பாஸ் இது கப்பலா, காரா? சந்தேகத்தை எழுப்பும் டாடா விங்கர்! படத்தை பார்த்து மயங்கினா நாங்க பொறுப்பல்ல!

சாலையில் மிதக்கும் கப்பலாக டாடா நிறுவனத்தின் விங்கர் மினி வேன் மாறியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

பாஸ் இது கப்பலா? இல்ல காரா? சந்தேகத்தை எழுப்பும் டாடா விங்கர்... புகைப்படத்தை பார்த்து மயங்கினா நாங்க பொறுப்பல்ல!

டாடா நிறவனத்தின் பிரபல தயாரிப்பு ஒன்று இதுவரை யாரும் பார்த்திராத அதிக சொகுசு வசதிகளையும், தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்ட வாகனமாக காட்சியளித்துள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இது டாடாவின் தயாரிப்புதானா என்று கேட்குமளவிற்கு அதன் உருவமும், ஸ்டைலும் பல மடங்கு மாற்றத்தைப் பெற்றிருக்கின்றது. இந்த மாற்றத்தை அது மாடிஃபிகேஷன் வாயிலாகவே பெற்றிருக்கின்றது.

பாஸ் இது கப்பலா? இல்ல காரா? சந்தேகத்தை எழுப்பும் டாடா விங்கர்... புகைப்படத்தை பார்த்து மயங்கினா நாங்க பொறுப்பல்ல!

ஆம், டாடா நிறுவனம் இதுமாதிரியான உருவத்திலும், அம்சத்திலும் எந்தவொரு வாகனத்தையும் உற்பத்திச் செய்யவில்லை. இந்த பிரத்யேக மாடிஃபிகேஷனை இந்தியாவை மையமாகக் கொண்டு டிசி2 (டிசி டிசைன்) என்ற நிறுவனமே செய்துள்ளது. இது வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வதில் புகழ்பெற்ற நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. மிக சாதாரண வாகனங்களை பல மடங்கு உயர்ந்த வாகனமாக மாற்றுவதில் இது கைதேர்ந்த நிறுவனம் ஆகும்.

பாஸ் இது கப்பலா? இல்ல காரா? சந்தேகத்தை எழுப்பும் டாடா விங்கர்... புகைப்படத்தை பார்த்து மயங்கினா நாங்க பொறுப்பல்ல!

இதனை உறுதிச் செய்யும் வகையில் பல மாடிஃபிகேஷன்களை அது சந்தையில் செய்துள்ளது. அந்தவகையில் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் காரைட அது நவீன யுகத்திற்கு ஏற்ற காராக மாற்றியது.

இந்நிலையில்தான் டாடா நிறுவனத்தின் விங்கர் எனும் மினி வேனை அது சாலையில் மிதக்கும் கப்பலுக்கு இணையாக மாற்றியமைத்துள்ளது. தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் உருவம் மற்றும் அம்சம் எதையும் டாடாவின் தற்போதைய விங்கர் மினி வேனின் எந்தவொரு வேரியண்டிலும் பார்க்க முடியாது.

பாஸ் இது கப்பலா? இல்ல காரா? சந்தேகத்தை எழுப்பும் டாடா விங்கர்... புகைப்படத்தை பார்த்து மயங்கினா நாங்க பொறுப்பல்ல!

ஏனெனில் அந்தளவிற்கு டாடா விங்கர் தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டுள்ளது. இதனால், பல நட்சத்திர அந்தஸ்தை பெற்ற விடுதியாக அது மாறியிருக்கின்றது. அதேசமயம், ஸ்டார் ஹோட்டல்களையே மிஞ்சுமளவிற்கு அதன் தரம் உயர்ந்திருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் சில ஸ்டார் ஹோட்டல்களில்கூட காணக்கிடைக்காத அம்சங்கள் சில டாடாவின் இந்த விங்கர் மினி வேனில் இடம்பெற்றிருக்கின்றன.

பாஸ் இது கப்பலா? இல்ல காரா? சந்தேகத்தை எழுப்பும் டாடா விங்கர்... புகைப்படத்தை பார்த்து மயங்கினா நாங்க பொறுப்பல்ல!

உருவ மாற்றம்

டிசி 2 நிறுவனம், டாடா விங்கரை மாற்றியமைப்பதற்காக முதலில் அதன் வெளிப்புறத்த தோற்றத்தை மாடிஃபை செய்துள்ளது. இதன்படி, மேற்கூரை நீக்கப்பட்டு சற்று உயரம் கூட்டப்பட்டுள்ளது. இதனால் பாக்ஸ் போன்றிருந்த உருவம் போய் தற்போது கார் போன்ற அமைப்பு கிடைத்துள்ளது. இத்துடன், கவர்ச்சிகரமான லுக்கிற்காக கருப்பு வண்ணம் விங்கரின் அனைத்து பக்கங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

பாஸ் இது கப்பலா? இல்ல காரா? சந்தேகத்தை எழுப்பும் டாடா விங்கர்... புகைப்படத்தை பார்த்து மயங்கினா நாங்க பொறுப்பல்ல!

