூடிய திரை, இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், ஹார்மன் ஆடியோ சிஸ்டம் போன்றவையும் இந்த புதிய டாடா இவி காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

டாடாவின் கவனம் இனி எலக்ட்ரிக் கார்களின் மீதுதான் போல!! டிகோர் இவி மும்பையில் சோதனை ஓட்டம்

டாடாவின் வழக்கமான எலக்ட்ரிக் மோட்டாரே டிகோர் இவி காரிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் ஜிப்ட்ரான் எலக்ட்ரிக் தொழிற்நுட்பத்தை எதிர்பார்க்க முடியாது. டாடாவின் எலக்ட்ரிக் மோட்டார் 21.5kWh பேட்டரி தொகுப்புடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அதிகப்பட்சமாக 40 பிஎச்பி மற்றும் 105 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

டாடாவின் கவனம் இனி எலக்ட்ரிக் கார்களின் மீதுதான் போல!! டிகோர் இவி மும்பையில் சோதனை ஓட்டம்

இந்த இவி எலக்ட்ரிக் செடான் கார் சிங்கிள்-முழு சார்ஜில் 213கிமீ தூரம் வரையில் அதிகப்பட்சமாக இயங்கும் என்று ஏஆர்ஏஐ அமைப்பு கூறியுள்ளது. எக்ஸ்ஷோரூம் விலை நிச்சயம் தற்போதைய ரூ.9.58 லட்சத்தை காட்டிலும் சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.

Most Read Articles

English summary
Tata Tigor EV Facelift With Camouflage Spotted Testing Again
Story first published: Thursday, December 24, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X