டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

நீண்ட கால காத்திருப்புக்கு பின்னர் டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. முதல் மாடலாக டெஸ்லா மாடல் 3 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார் என்ன விலையில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

டெஸ்லா நிறுவனத்தின் விலை குறைவான தேர்வாக மாடல் 3 எலெக்ட்ரிக் கார் விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது. வரும் 2021ம் ஆண்டு துவக்கத்தில், அதாவது முதலாவது காலாண்டு காலத்தில் முன்பதிவு துவங்கப்பட உள்ளது.

டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

கடந்த 2016ம் ஆண்டு இந்த காருக்கான முன்பதிவு உலக அளவில் துவங்கப்பட்டது. அப்போதே, இந்தியாவின் சில பிரபல தொழிலதிபர்கள் இந்த காரை முன்பதிவு செய்தனர். பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா உள்ளிட்டோரும் பதிவு செய்தனர்.

டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

இந்த நிலையில், இந்தியாவிற்கான நேரடி முன்பதிவு வரும் ஜனவரி - மார்ச் இடையிலான காலக்கட்டத்தில் துவங்கப்பட உள்ளது. அப்போது, இந்த காருக்கான காத்திருப்பு காலம் எவ்வளவு மாதங்கள் பிடிக்கும் என்பது தெரிய வரும்.

டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

இந்த நிலையில், டெஸ்லா மாடல் 3 கார் 35,000 டாலர் விலையில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்போது ரூ.55 லட்சம் முதல் ரூ.60 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது.

டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

மேலும், இந்தியாவில் டீலர்களை நியமிக்காமல் நேரடியாக விற்பனை செய்வதற்கான திட்டத்தையும் டெஸ்லா வைத்துள்ளது. அதாவது, ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்பவர்களுக்கு இறக்குமதி செய்து நேரடியாக டெலிவிரி கொடுக்கப்பட்டுவிடும்.

டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

கடந்த 2017ம் ஆண்டு டெஸ்லா மாடல் 3 காரின் உற்பத்தி துவங்கப்பட்டது. உலகின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக இது ஹிட் அடித்தது. இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை செல்லும்.

டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

இந்த கார் மணிக்கு 260 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 0 - 100 கிமீ வேகத்தை 3.5 வினாடிகளில் எட்டிவிடும் திறன் வாய்ந்தது. இந்த காரில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்கும் வகையில், டேப்லெட் போன்ற திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

இதனிடையே, கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க டெஸ்லா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அண்மையில் தகவல் வெளிவந்தது. அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வர்த்தகம் சிறப்பாக அமைந்தால், இந்தியாவிலேயே தனது கார்களை அசெம்பிள் செய்வதற்கான ஆலையை அமைக்கும் வாய்ப்பும் உள்ளது.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla is expected to price the Model between Rs 55 lakh and 60 lakh, ex-showroom. The company will be directly selling the electric vehicles in Indian without a dealer.
Story first published: Tuesday, December 29, 2020, 13:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X