சிறுத்தையை மிஞ்சும் சூப்பர் வேகம்.. புதிய அப்கிரேடைப் பெற்ற உலகின் அதிக ரேஞ்ச் வழங்கும் மின்சார கார்

முந்தைய மாடலைக் காட்டிலும் பல மடங்கு அதி திறன் கொண்ட மாடலாக டெஸ்லா மாடல் எஸ் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சிறுத்தையை மிஞ்சும் சூப்பர் வேகம்.. புதிய அப்கிரேடைப் பெற்ற உலகின் அதிக ரேஞ்ச் வழங்கும் மின்சார கார்..

உலகின் அதிக ரேஞ்சை வழங்கும் மின்சார கார்களில் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் எலெக்ட்ரிக் காரும் ஒன்று. இது செடான் ரக பேட்டரி கார் ஆகும். இந்த காரைதான் அந்நிறுவனம் தற்போது அப்டேட் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முன்பெப்போதும் இல்லாத அளவில் அதி-வேக திறன் கொண்ட காராக அது மாறியிருக்கின்றது.

சிறுத்தையை மிஞ்சும் சூப்பர் வேகம்.. புதிய அப்கிரேடைப் பெற்ற உலகின் அதிக ரேஞ்ச் வழங்கும் மின்சார கார்..

டெஸ்லா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார்களில் மாடல் எஸ்-ம் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாடலின் ஆரம்பநிலை வேரியண்ட் ஒரு முழுமையான சார்ஜில் 391 மைல் ரேஞ்சை வழங்கும் என கூறப்படுகின்றது.

அதாவது, டெஸ்லா மாடல் எஸ் காரை முழுமையாக சார்ஜ் செய்தோமேயானால் சுமார் 629 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சிறப்பு வாய்ந்த காரைதான் டெஸ்லா அதிக வேகத்தில் இயங்கும் வகையில் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.

MOST READ: கொரோனா எதிரொலி: விமானங்களில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றங்கள்.. இனி எந்த நோயும் நாடுவிட்டு நாடு பரவாது..

சிறுத்தையை மிஞ்சும் சூப்பர் வேகம்.. புதிய அப்கிரேடைப் பெற்ற உலகின் அதிக ரேஞ்ச் வழங்கும் மின்சார கார்..

டெஸ்லாவின் இந்த நடவடிக்கையால், மாடல் எஸ் சிறுத்தையை மிஞ்சும் வேகத்தை நொடிப்பொழுதில் எட்டும் திறனைப் பெற்றிருக்கிறது. அதாவது, மணிக்கு 0-கிமீ வேகத்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 2.3 நொடிகளிலேயே எட்டும் திறனை அது பெற்றிருக்கின்றது.

சிறுத்தையை மிஞ்சும் சூப்பர் வேகம்.. புதிய அப்கிரேடைப் பெற்ற உலகின் அதிக ரேஞ்ச் வழங்கும் மின்சார கார்..

இந்த அதீத வேகத்தை லுடிக்ரூஸ் மோடில் மட்டுமே மாடல் எஸ் வெளிப்படுத்தும். இந்தவகையிலான மாற்றத்தை அந்நிறுவனம் மின்சார காரில் புகுத்தியுள்ளது.

ஆனால், இந்த மாற்றம்குறித்த தகவலை டெஸ்லா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேசமயம், அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் டெஸ்லா மாடல் எஸ்-இன் பிக்-அப் திறன் பற்றிய தகவல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

MOST READ: நடு ரோட்டில் கதறி அழுத இளம்பெண்.. இதற்காகதான் இந்த நாடகமா! என்னம்மா இப்படி பண்றீங்களேமா...

சிறுத்தையை மிஞ்சும் சூப்பர் வேகம்.. புதிய அப்கிரேடைப் பெற்ற உலகின் அதிக ரேஞ்ச் வழங்கும் மின்சார கார்..

இதை வைத்தே மாடல் எஸ்-இல் அப்கிரேட் செய்யப்பட்டிருப்பதை நாங்கள் உறுதியுடன் வெளிப்படுத்தியுள்ளோம். மேலும், தற்போதைய அப்கிரேட் முந்தைய மாடலின் திறனைக் காட்டிலும் சூப்பர் பவர் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

சிறுத்தையை மிஞ்சும் சூப்பர் வேகம்.. புதிய அப்கிரேடைப் பெற்ற உலகின் அதிக ரேஞ்ச் வழங்கும் மின்சார கார்..

டெஸ்லா நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் உலகளவில் நல்ல வரேவற்பு நிலவு வருகின்றது. அவையனைத்தும் மின்சார கார்கள் என்பதையும் தாண்டி, தானாகவே இயங்கும் தன்மைக் கொண்டவை என்பதால் பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. குறிப்பாக, ஆபத்து காலங்களில் தானாகவே காரை கன்ட்ரோல் செய்து, பிரேக் பிடிக்கும் நுண்ணறிவு இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் இடம்பெற்றிருக்கின்றது.

MOST READ: மத்த சிஎம் மாதிரி இல்ல... காரை எடுத்து கொண்டு மம்தா செய்த காரியம்... எப்பவும் அவங்க ஸ்டைலே வேற...

சிறுத்தையை மிஞ்சும் சூப்பர் வேகம்.. புதிய அப்கிரேடைப் பெற்ற உலகின் அதிக ரேஞ்ச் வழங்கும் மின்சார கார்..

இதுமட்டுமின்றி, சொகுசு அம்சங்களுக்கு சற்றும் குறைவில்லாத மின்சார கார்களாக இவை உலக சந்தையில் கிடைக்கின்றன. அந்த அம்சங்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர கார்களுக்கு போட்டியளிக்கும் வகையிலானவை.

சிறுத்தையை மிஞ்சும் சூப்பர் வேகம்.. புதிய அப்கிரேடைப் பெற்ற உலகின் அதிக ரேஞ்ச் வழங்கும் மின்சார கார்..

ஆனால், இந்நிறுவனத்தின் மின்சார இன்றளவும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைப்பதில்லை. விரைவில் இந்த கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ அவ்வப்போது டுவிட் மூலம் இந்தியர்களைக் கிரங்கடித்துக் கொண்டிருக்கின்றார்.

MOST READ: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அதிரடி... ரகசியமாக உத்தரவு போட்ட தமிழக அரசு... என்னனு தெரியுமா?

சிறுத்தையை மிஞ்சும் சூப்பர் வேகம்.. புதிய அப்கிரேடைப் பெற்ற உலகின் அதிக ரேஞ்ச் வழங்கும் மின்சார கார்..

ஆனால், எப்போது அவை சந்தையில் கிடைக்கும் என்பதுகுறித்த உறுதியான தகவல் வெளியிடப்படாமலே இருக்கின்றது. அதேசமயம், உலக சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தயாரிப்பிற்கே டஃப் கொடுக்கும் வகையில் டெஸ்லா கார்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

சிறுத்தையை மிஞ்சும் சூப்பர் வேகம்.. புதிய அப்கிரேடைப் பெற்ற உலகின் அதிக ரேஞ்ச் வழங்கும் மின்சார கார்..

குறிப்பாக, அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் காராக இருந்து வந்த பிஎம்டபிள்யூவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை டெஸ்லா பிடித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய அதீத வரவேற்பினால் உலகின் பிரமாண்ட வாகன தயாரிப்பு நிறுவனங்களில் டெஸ்லாவும் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கு அந்நிறுவனம் அறிமுகம் செய்து வரும் அதிக ரேஞ்ச் மற்றும் திறன்மிக்க வாகனங்களே காரணம்.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla EV Model S Update. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X