புதிய பெயரில் அறிமுகமாகும் இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ! பெயரை பதிவு செய்தது மஹிந்திரா

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ 'ஸ்கார்பியோ ஸ்டிங்' (தேளின் கொடுக்கு) என்ற பெயரில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய பெயரில் அறிமுகமாகும் இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ! பெயரை பதிவு செய்தது மஹிந்திரா

2002ல் இருந்து இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவின் சிறந்த விற்பனை கார்களுள் ஒன்றாக ஸ்கார்பியோ விளங்கி வருகிறது. ஸ்கார்பியோ என்பதற்கு தமிழில் தேள் என்று அர்த்தம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

புதிய பெயரில் அறிமுகமாகும் இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ! பெயரை பதிவு செய்தது மஹிந்திரா

2002ல் இருந்து கிட்டத்தட்ட 18 வருடங்களாக விற்பனையில் ஜொலித்து வந்தாலும் இதுவரை அதன் இரண்டாம் தலைமுறையை மஹிந்திரா கொண்டுவரவில்லை. இருந்தாலும் தோற்ற அளவில் பார்த்தால், 2010ஆம் காலக்கட்டங்களில் விற்பனையில் இருந்த ஸ்கார்பியோவுக்கும் தற்போதைய ஸ்கார்பியோவிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

புதிய பெயரில் அறிமுகமாகும் இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ! பெயரை பதிவு செய்தது மஹிந்திரா

இருப்பினும் ஸ்கார்பியோவின் புதிய தலைமுறையை கொண்டுவர மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் புதிய ஸ்கார்பியோ எஸ்யூவி காரை பற்றிய விபரங்கள் எதுவும் தயாரிப்பு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

புதிய பெயரில் அறிமுகமாகும் இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ! பெயரை பதிவு செய்தது மஹிந்திரா

இந்த நிலையில் தற்போது காடிவாடி செய்திதளம் மூலமாக வெளியாகியுள்ள ஆவணங்களில் மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை ஸ்கார்பியோவை ‘ஸ்கார்பியோ ஸ்டிங்' என்ற பெயரில் அறிமுகப்படுத்த பதிவு செய்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்கார்பியோ ஸ்டிங்கிற்கு தமிழில் தேளின் கொடுக்கு என்பது அர்த்தமாகும்.

புதிய பெயரில் அறிமுகமாகும் இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ! பெயரை பதிவு செய்தது மஹிந்திரா

புதிய ஸ்கார்பியோ 2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி துவங்கும் வரையில் அறிமுகமாகுவதற்கான வாய்ப்பில்லை. புதிய பெயருக்கு ஏற்றாற்போல் காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இரு புறங்களும் அப்டேட் செய்யப்பட்டிருக்கும் என்பது நிச்சயம்.

புதிய பெயரில் அறிமுகமாகும் இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ! பெயரை பதிவு செய்தது மஹிந்திரா

மேலும் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் உள்ளிட்ட எஸ்யூவிகளுக்கு போட்டியாக வெளிவரும் இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோவில் சந்தைக்கு பிறகான பாகங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அடுத்த தலைமுறை ஸ்கார்பியோவில் 2.0 லிட்ட்ர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

புதிய பெயரில் அறிமுகமாகும் இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ! பெயரை பதிவு செய்தது மஹிந்திரா

இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன. தற்போதைய ஸ்கார்பியோவில் வழங்கப்படும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் 140 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

புதிய பெயரில் அறிமுகமாகும் இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ! பெயரை பதிவு செய்தது மஹிந்திரா

இந்த டீசல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனம் தற்சமயம் ஸ்கார்பியோவை ரூ.12.40 லட்சத்தில் இருந்து ரூ.16.27 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலைகளில் விற்பனை செய்து வருகிறது. ஸ்கார்பியோ ஸ்டிங்கின் விலை இதனை காட்டிலும் சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Next-Gen Mahindra Scorpio Could Be Called ‘Scorpio Sting’, Trademark Registred
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X