ஹேட்ச்பேக் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட்... சரிவை கண்ட ஆல்டோ...

கடந்த பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக விற்பனையான டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள் பெயர்கள் விற்பனை எண்ணிக்கையுடன் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

வழக்கம்போல் டாப்-10 ஹேட்ச்பேக் லிஸ்ட்டில் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகியின் கை தான் அதிகளவில் ஓங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் 6 ஹேட்ச்பேக் மாடல்கள் இந்த லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளன.

ஹேட்ச்பேக் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட்... சரிவை கண்ட ஆல்டோ...

மேலும் முதலிடத்திலும் மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கார் தான் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தமாக 18,224 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 18,696 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையான 2019 பிப்ரவரி மாதத்தை விட 3 சதவீதம் அதிகமாகும்.

ஹேட்ச்பேக் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட்... சரிவை கண்ட ஆல்டோ...

இதற்கு அடுத்த இடத்தில் கடந்த ஆண்டு முழுவதும் கணிசமான விற்பனை எண்ணிக்கைகளை பெற்றுவந்த மாருதி வேகன்ஆர் மாடல் உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகமான இந்த ஹேட்ச்பேக் மாடல் 2020 பிப்ரவரியில் 18,235 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

ஹேட்ச்பேக் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட்... சரிவை கண்ட ஆல்டோ...

இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 16 சதவீதம் அதிகம். 2019 பிப்ரவரியில் மாருதி வேகன்ஆர் மாடல் 15,661 என்ற விற்பனை எண்ணிக்கையை சந்தையில் பதிவு செய்திருந்தது. மூன்றாவது இடத்தில் 17,921 யூனிட்கள் விற்பனையுடன் மாருதி ஆல்டோ கார் உள்ளது.

ஹேட்ச்பேக் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட்... சரிவை கண்ட ஆல்டோ...

கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடும் போது மாருதியின் இந்த சிறிய ரக ஹேட்ச்பேக் கார் 28 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஏனெனில் 2019 பிப்ரவரியில் இந்த ஹேட்ச்பேக் கார் 24,751 யூனிட்கள் விற்பனையுடன் முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹேட்ச்பேக் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட்... சரிவை கண்ட ஆல்டோ...

பலேனோ பி2 பிரிவு ஹேட்ச்பேக் இந்த வரிசையில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. 2019 பிப்ரவரியில் 17,944 விற்பனை எண்ணிக்கையை பெற்றிருந்த பலேனோ மாடல் கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் சரிந்து 16,585 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

ஹேட்ச்பேக் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட்... சரிவை கண்ட ஆல்டோ...

மாருதி சுசுகி நிறுவனத்திற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் அதிக இடங்களை பிடித்துள்ள நிறுவனமாக ஹூண்டாய் மோட்டார்ஸ் விளங்குகிறது. இந்நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 10,407 க்ராண்ட் ஐ10 மாடல்களை விற்பனை செய்துள்ளது.

ஹேட்ச்பேக் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட்... சரிவை கண்ட ஆல்டோ...

இதனால் அந்த ஹேட்ச்பேக் கார் இந்த லிஸ்ட்டில் 5-வது இடத்தில் உள்ளது. 2019 பிப்ரவரியில் க்ராண்ட் ஐ10 மாடலின் விற்பனை எண்ணிக்கை 9,065 ஆகும். இதன்மூலம் இந்த கார் 15 சதவீதம் விற்பனையில் முன்னேற்றத்தை கண்டுள்ளது.

ஹேட்ச்பேக் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட்... சரிவை கண்ட ஆல்டோ...

இதற்கு அடுத்து ஆறாவது இடத்தை மாருதி நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகமான எஸ்-பிரெஸ்ஸோ மாடல் 9,578 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் பெற்றுள்ளது. மைக்ரோ எஸ்யூவி ரக காரான எஸ்-பிரெஸ்ஸோ அதன் காம்பெக்ட் தோற்றத்தினால் இந்த ஹேட்ச்பேக் லிஸ்ட்டில் உள்ளது.