மேலும், விங்கர் மினி வேனின் ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகளும் அதன் உருவ மாற்றத்திற்கேற்ப மிகவும் ஸ்டைலிஷானவையான மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இது லக்சூரி வாகனங்களில் காணப்படும் மின் விளைக்கு இணையானதைப் போல் காட்சியளிக்கின்றது.

பாஸ் இது கப்பலா? இல்ல காரா? சந்தேகத்தை எழுப்பும் டாடா விங்கர்... புகைப்படத்தை பார்த்து மயங்கினா நாங்க பொறுப்பல்ல!

இத்துடன், விங்கரின் உட்கட்டமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. டாடா விங்கர் ஓர் அடிப்படையில் 14 இருக்கைகள் கொண்ட மாடலாகும். ஆனால், தற்போது உருமாற்றத்தின் விளைவாக வெறும் 3 இருக்கைகள் கொண்ட வாகனமாக அது மாறியுள்ளது. அதிக சொகுசு அம்சத்தை வழங்கும் விதமாக டிசி 2 நிறுவனம் இத்தகைய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதில் ஓர் இருக்கை தனியிருக்கையாகவும், மற்ற இரண்டும் கேப்டைன் இருக்கைப் போன்றும் வழங்கப்பட்டுள்ளன.

பாஸ் இது கப்பலா? இல்ல காரா? சந்தேகத்தை எழுப்பும் டாடா விங்கர்... புகைப்படத்தை பார்த்து மயங்கினா நாங்க பொறுப்பல்ல!

அவை, ராஜாக்களின் அரியணையைப் போல் அதிக சௌகரியத்தை வழங்கக்கூடியதாகும். இத்துடன், மேலும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் கேபினில் டிவி, ஆம்பிசியண்ட் மின் விளக்கு, சிறிய குளிரூட்டும் பெட்டி, உயர் ரக ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாஸ் இது கப்பலா? இல்ல காரா? சந்தேகத்தை எழுப்பும் டாடா விங்கர்... புகைப்படத்தை பார்த்து மயங்கினா நாங்க பொறுப்பல்ல!

ஆனால், இவையனைத்தைக் காட்டிலும் இருக்கை அமைப்பே அனைவரையும் பிரம்மிப்பை ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது. ஏனென்றால், அதில் அதி மிருதுவான இருக்கை பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், லெக் ரெஸ்ட், தேவைக்கேற்ப அமைப்பை மாற்றிக் கொள்ளும் வசதி என பல்வேறு பிரிமியம் வசதிகள் அதில் வழங்கப்பட்டிருக்கின்றது.

பாஸ் இது கப்பலா? இல்ல காரா? சந்தேகத்தை எழுப்பும் டாடா விங்கர்... புகைப்படத்தை பார்த்து மயங்கினா நாங்க பொறுப்பல்ல!

மேலும், எலக்ட்ரானிக் கன்ட்ரோல் கர்டெயின்கள், ஒலி புகா கதவுகள் என நாம் எதிர்பாராத பல்வேறு அம்சங்கள் அதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுபோன்ற பல்வேறு மாற்றங்களால் டாடாவின் விங்கர் மினி வேன் இதுவரை நாம் கண்டிராத விநோதமான விங்கராக மாறியிருக்கின்றது. டாடா நிறுவனம் இதன் புதிய வெர்ஷன் மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போவில்தான் முதல் முறையாக அறிமுகம் செய்தது.

பாஸ் இது கப்பலா? இல்ல காரா? சந்தேகத்தை எழுப்பும் டாடா விங்கர்... புகைப்படத்தை பார்த்து மயங்கினா நாங்க பொறுப்பல்ல!

இதில், 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. அது, பிஎஸ்-6 தரத்திலானதாகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனையும் கொண்டுள்ளது. மேலும், இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனில் கட்டுப்படுத்தப்படுகின்ன்றது.

பாஸ் இது கப்பலா? இல்ல காரா? சந்தேகத்தை எழுப்பும் டாடா விங்கர்... புகைப்படத்தை பார்த்து மயங்கினா நாங்க பொறுப்பல்ல!

தற்போது டிசி2 நிறுவனத்தால் உருமாற்றம் செய்யப்பட்டிருக்கும் டாடா விங்கரிலும் இதே எஞ்ஜின்தான் இடம்பெற்றிருக்கின்றது. இதில், எந்தவொரு மாற்றத்தைும் அந்நிறுவனம் மேற்கொள்ளவில்லை. அதேசமயம், இந்த உருமாற்றத்திற்கு எவ்வளவு செய்யப்பட்டுள்ளது. என்ற தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், டாடா கார் பிரியர்கள் மத்தியில் இந்த கார் அதிக ஆவலைத் தூண்டியுள்ளது. இதுமாதிரியான ஓர் தயாரிப்பை டாடா வெளியிடுமா என்ற ஏக்கத்தை வரவைத்துள்ளது.

Most Read Articles
English summary
Tata Winger Converted Into Luxury Caravan By DC2. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X