விற்பனையில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய மாருதி ஆல்டோ.. 2020 ஜூன் மாதத்தின் டாப் 10 லிஸ்ட்..

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு கொண்டுவரப்பட்டுவிட்டதால் கார்களின் விற்பனை மெதுவாக முன்னேற்றத்தை கண்டு வருகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக கடந்த ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் பெயர்கள் விற்பனை எண்ணிக்கையுடன் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய மாருதி ஆல்டோ.. 2020 ஜூன் மாதத்தின் டாப் 10 லிஸ்ட்..

வெளிவந்துள்ள லிஸ்ட்டின்படி கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான மாடல் என்று பார்த்தால் அது மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ ஆகும். மொத்தம் 7,298 யூனிட்கள் விற்பனையாகி இதில் முதல் இடத்தை பிடித்திருந்தாலும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த கார் சுமார் 18,733 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

விற்பனையில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய மாருதி ஆல்டோ.. 2020 ஜூன் மாதத்தின் டாப் 10 லிஸ்ட்..

இதனுடன் ஒப்பிடும்போது விற்பனையில் இந்த கார் 61 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் முழு ஊரடங்கு பிறப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் இந்தியாவில் அறிமுகமான புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா மாடல் உள்ளது.

விற்பனையில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய மாருதி ஆல்டோ.. 2020 ஜூன் மாதத்தின் டாப் 10 லிஸ்ட்..

கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 7,207 க்ரெட்டா கார்கள் சந்தையில் விற்பனையாகியுள்ளன. இதன் புதிய தலைமுறை இதற்கு சற்று வரவேற்பை பெற்று கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் 2019 ஜூன் மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் வெறும் 14 சதவீதம் மட்டுமே இதன் விற்பனை சரிவை கண்டுள்ளது.

விற்பனையில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய மாருதி ஆல்டோ.. 2020 ஜூன் மாதத்தின் டாப் 10 லிஸ்ட்..

மூன்றாவது இடத்தில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யூவி மாடல் 7,114 மாதிரிகளின் விற்பனையுடன் உள்ளது. இந்த கார் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் விற்பனையாகவில்லை. நான்காம் இடத்தில் 2019 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 32 சதவீத வீழ்ச்சியுடன் மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன்ஆர் மாடல் உள்ளது.

விற்பனையில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய மாருதி ஆல்டோ.. 2020 ஜூன் மாதத்தின் டாப் 10 லிஸ்ட்..

கடந்த மாதத்தில் 6,942 மாதிரிகள் விற்பனையாகியுள்ள இந்த கார் 2019 ஜூனில் 10,228 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இதற்கு அடுத்தும் எட்டாம் இடம் வரையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் தான் உள்ளன. இந்த வகையில் ஐந்தாம் இடத்தில் 5,834 மாதிரிகளின் விற்பனையுடன் மாருதி டிசைர் உள்ளது.

விற்பனையில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய மாருதி ஆல்டோ.. 2020 ஜூன் மாதத்தின் டாப் 10 லிஸ்ட்..
Rank Model Jun-20 Jun-19 Growth
1 Maruti Alto 7,298 18,733 -61.04
2 Hyundai Creta 7,207 8,334 -13.52
3 Kia Seltos 7,114 - -
4 Maruti Wagonr 6,972 10,228 -31.83
5 Maruti Dzire 5,834 14,868 -60.76
6 Maruti Brezza 4,542 8,871 -48.80
7 Maruti Baleno 4,300 13,689 -68.59
8 Maruti Celerio 4,145 4,871 -14.90
9 Hyundai Venue 4,129 8,763 -52.88
10 Tata Tiago 4,069 5,537 -26.51

6வது, 7வது மற்றும் 8வது இடங்களில் முறையே மாருதி பிரெஸ்ஸா, பலேனோ மற்றும் செலிரியோ மாடல்கள் உள்ளன. இதில் பிரெஸ்ஸா 4,542 யூனிட்களும், பலேனோ 4,300 யூனிட்களும், செலிரியோ 4,145 யூனிட்களும் கடந்த மாதத்தில் விற்பனையாகியுள்ளன. இதில் மிக பெரிய விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ள மாடலாக மாருதி பலேனோ உள்ளது.

விற்பனையில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய மாருதி ஆல்டோ.. 2020 ஜூன் மாதத்தின் டாப் 10 லிஸ்ட்..

ஏனெனில் 2019 ஜூனில் இந்த கார் 13,689 மாதிரிகள் விற்பனையாகி இருந்தது. இந்த லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் ஹூண்டாய் வென்யூ 4,129 யூனிட்களுடனும், டாடா டியாகோ 4,069 யூனிட்கள் விற்பனையுடனும் உள்ளன. 2020 மே மாத விற்பனை நிலவரத்துடன் ஒப்பிடுகையில் தற்போது வெளிவந்துள்ள விற்பனை நிலவரம் முற்றிலுமாக வேறுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Cars Sold in June 2020
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X