ஹேட்ச்பேக் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட்... சரிவை கண்ட ஆல்டோ...

ஏழாவது இடத்தை ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றொரு பிரபல ஹேட்ச்பேக் மாடலான எலைட் ஐ20 கார் பிடித்துள்ளது. 2019 பிப்ரவரியில் 11,547 யூனிட்கள் விற்பனையாகி இருந்த கார் 8,766 என்ற விற்பனை எண்ணிக்கையை கடந்த மாதத்தில் பெற்றுள்ளது.

ஹேட்ச்பேக் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட்... சரிவை கண்ட ஆல்டோ...

இதன்மூலம் எலைட் ஐ20 மாடலின் விற்பனை கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது 24 சதவீதம் குறைந்துள்ளது. மாருதி சுசுகியின் செலிரியோ 6,104 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனையாகியுள்ளது.

ஹேட்ச்பேக் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட்... சரிவை கண்ட ஆல்டோ...

இதனால் இந்த லிஸ்ட்டில் எட்டாவது இடத்தை பிடித்தது மட்டுமில்லாமல், இந்த லிஸ்ட்டில் உள்ள மற்ற அனைத்து மாடல்களை விடவும் விற்பனையில் அதிகளவில் முன்னேற்றத்தை (68%) கண்டுள்ளது. ஏனெனில் கடந்த மாதத்தில் 6,104 யூனிட்கள் விற்பனையாகியுள்ள இந்த கார் 2019 பிப்ரவரியில் வெறும் 3,631 என்ற விற்பனை எண்ணிக்கையை மட்டுமே சந்தையில் பெற்றிருந்தது.

Rank Model February 2020 February 2019 Difference (in percentage)
1 Maruti Suzuki Swift 18,696 18,224 3%
2 Maruti Suzuki Wagon R 18,235 15,661 16%
3 Maruti Suzuki Alto 17,921 24,751 -28%
4 Maruti Suzuki Baleno 16,585 17,944 -8%
5 Hyundai Grand i10 10,407 9,065 15%
6 Maruti Suzuki S-Presso 9,578 New Launch -
7 Hyundai Elite i20 8,766 11,547 -24%
8 Maruti Suzuki Celerio 6,104 3,631 68%
9 Hyundai Santro 4,200 6,875 -39%
10 Renault Kwid 4,187 5,050 -17%
ஹேட்ச்பேக் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட்... சரிவை கண்ட ஆல்டோ...

ஒன்பதாவது இடத்தில் 4,200 யூனிட்கள் விற்பனையுடன் ஹூண்டாய் சாண்ட்ரோ மாடலும், 10-வது இடத்தில் சாண்ட்ரோ மாடலை விட 13 யூனிட்கள் மட்டுமே குறைவாக விற்பனையாகி ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் மாடலும் உள்ளன.

ஹேட்ச்பேக் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட்... சரிவை கண்ட ஆல்டோ...

இவை இரண்டுமே 2019 பிப்ரவரி மாதத்தை விட விற்பனையில் சரிவை அடைந்திருந்தாலும் ஹூண்டாய் சாண்ட்ரோ அதிகப்பட்சமாக 39 சதவீதம் விற்பனை வீழ்ச்சியை இந்திய சந்தையில் பதிவு செய்துள்ளது.

ஹேட்ச்பேக் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட்... சரிவை கண்ட ஆல்டோ...

இது கடந்த மாதத்திற்கான விற்பனை நிலவரம், இந்த மாத ஹேட்ச்பேக் விற்பனையில் என்னென்ன மாற்றங்கள் நிகழவுள்ளன என்பதை அடுத்த மாதத்தில் பார்ப்போம். ஏனெனில் இந்தியாவில் புதிய மாசு உமிழ்வு விதி அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதால் இந்த லிஸ்ட்டில் பெரிய அளவில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Hatchbacks Sold In February 2020 - Table
Story first published: Saturday, March 7, 2020, 19:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more