இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா... அடுத்த மாதம் முன்பதிவு தொடக்கம், ஜூன் முதல் கார்கள் டெலிவரி என தகவல்...

டெஸ்லா நிறுவனம் அடுத்த மாதத்தில் இருந்து இந்திய வாடிக்கையாளர்களிடம் முன்பதிவுகளை ஏற்க திட்டமிட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா... அடுத்த மாதம் முன்பதிவு தொடக்கம், ஜூன் முதல் கார்கள் டெலிவரி என தகவல்...

ஒரு வழியாக டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவது குறித்து ஓரளவிற்கு நம்பகமான தகவல் தற்போது நமக்கு கிடைத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, அடுத்த மாதம் முதல் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து முன்பதிவுகளை ஏற்க திட்டமிட்டுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா... அடுத்த மாதம் முன்பதிவு தொடக்கம், ஜூன் முதல் கார்கள் டெலிவரி என தகவல்...

அதே சமயம் 2021-2022ம் நிதியாண்டின் முதல் காலாண்டு இறுதியில் டெஸ்லா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவரி செய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2021ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவரி செய்ய தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா... அடுத்த மாதம் முன்பதிவு தொடக்கம், ஜூன் முதல் கார்கள் டெலிவரி என தகவல்...

டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முதல் காராக மாடல் 3 (Tesla Model 3) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாடல் 3 கார்களின் உலகளாவிய விற்பனை உயர வேண்டும் என டெஸ்லா விரும்புவதாக கூறப்படுகிறது. இந்திய சந்தையில் தனது முதல் மாடலாக மாடல் 3 காரை டெஸ்லா விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு இது முக்கியமான காரணமாக இருக்கலாம்.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா... அடுத்த மாதம் முன்பதிவு தொடக்கம், ஜூன் முதல் கார்கள் டெலிவரி என தகவல்...

ஏனெனில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், மாடல் 3 பெரும் வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே டெஸ்லா எப்போது இந்தியாவில் கால் பதிக்கும் என? எலான் மஸ்க்கை இந்தியர்கள் கேள்விளால் துளைத்தெடுத்து வருகின்றனர். இந்த வரவேற்பை டெஸ்லா சாதகமாக பயன்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா... அடுத்த மாதம் முன்பதிவு தொடக்கம், ஜூன் முதல் கார்கள் டெலிவரி என தகவல்...

அதே சமயம் டெஸ்லா நிறுவனத்தின் எண்ட்ரி-லெவல் காராக மாடல் 3 இருப்பதும் இங்கே குறிப்பிட்டாக வேண்டிய விஷயம். அதாவது டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகளில் மாடல் 3 கார்தான் மிகவும் விலை குறைவானது. இந்திய சந்தையில் தனது முதல் தயாரிப்பாக மாடல் 3 காரை டெஸ்லா நிறுவனம் களமிறக்கலாம் என்பதற்கு இது மற்றொரு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா... அடுத்த மாதம் முன்பதிவு தொடக்கம், ஜூன் முதல் கார்கள் டெலிவரி என தகவல்...

டெஸ்லா மாடல் 3 கார் CBU (Completely Built Units) வழியில் இந்தியாவிற்கு வரும் என கூறப்படுகிறது. அதாவது முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். இதன் விலை 55 லட்ச ரூபாய் என்ற அளவில் தொடங்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா... அடுத்த மாதம் முன்பதிவு தொடக்கம், ஜூன் முதல் கார்கள் டெலிவரி என தகவல்...

இந்திய சந்தையில் டெஸ்லா மாடல் 3 காருக்கு நேரடி போட்டி என எந்த காரும் கிடையாது. இங்கு டெஸ்லா மாடல் 3 சொகுசு காராக நிலைநிறுத்தப்படும். 50 kWh முதல் 75 kWh வரையிலான பேட்டரி தொகுப்புகள் உடன் டெஸ்லா மாடல் 3 இந்தியாவில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிரைவிங் ரேஞ்ச் 381 கிலோ மீட்டர் முதல் 580 கிலோ மீட்டர் வரை இருக்கலாம்.

இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா... அடுத்த மாதம் முன்பதிவு தொடக்கம், ஜூன் முதல் கார்கள் டெலிவரி என தகவல்...

இதனை நடைமுறை பயன்பாட்டிற்கு உகந்த சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் என சொல்லலாம். டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகை தொடர்பாக ஈடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது. டெஸ்லா கார்களின் இந்திய வருகைக்காக நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருப்பவர்களுக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

English summary
Tesla Model 3 India Launch In June 2021 - Report: Here Are All The Details. Read in Tamil
Story first published: Saturday, December 26, 2020, 12:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X