நடிகர்களின் கேரவனை போல் சாதாரண காரில் டாய்லெட்... செலவு ரொம்ப கம்மி! எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

நடிகர்களின் கேரவனை போல், சாதாரண காரிலும் மிகவும் குறைவான செலவில் டாய்லெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நடிகர்களின் கேரவனை போல் சாதாரண காரில் டாய்லெட்... செலவு ரொம்ப கம்மி! எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில், தேவையான அளவிற்கு கழிவறைகள் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், அவை சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை. எனவே கார்களில் தொலை தூர பயணங்களை மேற்கொள்பவர்கள், சங்கடங்களை சந்திக்க நேரிடுகிறது. ஆனால் இந்த பிரச்னைக்கு தற்போது முடிவு கட்டப்பட்டுள்ளது.

நடிகர்களின் கேரவனை போல் சாதாரண காரில் டாய்லெட்... செலவு ரொம்ப கம்மி! எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

ஆம், கேரளாவை சேர்ந்த ஒரு மஹிந்திரா பொலிரோ காரில், கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இயற்கை உபாதையை கழிக்க, சுத்தமான கழிவறையை தேடி திரியும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. ஓஜெஸ் ஆட்டோமொபைல்ஸ் (Ojes Automobiles) என்ற நிறுவனத்தால், இந்த மாடிஃபிகேஷன் வேலை செய்யப்பட்டுள்ளது.

நடிகர்களின் கேரவனை போல் சாதாரண காரில் டாய்லெட்... செலவு ரொம்ப கம்மி! எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

வாகன மாடிஃபிகேஷன் பணிகளில் இது நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் ஆகும். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மற்றும் பிரித்விராஜ் உள்பட, பலரின் வாகனங்களிலும் அவர்கள் வேலை செய்துள்ளனர். மஹிந்திரா பொலிரோ காரின் ஸ்ட்ரக்ச்சரை எந்த விதத்திலும் மாற்றாமல், டாய்லெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நடிகர்களின் கேரவனை போல் சாதாரண காரில் டாய்லெட்... செலவு ரொம்ப கம்மி! எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

விமானங்களில் நாம் காணும் வெஸ்டர்ன் டாய்லெட்தான் மஹிந்திரா பொலிரோ காரில் வழங்கப்பட்டுள்ளது. டாய்லெட்டிற்கு இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மஹிந்திரா பொலிரோ காரின் மூன்றாவது வரிசை இருக்கைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன. சுகாதாரம் பேணுவதற்காக, குழாய்கள், சோப் மற்றும் சானிடைசர் ஆகியவையும் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர்களின் கேரவனை போல் சாதாரண காரில் டாய்லெட்... செலவு ரொம்ப கம்மி! எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

அத்துடன் நீர் மேலாண்மைக்காக, இரண்டு டேங்க்குகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஒரு டேங்க் சுத்தமான தண்ணீரை வழங்குவதற்காகவும், மற்றொரு டேங்க் கழிவு நீரை சேகரிப்பதற்காகவும் வைக்கப்பட்டுள்ளது. மம்மூட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோரின் கேரவன் உள்பட பல்வேறு வாகனங்களில் இதேபோன்ற கழிவறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நடிகர்களின் கேரவனை போல் சாதாரண காரில் டாய்லெட்... செலவு ரொம்ப கம்மி! எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

ஃப்ளோரில் இருந்து 40 இன்ச் மேற்கூரை உயரம் கொண்ட எந்தவொரு வாகனத்திலும் இதுபோன்று டாய்லெட் வசதியை எளிதாக ஏற்படுத்த முடியும் என ஓஜெஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. அத்துடன் இந்த மாடிஃபிகேஷன் நிரந்தரமானதும் கிடையாது. தேவைப்படும் நேரங்களில் அகற்றி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்களின் கேரவனை போல் சாதாரண காரில் டாய்லெட்... செலவு ரொம்ப கம்மி! எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

மஹிந்திரா பொலிரோ கார், இந்திய மார்க்கெட்டில் நீண்ட காலமாக பிரபலமாக இருந்து வரும் வாகனங்களில் ஒன்றாகும். அடிக்கடி தொலை தூர பயணங்களை மேற்கொள்வதற்கும், ஆஃப் ரோடு பயன்பாட்டிற்கும் மஹிந்திரா பொலிரோ காரை பலர் பயன்படுத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு காரில் டாய்லெட் அமைக்கப்பட்டிருப்பது நிச்சயம் பலன் கொடுப்பதாக இருக்கும்.

நடிகர்களின் கேரவனை போல் சாதாரண காரில் டாய்லெட்... செலவு ரொம்ப கம்மி! எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

வெளிப்புறத்தில் இருந்து பார்த்தால், இந்த மஹிந்திரா பொலிரோ காரில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அத்துடன் கடைசி வரிசை விண்டோக்கள், திரைச்சீலைகளால் கவர் செய்யப்பட்டுள்ளன. மஹிந்திரா பொலிரோ காரில், இந்த டாய்லெட் வசதியை ஏற்படுத்துவதற்கு, சுமார் 65,000 ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது.

நடிகர்களின் கேரவனை போல் சாதாரண காரில் டாய்லெட்... செலவு ரொம்ப கம்மி! எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

காரில் டாய்லெட் வசதி என்பதால், இது மிகவும் குறைவான செலவாக பார்க்கப்படுகிறது. பயணத்தின்போது பொது கழிவறைகளை பயன்படுத்துவதில் ஒரு சிலருக்கு சங்கடங்கள் இருக்கும். அவர்ளுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் தற்போது கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து நமது வாழ்க்கை முறையை தலைகீழாக புரட்டி போட்டு வருகிறது.

நடிகர்களின் கேரவனை போல் சாதாரண காரில் டாய்லெட்... செலவு ரொம்ப கம்மி! எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

சமூக இடைவெளியை கடைபிடிப்பதிலும், பொது கழிவறைகளை பயன்படுத்துவதிலும் நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த பிரச்னைக்கும் கூட இது தீர்வாக இருக்கும். எனவே ஓஜெஸ் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நடிகர்களின் கேரவனை போல் சாதாரண காரில் டாய்லெட்... செலவு ரொம்ப கம்மி! எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க

குறிப்பாக மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்த முயற்சியை பாராட்டியுள்ளார். நீங்கள் உங்கள் காரில், இதுபோன்று டாய்லெட் வசதியை ஏற்படுத்த விரும்பினால், ஓஜெஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தை, அவர்களின் சமூக வலை தள பக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ள முடியும். இதுகுறித்து மனோரமா ஆன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles

English summary
This Modified Mahindra Bolero Gets Vacuum Toilet. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X