எல்இடி ஹெட்லைட்களுடன் ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் தரமான 10 கார்கள் இவைதான்!! இத தெரிஞ்சிக்கோங்க

பொதுவாக தீபாவளி பண்டிகை உள்ள மாதத்தில் புதிய கார்களை வாங்கவே பலர் விரும்புவர். இதன் காரணமாக தீபாவளிக்கான சலுகைகளை அந்த மாதம் முடியுற வரையில் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிக்கும். நீண்ட மாதங்களாக புதிய கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கு பெரியதாக எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் இவ்வாறான சலுகைகளை பார்த்துவிட்டு உடனடியாக கார் வாங்க நினைப்போருக்கு, எந்த கார் வாங்குவது, நமது பட்ஜெட்டில் தற்சமயம் எந்த பிராண்டின் கார் வரவேற்பை பெற்றுவருகிறது என்கிற குழப்பம் எழுவது இயல்புதான். அத்தகையவர்களுக்காக, ரூ.15 லட்சத்திற்குள் ப்ரீமியம் தரத்திலான எல்இடி விளக்குகளுடன் விற்பனைக்கு கிடைக்கும் டாப்-10 கார்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

எல்இடி ஹெட்லைட்களுடன் ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் தரமான 10 கார்கள் இவைதான்!! இத தெரிஞ்சிக்கோங்க

மாருதி சுஸுகி இக்னிஸ் (ரூ.4.89 லட்சம் - ரூ.7.19 லட்சம்)

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள மாருதியின் அழகான தயாரிப்புகளுள் ஒன்று இக்னிஸ். யு-வடிவிலான டிஆர்எல்களுடன் எல்இடி ஹெட்லேம்ப்களுடன் விற்பனை செய்யப்படுகின்ற இந்த ஹேட்ச்பேக் கார் 7 வேரியண்ட்கள் மற்றும் 9 நிறத்தேர்வுகளில் கிடைக்கிறது.

எல்இடி ஹெட்லைட்களுடன் ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் தரமான 10 கார்கள் இவைதான்!! இத தெரிஞ்சிக்கோங்க

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (ரூ.5.19 லட்சம் - ரூ.8.02 லட்சம்)

தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்தில் ட்ரெண்டியான ஹேட்ச்பேக் காராக விளங்கும் ஸ்விஃப்ட் அதேநேரம் மாருதி நிறுவனத்தின் அடையாள ஹேட்ச்பேக் ஆகவும் விளங்குகிறது. ஸ்விஃப்ட்டின் இந்த பண்புகளை மேலும் பலப்படுத்தும் விதமாக இந்த காரில் எல்இடி ஹெட்லேம்ப்களை மாருதி நிறுவனம் வழங்குகிறது.

எல்இடி ஹெட்லைட்களுடன் ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் தரமான 10 கார்கள் இவைதான்!! இத தெரிஞ்சிக்கோங்க

மாருதி சுஸுகி டிசைர் (ரூ.5.89 - ரூ.8.8 லட்சம்)

சுஸுகியின் சப்-4 மீட்டர் செடான் காரான டிசைர் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் செடான் காராகவும் உள்ளது. எரிபொருள் திறனை அதிகளவில் வழங்கும் இந்த மாருதி சுஸுகியின் தயாரிப்பும் எல்இடி ஹெட்லேம்ப்களை பெற்று வருகிறது.

எல்இடி ஹெட்லைட்களுடன் ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் தரமான 10 கார்கள் இவைதான்!! இத தெரிஞ்சிக்கோங்க

மாருதி சுஸுகி பலேனோ (ரூ.5.63 - ரூ.8.96 லட்சம்) / டொயோட்டா க்ளான்ஸா (ரூ.7.01 - ரூ.8.96 லட்சம்)

மாருதி சுஸுகி, டொயோட்டா என இந்த இரு செடான் கார்கள் விற்பனை செய்யப்படும் பிராண்ட்கள் தான் வேறு வேறே தவிர, தோற்றத்தில் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் உள்ளன. இதுவும் எல்இடி ஹெட்லைட்களை பெற்று விற்பனைக்கு வந்தாலும், எல்இடி ஃபாக் விளக்குகள் வழங்கப்படுவதில்லை.

