வருங்கால மஹிந்திரா தயாரிப்புகளுக்கு முன்உதாரணமாக 2020 தார் பிஎஸ்6... லேட்டஸ்ட் ஸ்பை படங்கள் வெளியீடு

2020 மஹிந்திரா தார் மாடலின் ஹார்ட்டாப் மற்றும் சாஃப்டாப் என இரு வெர்சன்களும் நாஷிக்-மும்பை நெடுஞ்சாலையில் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் அறியப்பட்டுள்ள இந்த 2020 மாடலை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வருங்கால மஹிந்திரா தயாரிப்புகளுக்கு முன்உதாரணமாக 2020 தார் பிஎஸ்6... லேட்டஸ்ட் ஸ்பை படங்கள் வெளியீடு

கடந்த பல மாதங்களாக மஹிந்திராவின் புதிய தயாரிப்பான 2020 தார் மாடலின் சோதனை ஓட்ட ஸ்பை படங்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். பல மாதங்கள் என்று சொல்வதை விட சில வருடங்கள் என சொல்லலாம்.

வருங்கால மஹிந்திரா தயாரிப்புகளுக்கு முன்உதாரணமாக 2020 தார் பிஎஸ்6... லேட்டஸ்ட் ஸ்பை படங்கள் வெளியீடு

ஏனெனில் கிட்டத்தட்ட 2 வருடங்களாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகின்ற புதிய தலைமுறை தார் கார் ஆனது பிஎஸ்4 வெர்சனை போல் அல்லாமல் ஸ்கார்பியோவின் ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுகம் அதிகாரப்பூர்வமாக வருகிற சுதந்திர தினத்தில் நடைபெறவுள்ளது.

வருங்கால மஹிந்திரா தயாரிப்புகளுக்கு முன்உதாரணமாக 2020 தார் பிஎஸ்6... லேட்டஸ்ட் ஸ்பை படங்கள் வெளியீடு

அறிமுகத்திற்கு பிறகு எந்த மாடலுடனும் நேரடியாக விற்பனையில் போட்டியினை சந்திக்காவிடும் 2020 தாருக்கு 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6 தோற்ற அளவில் போட்டியினை தரலாம். அதேபோல் சுசுகியின் ஜிம்னியும் போட்டியாக இருக்கலாம்.

வருங்கால மஹிந்திரா தயாரிப்புகளுக்கு முன்உதாரணமாக 2020 தார் பிஎஸ்6... லேட்டஸ்ட் ஸ்பை படங்கள் வெளியீடு

ஆனால் ஜிம்னியை சுசுகி நிறுவனம் தற்போதைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்துவது போல் தெரியவில்லை. இந்திய அறிமுகத்துடன் உலகம் முழுவதும் 2020 தார் அறிமுகமாகுவதற்கு இன்னும் சில நாட்கள் தான் உள்ளதால், தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது அடையாளப்படுத்தப்பட்ட சோதனை தார் வாகனங்கள் காட்சியளிக்கின்றன.

வருங்கால மஹிந்திரா தயாரிப்புகளுக்கு முன்உதாரணமாக 2020 தார் பிஎஸ்6... லேட்டஸ்ட் ஸ்பை படங்கள் வெளியீடு

இருப்பினும் கார் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் மஹிந்திரா தார் மாடலுக்கு உண்டான முரட்டுத்தனமான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 2020 வெர்சன், முந்தைய தலைமுறை தாரை காட்டிலும் சிறப்பான ஆன்-ரோடு செயல்திறனை பெற்றிருக்கும்.

வருங்கால மஹிந்திரா தயாரிப்புகளுக்கு முன்உதாரணமாக 2020 தார் பிஎஸ்6... லேட்டஸ்ட் ஸ்பை படங்கள் வெளியீடு

அதேபோல் கூடுதல் அகலத்துடன் உருவாக்கபட்டுள்ளதால் புதிய தலைமுறை தார் ஆஃப்-ரோடு பயன்பாடுகளுக்கும் எந்த விதத்திலும் சளைத்ததாக இருக்காது. ஏராளமான பாகங்களை 2020 தார், ப்ராண்ட்டின் ஆஃப்-ரோடு பிரிவான மஹிந்திரா அட்வென்ஜெரில் இருந்து பெற்றுள்ளது.

வருங்கால மஹிந்திரா தயாரிப்புகளுக்கு முன்உதாரணமாக 2020 தார் பிஎஸ்6... லேட்டஸ்ட் ஸ்பை படங்கள் வெளியீடு

ரூ.10 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையை ஈடுக்கட்டும் அளவில் கூட பழைய தார் மாடல் தொழிற்நுட்பங்களை பெற்றிருக்கவில்லை. ஆனால் 2020 தாரின் உட்புறத்தை சற்று உற்று பார்த்தால் கூடுதலாக சில பொத்தான்கள் சேர்க்கப்பட்டுள்ளதை அறிய முடியும்.

வருங்கால மஹிந்திரா தயாரிப்புகளுக்கு முன்உதாரணமாக 2020 தார் பிஎஸ்6... லேட்டஸ்ட் ஸ்பை படங்கள் வெளியீடு

அவற்றை தற்போது ரஷ்லேன் செய்தி தளத்தால் வெளியிடப்பட்டுள்ள ஸ்பை படங்கள் தெளிவாக வெளிக்காட்டுகின்றன. ஸ்டேரிங் சக்கரத்திற்கு வலதுபுறத்தில் டிசிஎஸ் (ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம்) மற்றும் எச்டிசி (மலை பாதைகளில் தேவைப்படும் கண்ட்ரோலை வழங்கும் தொழிற்நுட்பம்) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

வருங்கால மஹிந்திரா தயாரிப்புகளுக்கு முன்உதாரணமாக 2020 தார் பிஎஸ்6... லேட்டஸ்ட் ஸ்பை படங்கள் வெளியீடு

அதேநேரம் ஸ்விட்ச் பேனலின் மற்ற பகுதிகளை பார்த்தோமேயானால், அவையும் கூடுதல் செயல்பாடுகளை கொண்டுள்ளன. இதனால் இந்த தயாரிப்பு வருங்கால மஹிந்திரா மாடல்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காருக்கு இயக்க ஆற்றலை வழங்குவதற்கு பிஎஸ்6 தரத்தில் இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2020 Mahindra Thar BS6 features TCS, HDC & more – Latest spy shots
Story first published: Wednesday, August 12, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X