விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்

டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார் விரைவில் இந்திய சந்தைக்கு வருகை தரவுள்ளதை இந்நிறுவனத்தின் சிஇஒ எலான் மஸ்க் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்

டெஸ்லாவின் வருகையை நாம் அந்நிறுவனம் இந்தியாவில் நுழையவுள்ளதாக அறிவித்ததில் இருந்து சுமார் 4 வருடங்களாக எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். உலகளவில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்நிறுவனம் மாடல் 3 காரின் மூலமாக இந்தியாவில் காலடி தடத்தை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்

ஆனால் இதற்கான செயல்பாடுகள் எதுவும் நடைபெறவதாக தெரியவில்லை. இருப்பினும் அவ்வப்போது இந்நிறுவனத்தின் சார்பில் இருந்து வெளிவரும் தகவல்கள் நமக்கு சிறிது நம்பிக்கையை அளித்து வருகின்றன. இந்த வகையில் சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஒ எலான் மஸ்க், மாடல் 3 கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும், நம்பிக்கையாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்

நான் மாடல் 3 காரை 4 வருடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தேன்' என அர்விந்த் குப்தா என்பவர் பதிவிட்ட ட்விட் ஒன்றிற்கு எலான் மஸ்க் இவ்வாறு தெரிவித்துள்ளார். மற்றப்படி வருகையின் சரியான நேரம் எதுவும் தெரிவிக்கப்படாவிட்டாலும், விரைவில் இந்த காரை இந்திய சந்தையில் எதிர்பார்க்கலாம் என நம்புவோம்.

விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்

மஸ்க்கின் ஜிகாஃபேக்ட்ரி செயல்பாட்டில் இந்தியாவும் இருந்தாலும், நம் நாட்டில் இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள் எதுவும் உருவாக்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. தற்சமயம் டெஸ்லா நிறுவனம் ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் புதிய தொழிற்சாலை ஒன்றை திறக்க ஆயத்தமாகி வருகிறது.

விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்

இதனை தொடர்ந்து ஈஸ்ட் கோஸ்ட் நாட்டு சந்தைகாக அமெரிக்க டெக்ஸஸ் மாகாணத்தின் அஸ்டின் தலைநகரத்தில் புதிய தொழிற்சாலையை உருவாக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் டெஸ்லா மாடல் எஸ், மாடல் 3, மாடல் எக்ஸ், ரோட்ஸ்டர் மற்றும் மாடல் ஒய் என்ற ஐந்து எலக்ட்ரிக் கார் மாடல்களை சந்தைப்படுத்தி வருகிறது.

விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்

இதில் முதலாவதாக இந்திய சந்தைக்கு வரவுள்ளதாக கூறப்படும் மாடல் 3 பெர்ஃபார்மன்ஸ், லாங் ரேஞ்ச் ஆல் வீல் ட்ரைவ் & ஸ்டாண்டர்ட் ப்ளஸ் என்ற மூன்று விதமான வேரியண்ட்களை கொண்டது. இதில் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட்டில் கார் 0-விலிருந்து 60 kmph என்ற வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிடும்.

விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்

அதுவே ஸ்டாண்டர்ட் மற்றும் லாங் ரேஞ்ச் வேரியண்ட்கள் இந்த வேகத்தை எட்ட முறையே 5.3 மற்றும் 4.4 வினாடிகளை எடுத்து கொள்கின்றன. இந்த எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டதில் இருந்து இந்த வரிசையில் இந்தியாவும் இருந்து வருகிறது. இது ஒன்றே மாடல் 3 காரின் இந்திய வருகையை உயிருடன் வைத்திருக்கிறது.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla Model 3 Expected To Arrive In India Soon, Hints CEO Elon Musk
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X