உலகின் நான்காம் பணக்காரராக மாறும் பிரபலம்... இவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க...

உலகின் நான்காவது பெரும் பணக்காரர் என்ற புகழை பிரபல கார் நிறுவனத்தின் சிஇஓ சூடியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

உலகின் நான்காம் பணக்காரராக மாறும் பிரபலம்... இவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க...

மின்சார வாகன உற்பத்தியை மட்டுமே குறிக்கோளாக வைத்து இயங்கும் நிறுவனம், டெஸ்லா. அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தின் சிஇஓ-வாக இருப்பவர் எலன் மஸ்க். சமூக வலைதளங்களில் மிகவும் துடிப்பாகக் காணப்படும், இளம் தொழிலதிபர்களில் ஒருவராக திகழ்ந்து வருகின்றார்.

உலகின் நான்காம் பணக்காரராக மாறும் பிரபலம்... இவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க...

இவர், முற்றிலும் மாறுபட்ட மற்றும் வித்தியாசமான சிந்தனைகளை வெளிப்படுத்துவதன் காரணத்தினால் உலகளவில் நெட்டிசன் மத்தியில் பரீட்சையமான ஓர் நபராக இருந்து வருகின்றார். குறிப்பாக, தனது குழந்தைக்கு முற்றிலும் வித்தியாசமான பெயரை வைக்க இருப்பதாக அறிவித்த பின்னர் இணையத்தின் ஹாட் டாபிக்காகவே அவர் அண்மையில் மாறினார்.

உலகின் நான்காம் பணக்காரராக மாறும் பிரபலம்... இவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க...

X Æ A-12 எனும் மிகவும் வித்தியாசமான பெயரை வைக்க திட்டமிட்டிருப்பதாக எலன் மஸ்க் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். பொதுவாக, எலன் மஸ்க் சற்று நக்கல், நையாண்டி கலந்த டுவிட்களையே அதிகம் பதிவிடுவார். எனவே, இந்த டுவிட் அவரது ஃபாலோவர்கள் மத்தியில் எரிச்சலையே ஏற்படுத்தியதுடன், நன்றாக அவர்களிடத்தில் வாங்கியும் கட்டிக் கொண்டார். இப்படிப்பட்ட ஓர் நபரே தற்போது உலகின் நான்காவது பெரும் பணக்காரர் எனும் அந்தஸ்துக்கு முன்னேறியிருக்கின்றார்.

உலகின் நான்காம் பணக்காரராக மாறும் பிரபலம்... இவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க...

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அவருடைய மதிப்பு வெறும் 30 பில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்தது. இது, அவருக்கு உலகின் பத்தாவது பணக்கார நபர் என்ற அந்தஸ்தைப் பெற்று தந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவருடைய பங்கு வர்த்தக சந்தையில் எதிர்பாராத அளவில் உச்சத்தை எட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் நான்காம் பணக்காரராக மாறும் பிரபலம்... இவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க...

குறிப்பாக, ஒரே நாளில் எலன் மஸ்க்கின் பங்கு 11 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாக ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், எலன் மஸ்க்கின் மதிப்பு 7.8 பில்லியன் டாலர்கள் கூடுதலாக உயர்ந்துள்ளது. எனவே, உலகின் நான்காம் பெரும் பணக்காரராக அவர் தற்போது மாறியிருக்கின்றார்.

உலகின் நான்காம் பணக்காரராக மாறும் பிரபலம்... இவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க...

இதனால், உலகின் பல செல்வந்தர்களை மிகக் குறுகிய காலத்தில் வென்றவர் என்ற புகழுக்குச் சொந்தக் காரராக அவர் மாறியிருக்கின்றார். இதுகுறித்து ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெஸ்லாவின் பங்குகள் ஒரே நாளில் 11 சதவீத அதிகரிப்பைக் கண்டிருக்கின்றது. இதன் விளைவாக மஸ்க்கின் நிகர மதிப்பு 7.8 பில்லியன் டாலராக அதிகரித்தது.

உலகின் நான்காம் பணக்காரராக மாறும் பிரபலம்... இவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க...

எனவே, உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் இருந்த அவர், தற்போது நான்காம் பணக்காரர் என்ற இடத்தை அடைந்துள்ளார். மேலும், 90 பில்லியன் டாலர் நிகர மதிப்பையும் தற்போது அவர் பெற்றிருக்கின்றார். ஆகையால், 2020 ஆம் ஆண்டின் தற்போதைய நிலவரப்படி அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ், பிந்தைய இடத்தில் எலன் மஸ்க் இருக்கின்றார்.

உலகின் நான்காம் பணக்காரராக மாறும் பிரபலம்... இவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க...

டெஸ்லா நிறுவனம் கடந்த காலங்களைக் காட்டிலும் நடப்பு 2020ம் நிதியாண்டில் அதீத வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. இந்த ஆண்டில் மட்டும் 350 சதவீத வளர்ச்சியை அது கண்டிருக்கின்றது. இதன் வெளிப்பாடே அந்நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்கார்களில் ஒருவராக உயர்ந்திருக்கின்றார்.

உலகின் நான்காம் பணக்காரராக மாறும் பிரபலம்... இவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க...

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் 2012ம் ஆண்டில் 4 பில்லியன் டாலர்கள் மதிப்பில் மட்டுமே காணப்பட்ட இந்த நிறுவனம், வெகுக் குறைந்த காலத்திலேயே கணிக்க முடியாத இலக்கை எட்டியிருக்கின்றது. இந்த அதீத வளர்ச்சிக்கு மக்கள் மத்தியில் டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கிடைத்து வரூம் உச்சபட்ச வரவேற்பே முக்கிய காரணமாக உள்ளது.

உலகின் நான்காம் பணக்காரராக மாறும் பிரபலம்... இவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க...

டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் உலகின் அதிகம் விற்பனையாகும் கார்களான பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கே கடுமையான போட்டியை வழங்கி வருகின்றது. கடந்த காலங்களில் முதல் இடத்தைப் பிடித்து பிஎம்டபிள்யூவின் சாம்ராஜ்யத்தை டெஸ்லா மாடல்3 மின்சார கார்கள் காலி செய்தன. இந்த இடத்தை தற்போதும் மக்கள் மத்தியில் டெஸ்லா நிறுவனம் தக்க வைத்து வருகின்றது.

உலகின் நான்காம் பணக்காரராக மாறும் பிரபலம்... இவர் யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க...

இதற்காக பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் பணயிலும் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதுமட்டுமின்றி, தற்போது இருக்கும் தொழில்நுட்பங்களை மேலும் சிறப்பானதாக மாற்றும் முயற்சியில் அது ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், டெஸ்லா நிறுவனத்தின் பிரபல மாடல்களான மாடல் எஸ் மற்றும் மாடல் ஒய் ஆகிய மின்சார கார்களுக்கு ஸ்மார்ட் போனையே சாவியாக பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை அது விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla CEO Elon Musk Become The Fourth Richest Man In The World. Read In Tamil.
Story first published: Thursday, August 20, 2020, 19:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X