மந்தமான நிலையில் செடான் கார்களின் விற்பனை- இப்போதைக்கு நம்பர்-1 செடான் கார் மாடல் எது தெரியுமா?

கடந்த 2020 நவம்பர் மாதத்தில் அதிகளவில் விற்பனையான டாப் 10 செடான் கார்களின் பெயர்கள் அவற்றின் விற்பனை எண்ணிக்கையுடன் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

மந்தமான நிலையில் செடான் கார்களின் விற்பனை- இப்போதைக்கு நம்பர்-1 செடான் கார் மாடல் எது தெரியுமா?

சமீபத்திய ஆண்டுகளில், வெவ்வேறு பிரிவுகளினால் செடானின் புகழ் பெரிய அளவில் சுருங்கிவிட்டது. இதனால்தான் புதிய செடான் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு ஆண்டுகளாவிட்டன.

மந்தமான நிலையில் செடான் கார்களின் விற்பனை- இப்போதைக்கு நம்பர்-1 செடான் கார் மாடல் எது தெரியுமா?

இருப்பினும் மாருதி டிசைர் காம்பெக்ட் செடான் சிறப்பான விற்பனை எண்ணிக்கைய ஒவ்வொரு மாதமும் பதிவு செய்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால், கடந்த நவம்பர் மாதத்தில் அதிகளவில் விற்பனையான செடான் கார்கள் லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்துள்ளது.

மந்தமான நிலையில் செடான் கார்களின் விற்பனை- இப்போதைக்கு நம்பர்-1 செடான் கார் மாடல் எது தெரியுமா?

கடந்த மாதத்தில் மட்டும் 13,536 டிசைர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. என்னதான் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் செடான் காராக இருப்பினும் இந்த விற்பனை எண்ணிக்கை 2019 நவம்பர் மாதத்தை காட்டிலும் 23 சதவீதம் குறைவு.

மந்தமான நிலையில் செடான் கார்களின் விற்பனை- இப்போதைக்கு நம்பர்-1 செடான் கார் மாடல் எது தெரியுமா?

ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 17,659 டிசைர் கார்கள் விற்கப்பட்டு இருந்தன. இரண்டாவது இடத்தில் மாருதி டிசைரின் போட்டி மாடலான ஹோண்டா கார்ஸின் அமேஸ் உள்ளது. இதன் விற்பனை எண்ணிக்கைக்கும் டிசைரின் விற்பனைக்கு எண்ணிக்கைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.

மந்தமான நிலையில் செடான் கார்களின் விற்பனை- இப்போதைக்கு நம்பர்-1 செடான் கார் மாடல் எது தெரியுமா?

2020 நவம்பரில் 4,706 ஹோண்டா அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த மாடல் டிசைர் போல் அல்லாமல், 2019 நவம்பர் மாதத்தை விட கடந்த மாதத்தில் 43 சதவீதம் விற்பனையில் முன்னேறியுள்ளது. இந்த ஹோண்டா தயாரிப்பை தொடர்ந்து மற்றொரு ஹோண்டா தயாரிப்பாக சிட்டி செடான் மூன்றாவது இடத்தில் உள்ளது.

மந்தமான நிலையில் செடான் கார்களின் விற்பனை- இப்போதைக்கு நம்பர்-1 செடான் கார் மாடல் எது தெரியுமா?

2019 நவம்பரில் 1500 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த இந்த ஹோண்டா செடான் கார் கடந்த மாதத்தில் 3,523 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 135 சதவீதம் அதிகமாகும். ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி 2020 துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

மந்தமான நிலையில் செடான் கார்களின் விற்பனை- இப்போதைக்கு நம்பர்-1 செடான் கார் மாடல் எது தெரியுமா?

அப்போதில் இருந்து ஹோண்டா நிறுவனம் அதன் பழைய முதலிடத்தை செடான் கார்கள் பிரிவில் பிடித்து வருகிறது. இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தை ஹூண்டாய் மோட்டார்ஸின் புதிய அறிமுகமான அவ்ரா காம்பெக்ட் செடான் பிடித்துள்ளது.

மந்தமான நிலையில் செடான் கார்களின் விற்பனை- இப்போதைக்கு நம்பர்-1 செடான் கார் மாடல் எது தெரியுமா?

கடந்த நவம்பர் மாதத்தில் இந்த கார் 3,063 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 1,612 அவ்ரா கார்கள் விற்பனையான 2019 நவம்பர் மாதத்தை காட்டிலும் 90 சதவீதம் அதிகமாகும். ஐந்தாவது இடத்தில் மாருதி சியாஸ் 1,870 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் உள்ளது.

மந்தமான நிலையில் செடான் கார்களின் விற்பனை- இப்போதைக்கு நம்பர்-1 செடான் கார் மாடல் எது தெரியுமா?

இந்த டாப்-10 லிஸ்ட்டில் அடுத்த ஐந்து இடங்களில் ஹூண்டாய் வெர்னா (1,487), டாடா டிகோர் (1,259), ஸ்கோடா ரேபிட் (813), டொயோட்டா யாரிஸ் (345) மற்றும் ஃபோர்டு அஸ்பியர் (267) உள்ளிட்ட கார்கள் வரிசைபடி உள்ளன. இந்த 10 கார்களில் 5 காம்பெக்ட் செடான் கார்களும், 5 நடுத்தர அளவு கொண்ட செடான் கார்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Most Sold Sedans In Nov 2020. Maruti Dzire Again Top.
Story first published: Sunday, December 13, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X