இப்படி ஒரு ஸ்டைலில் மாருதி 800 காரை பார்த்திருக்கீங்களா..? மிஸ் பண்ணிடாதீங்க... மனதை கவரும் புகைப்படங்கள்!

நவீன யுக கார்களுக்கே டஃப் கொடுக்கும் ஸ்டைலில் மாருதி 800 கார் மாற்றிமைக்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

இப்படி ஒரு ஸ்டைலில் மாருதி 800 காரை பார்த்திருக்கீங்களா..? மிஸ் பண்ணிடாதீங்க... வீடியோ உடன் கூடிய மனதை கவரும் புகைப்படங்கள்!

நடுத்தர வசதி படைத்தவர்களையும் காரின் உரிமையாளர்களாக மாற்றிய கார் என்ற பெறுமைக்கு உரிய வாகனமாக மாருதி 800 இருக்கின்றது. இந்த சிறப்பு வாய்ந்த கார் மாடலையே இளைஞர்கள் சிலர் மிகவும் அட்டகாசமான வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றனர். லம்போர்கினி மற்றும் ஹோண்டா 660 ஹைபிரிட் ரக கார்களுக்கே டஃப் கொடுக்கின்ற அளவிற்கு அது அட்டகாசமாக மாடிஃபைச் செய்யப்பட்டுள்ளது.

இப்படி ஒரு ஸ்டைலில் மாருதி 800 காரை பார்த்திருக்கீங்களா..? மிஸ் பண்ணிடாதீங்க... வீடியோ உடன் கூடிய மனதை கவரும் புகைப்படங்கள்!

இதுகுறித்த வீடியோ கடந்த ஜூலை மாதமே வெளியிடப்பட்டுவிட்டது. இந்நிலையில் தற்போதே மாடிஃபை செய்யப்பட்ட மாருதி 800 கார் பற்றிய தகவல் வெளி வரத் தொடங்கியிருக்கின்றது. மிகவும் தனித்துவமான ஸ்டைலில் இக்கார் மாறியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவை மேக்னட்டோ 11 எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது.

இப்படி ஒரு ஸ்டைலில் மாருதி 800 காரை பார்த்திருக்கீங்களா..? மிஸ் பண்ணிடாதீங்க... வீடியோ உடன் கூடிய மனதை கவரும் புகைப்படங்கள்!

இதுவரை இந்திய சாலை பார்த்திராத ஓர் விநோதமான தோற்றத்தில் 800 கார் காட்சியளிக்கின்றது. இந்த புதிய உருவத்திற்காக பல்வேறு இழப்புகளையும், புதிய சேர்ப்புகளையும் அக்கார் சந்தித்திருக்கின்றது. இதில், மிக முக்கியமானதாக கூரை இழப்பு இருக்கின்றது.

இப்படி ஒரு ஸ்டைலில் மாருதி 800 காரை பார்த்திருக்கீங்களா..? மிஸ் பண்ணிடாதீங்க... வீடியோ உடன் கூடிய மனதை கவரும் புகைப்படங்கள்!

இதனால், டாப் லெஸ் காராக இது மாறியிருக்கின்றது. இத்துடன், நான்கு டூர்களை இழந்து இரு டூர்கள் கொண்ட காராக இது மாறியிருக்கின்றது. இவ்வாறு பல்வேறு மாற்றங்களை மாருதி 800 பெற்றிருக்கின்றது. குறிப்பாக, புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் உடல் கூறுகள் (பேனல்கள்) ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான தோற்றத்தை மாருதி 800 காருக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இப்படி ஒரு ஸ்டைலில் மாருதி 800 காரை பார்த்திருக்கீங்களா..? மிஸ் பண்ணிடாதீங்க... வீடியோ உடன் கூடிய மனதை கவரும் புகைப்படங்கள்!

இதற்காக உலோகத்தால் உருவாக்கப்பட்ட பேனல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஒட்டுமொத்த மாடிஃபிகேஷனுக்கும் சேர்த்து சுமார் 1.25 லட்ச ரூபாய் செலவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இதன் எஞ்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், அசல் எந்திரமே இதில் தக்க வைக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு ஸ்டைலில் மாருதி 800 காரை பார்த்திருக்கீங்களா..? மிஸ் பண்ணிடாதீங்க... வீடியோ உடன் கூடிய மனதை கவரும் புகைப்படங்கள்!

அதேசமயம், மாறுபட்ட தோற்றத்திற்கு ஏற்ப புதிய புரஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி மின் விளக்குகள் முகப்புப் பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, வீல் மற்றும் வீல் கவர்களும் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இதுபோன்று வாகனங்களை அசல் உருவம் மழுங்கச் செய்கின்ற வகையில் மாற்றியமைப்பது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி சட்ட விரோத செயல் ஆகும். இதுமாதிரி வாகனங்களை போலீஸார் சாலையில் பார்க்க நேரிட்டால் அதனை பறிமுதல் செய்ய நேரிடலாம். இத்துடன், அபராம் போன்ற கசப்பான அனுபவத்தை பெறவும் நேரிடும்.

Most Read Articles
English summary
This Converted Maruti 800 Looks Like Hybrid Car. Read In Tamil.
Story first published: Tuesday, December 8, 2020, 15:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X