சொகுசு இல்லமாக மாற்றப்பட்ட டெம்போ டிராவலர் வேன்... தனிநபர் விமானத்திற்கு இணையான வசதிகள்!

டெம்போ டிராவலர் பயணிகள் வேன் ஒன்று சொகுசு இல்லமாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதன் படங்கள், விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சொகுசு வீடு போல் மாற்றப்பட்ட டெம்போ டிராவலர்... தனிநபர் விமானத்திற்கு இணையான வசதிகள்!

பெரும் பணக்காரர்கள், சினிமா நடிகர்கள் தங்களது பயணத்திற்காக விசேஷமாக மாற்றங்கள் செய்யப்பட்ட நடமாடும் இல்லமாக மாற்றப்பட்ட வாகனங்களை பயன்படுத்துகின்றனர். படுக்கை வசதி, டிவி, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் இவை கட்டமைத்துக் கொடுக்கப்படுகின்றன.

சொகுசு வீடு போல் மாற்றப்பட்ட டெம்போ டிராவலர்... தனிநபர் விமானத்திற்கு இணையான வசதிகள்!

இதில், நடமாடும் இல்லமாக மாற்றுவதற்காக அதிக அளவில் டெம்போ டிராவலர் வேன் பயன்படுத்தப்படுகிறது. போதுமான இடவசதியுடன், நடமாடும் இல்லத்திற்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளுடன் உருவாக்க முடிவதுடன், சொகுசான பயண அனுபவத்தையும் வழங்குகிறது.

சொகுசு வீடு போல் மாற்றப்பட்ட டெம்போ டிராவலர்... தனிநபர் விமானத்திற்கு இணையான வசதிகள்!

இந்த நிலையில், பீதம்பூர் நகரை சேர்ந்த பினாக்கிள் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் ஃபோர்ஸ் டெம்போ டிராவலர் பயணிகள் வேனை சகல வசதிகளுடன் நடமாடும் இல்லமாக மாற்றி உள்ளது.

சொகுசு வீடு போல் மாற்றப்பட்ட டெம்போ டிராவலர்... தனிநபர் விமானத்திற்கு இணையான வசதிகள்!

நீண்ட தூர பயணத்தை அலுப்பில்லாமல் செல்வதற்கும், வெளியூர்களில் தங்குவதற்காக விடுதிகளை தேடி அலைவதையும் தவிர்க்கும் அம்சங்களுடன் இந்த வேன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சொகுசு வீடு போல் மாற்றப்பட்ட டெம்போ டிராவலர்... தனிநபர் விமானத்திற்கு இணையான வசதிகள்!

டெம்போ டிராவலர் பினெஸ்ட்டா என்ற பெயரில் இந்த புதிய நடமாடும் சொகுசு இல்லம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. உட்புறத்தில் மட்டுமின்றி, வெளிப்புறத்திற்கும் விசேஷ பாடி கிட் பொருத்தப்பட்டு டெம்போ டிராவலர் உருவம் வெகுவாக வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது.

சொகுசு வீடு போல் மாற்றப்பட்ட டெம்போ டிராவலர்... தனிநபர் விமானத்திற்கு இணையான வசதிகள்!

வாஷ் ரூம் வசதியுடன் படுக்கை அறை, டிவி, ஏசி சிஸ்டம், சமையல் செய்யும் வசதியுடன் கட்டைக்கப்பட்டு இருக்கிறது. பொருட்களை வைத்துக் கொள்வதற்கும் சிறப்பான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், வெளிப்புறத்தை பார்ப்பதற்கு ஏதுவாக விசாலமான கண்ணாடி ஜன்னல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சொகுசு வீடு போல் மாற்றப்பட்ட டெம்போ டிராவலர்... தனிநபர் விமானத்திற்கு இணையான வசதிகள்!

விஜயவாடாவில் உள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான சபூ பிரதர்ஸ் மூலமாக இந்த பினெஸ்ட்டா மோட்டார் இல்லத்தை ஆர்டர் செய்து வாங்க முடியும். வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பொறுத்து ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலான பட்ஜெட்டில் இந்த மாற்றங்கள் செய்து கொடுக்கப்படுகின்றன.

சொகுசு வீடு போல் மாற்றப்பட்ட டெம்போ டிராவலர்... தனிநபர் விமானத்திற்கு இணையான வசதிகள்!

ஆனால், டெம்போ டிராவலரின் விலையுடன் சேர்த்து கஸ்டமைஸ் பணிகளுக்காக இந்த அடக்க விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரிய வில்லை. இந்த மோட்டார் இல்லத்தை வாங்க விரும்புவோர் கூடுதல் விபரங்களை சபூ பிரதரஸ் டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Image Courtesy: Saboo Brothers

Most Read Articles

English summary
Pithampur based vehicle customize company, Pinnacle has developed a premium motor home based on the Tempo Traveller.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X