எல்இடி ஹெட்லைட்களுடன் ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் தரமான 10 கார்கள் இவைதான்!! இத தெரிஞ்சிக்கோங்க

நிஸான் மேக்னைட் (ரூ.5.5 - ரூ.9.55 லட்சம்- எதிர்பார்ப்பு)

நிஸானின் புதிய தயாரிப்பான மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி கார் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. மற்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு சவாலான மலிவான விலையில் மிக விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த காரில் ஹெட்லேம்ப்கள் மட்டுமின்றி இண்டிகேட்டர்கள் மற்றும் மூடுபனி விளக்குகளும் எல்இடி தரத்தில் வழங்கப்படவுள்ளன.

எல்இடி ஹெட்லைட்களுடன் ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் தரமான 10 கார்கள் இவைதான்!! இத தெரிஞ்சிக்கோங்க

ஹோண்டா ஜாஸ் (ரூ.7.49 - ரூ.9.73 லட்சம்)

குறிப்பிட்ட காஸ்மெட்டிக் அப்டேட்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் ஜாஸ் மாடலின் புதிய தலைமுறையாக ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கூடுதல் தொழிற்நுட்பங்கள் மட்டுமின்றி டிஆர்எல்களுடன் புதிய எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி மூடுபனி விளக்குகளையும் அப்கிரேட்களாக ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது.

எல்இடி ஹெட்லைட்களுடன் ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் தரமான 10 கார்கள் இவைதான்!! இத தெரிஞ்சிக்கோங்க

ஹூண்டாய் ஐ20 (ரூ.6.79 - ரூ.11.32 லட்சம்)

ஹூண்டாய் நிறுவனம் ஐ20-ன் பெயரில் ‘எலைட்' என்ற வார்த்தையை மட்டுமே நீக்கியுள்ளதே தவிர்த்து வசதிகளில் எந்த குறையும் இல்லை. இதன் மூன்றாம் தலைமுறை மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி மூடுபனி விளக்குகள் உள்ளிட்டவற்றால் இதன் விலை மலிவானதாக நிர்ணயிக்கப்பட போவதில்லை.

எல்இடி ஹெட்லைட்களுடன் ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் தரமான 10 கார்கள் இவைதான்!! இத தெரிஞ்சிக்கோங்க

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா (ரூ.7.34 - ரூ.11.4 லட்சம்)

மாருதியின் சப்-4மீ எஸ்யூவி காரான விட்டாரா பிரெஸ்ஸா அதன் பிரிவில் நிலவும் போட்டியினை சிறப்பாக கையாண்டு வருகிறது. மாருதியின் 7-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்டேரிங்கில் ஆடியோ கண்ட்ரோல் உள்ளிட்டவற்றுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டெயில்லைட்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

எல்இடி ஹெட்லைட்களுடன் ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் தரமான 10 கார்கள் இவைதான்!! இத தெரிஞ்சிக்கோங்க

கியா சொனெட் (ரூ.6.71 - ரூ.12.99 லட்சம்)

இந்திய சந்தைக்கு புதிய பிராண்டான கியாவில் இருந்து மூன்றாவதாக வெளிவந்த தயாரிப்பு தான் சொனெட் ஆகும். இந்தியாவில் தயாரிக்கப்பட்டு மற்ற வெளிநாட்டு சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படும் அளவிற்கு உள்ள இந்த கியா காரின் தரம் எவ்வாறு இருக்கும் என்பதை பார்த்து கொள்ளுங்கள்.

எல்இடி ஹெட்லைட்களுடன் ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் தரமான 10 கார்கள் இவைதான்!! இத தெரிஞ்சிக்கோங்க

இந்த டாப்-10 காரில் அதிகளவில் மாருதி நிறுவனத்தின் தயாரிப்பு தான் உள்ளது. இதன் மூலம் அந்த பிராண்டின் ஆதிக்கம் இந்திய சந்தையில் எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறியலாம். இந்த டாப் 10 கார்களில் ஹோண்டா சிட்டி செடான், ஹூண்டாய் வெர்னா, மாருதி சுஸுகி சியாஸ், ஃபோக்ஸ்வேகன் வெண்டோ, மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6, நிஸான் கிக்ஸ் உள்ளிட்டவற்றையும் சேர்த்திருக்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Top 10 Most Affordable Cars Under 15 Lakh With Led Headlights
Story first published: Monday, November 16, 2020, 20:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X