பயணிகள் வாகன பிரிவில் சந்தையை விரிவுப்படுத்தும் டாடா... விற்பனைக்கு வரவுள்ள ஸ்பெஷல் எடிசன் கார்கள்..

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகனங்களுக்கான இரு ஸ்பெஷல் எடிசன்களின் வர்த்தக முத்திரைகளை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பயணிகள் வாகன பிரிவில் சந்தையை விரிவுப்படுத்தும் டாடா... விற்பனைக்கு வரவுள்ள ஸ்பெஷல் எடிசன் கார்கள்...

கமோ மற்றும் டார்க் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன்கள் வழக்கமான எடிசன்களுடன் விற்பனை செய்யப்படவுள்ளன. பயணிகள் வாகன பிரிவில் தனது சந்தையை அதிகரிக்கும் முயற்சியாக டாடா நிறுவனம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பயணிகள் வாகன பிரிவில் சந்தையை விரிவுப்படுத்தும் டாடா... விற்பனைக்கு வரவுள்ள ஸ்பெஷல் எடிசன் கார்கள்...

இந்த வகையில் தற்போது டாடா நிறுவனத்தால் சொந்தமாக்கப்பட்டுள்ள டார்க் மற்றும் கமோ எடிசன்கள் ஹெரியர், நெக்ஸான், டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ராஸ் என இந்நிறுவனத்தில் இருந்து தற்சமயம் விற்பனையில் உள்ள பெரும்பான்மையான அனைத்து கார்களிலும் கொண்டுவரப்படவுள்ளன.

பயணிகள் வாகன பிரிவில் சந்தையை விரிவுப்படுத்தும் டாடா... விற்பனைக்கு வரவுள்ள ஸ்பெஷல் எடிசன் கார்கள்...

இவை மட்டுமின்றி டாடா விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள ஹெரியரின் 7 இருக்கை வெர்சனான கிராவிட்டாஸிற்கும் சேர்த்துதான் இந்த எடிசன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் டியாகோவிற்கு கடந்த ஆண்டு எக்ஸோ எடிசன் பதிவு செய்யப்பட்டிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

பயணிகள் வாகன பிரிவில் சந்தையை விரிவுப்படுத்தும் டாடா... விற்பனைக்கு வரவுள்ள ஸ்பெஷல் எடிசன் கார்கள்...

இதுகுறித்து ரஷ்லேன் செய்திதளம் வெளியிட்டுள்ள ஆவணங்களில் கமோ எடிசன், அதன் பெயருக்கு ஏற்றாற்போல் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த எடிசனை கொண்டுவரவதற்கான யோசனை, இணையத்தில் இந்த நிறங்களில் வாடிக்கையாளர்களை கவர்ந்த கார் வீடியோவில் இருந்து டாடா நிறுவனத்திற்கு தோன்றியிருக்கலாம்.

பயணிகள் வாகன பிரிவில் சந்தையை விரிவுப்படுத்தும் டாடா... விற்பனைக்கு வரவுள்ள ஸ்பெஷல் எடிசன் கார்கள்...

ஆனால் கமோ எடிசனில் முற்றிலும் வேறுப்பட்ட பெயிண்ட் அமைப்பு வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. அதுவே டார்க் எடிசன்களை பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். டார்க் என்றால் கருப்பு, 90 சதவீத கார் கருப்பு நிறத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பயணிகள் வாகன பிரிவில் சந்தையை விரிவுப்படுத்தும் டாடா... விற்பனைக்கு வரவுள்ள ஸ்பெஷல் எடிசன் கார்கள்...

இந்த காஸ்மெட்டிக் மாற்றங்கள் தற்போதைய டாடா கார்களில் நன்றாகவே பொருந்தக்கூடும். ஏனெனில் அவற்றில் பொதுவாகவே அதிகளவில் க்ரோம்கள் வழங்கப்படுவதில்லை. மற்றப்படி புதிய கமோ மற்றும் டார்க் எடிசன்களை பற்றிய கூடுதல் தகவல்கள் வரும் மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

பயணிகள் வாகன பிரிவில் சந்தையை விரிவுப்படுத்தும் டாடா... விற்பனைக்கு வரவுள்ள ஸ்பெஷல் எடிசன் கார்கள்...

அதேபோல் இந்த எடிசன்கள் கார்களின் வழக்கமான எக்ஸ்ஷோரூம் விலைகளில் இருந்து ரூ.10-30 ஆயிரம் வரையில் அதிகமான விலைகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் ஒன்றும் மட்டும் நிச்சயம் இந்த எடிசன்களில் இயந்திர பாகங்களில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.

பயணிகள் வாகன பிரிவில் சந்தையை விரிவுப்படுத்தும் டாடா... விற்பனைக்கு வரவுள்ள ஸ்பெஷல் எடிசன் கார்கள்...

டாடா நிறுவனத்தில் இருந்து கடைசியாக நெக்ஸான், டியாகோ, டிகோர் மற்றும் ஹெரியர் கார்களின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. இவை தான் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் நிறுவனத்தை காப்பாற்றி வருகின்றன என்பது உண்மை.

Most Read Articles
 
English summary
Tata Camo and Dark Editions Trademark leaks – Tiago, Nexon, Tigor, Altroz, Harrier, Gravitas
Story first published: Thursday, September 10, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X