Just In
- 3 hrs ago
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- 4 hrs ago
350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?
- 6 hrs ago
இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!
- 6 hrs ago
ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Movies
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டொயோட்டா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் மாருதி சுஸுகி கார்கள்...
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 8,500 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 8,312 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது 2 சதவீத வளர்ச்சியாகும். ஆனால் டொயோட்டா நிறுவனத்தின் சந்தை பங்கானது, 3.2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக சுருங்கியுள்ளது.

டொயோட்டா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் விற்பனை செய்த மொத்த கார்களில், சுமார் 5,000 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்கள் ஆகும். டொயோட்டா மற்றும் சுஸுகி நிறுவனங்கள் இடையேயான கூட்டணியின் அடிப்படையில், இந்தியாவில் மாருதி சுஸுகி கார்களை டொயோட்டா நிறுவனம் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இதன்படி மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்களை பெற்று, முறையே க்ளான்சா மற்றும் அர்பன் க்ரூஸர் என்ற பெயர்களில் டொயோட்டா நிறுவனம் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து கொண்டுள்ளது. இதில், க்ளான்சா பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டிலும், அர்பன் க்ரூஸர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

மேலே குறிப்பிட்ட இரண்டு கார்கள் தவிர, டொயோட்டா நிறுவனத்தின் தற்போதைய இந்திய லைன்-அப், யாரிஸ், இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர், கேம்ரி மற்றும் வெல்ஃபயர் ஆகிய கார்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை டொயோட்டா நிறுவனம் சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ஃபேஸ்லிஃப்டுக்கு முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், இதில் ஒரு சில புதிய வசதிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், தோற்றத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட இந்த எம்பிவி தற்போது டைமண்ட்-கட் அலாய் வீல்கள், முன் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 16.26 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 24.33 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா உள்ளது.

இதற்கிடையே ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டொயோட்டா நிறுவனம் தயாராகி வருகிறது. அனேகமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில், டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு எண்டேவர் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உள்ளிட்ட கார்களுடன், டொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியிட்டு வருகிறது. அத்துடன் எம்ஜி க்ளோஸ்ட்டர் வடிவிலும் தற்போது டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சவால் வந்துள்ளது. அதிகரித்து வரும் போட்டியை மனதில் வைத்து, ஃபார்ச்சூனர் எஸ்யூவியை டொயோட்டா மேம்படுத்தவுள்ளது.