2020 பிப்ரவரியில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-20 கார்கள்...

2020 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-20 கார்களின் பெயர்கள் ஏற்றுமதி எண்ணிக்கையுடன் வெளிவந்துள்ளன. இந்திய சந்தையில் தொடர்ந்து மந்த நிலை நிலவி வருவதால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த சூழலை வெளிநாட்டு சந்தைக்களுக்கு கார்களை ஏற்றுமதி செய்ய பயன்படுத்தி வருகின்றன.

2020 பிப்ரவரியில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-20 கார்கள்...

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் மூலம் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு சந்தைகளுக்கு சென்ற கார்களின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வருகிறது. இந்த டாப்-20 கார்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல் தான் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

Rank Model February 2020 Exports
1 Ford EcoSport 8,472
2 Nissan Sunny 6,371
3 Volkswagen Vento 5,818
4 Chevrolet Beat 4,991
5 Hyundai Creta 4,538
6 Kia Seltos 3,569
7 Maruti Suzuki Baleno 3,256
8 Hyundai Verna 2,510
9 Maruti Suzuki S-Presso 1,659
10 Renault Kwid 1,254
11 Ford Aspire 1,246
12 Volkswagen Polo 1,127
13 Maruti Suzuki Swift 1,121
14 Hyundai Venue 1,072
15 Maruti Suzuki Dzire 989
16 Maruti Suzuki Ignis 836
17 Maruti Suzuki Alto 798
18 Jeep Compass 746
19 Toyota Liva 617
20 Maruti Suzuki Ertiga 479
2020 பிப்ரவரியில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-20 கார்கள்...

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கடந்த பிப்ரவரியில் மொத்தம் 8,500 கார்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகியுள்ளன. இந்த லிஸ்ட்டில் ஃபோர்டு நிறுவனத்தின் அஸ்பியர் காம்பெக்ட் செடான் மாடலும் உள்ளது. 2020 பிப்ரவரியில் 1,246 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த கார் இந்த டாப்-20 வரிசையில் 11வது இடத்தை பிடித்துள்ளது.

2020 பிப்ரவரியில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-20 கார்கள்...

இதன் ஏற்றுமதி எண்ணிக்கை, 965 கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 2019 பிப்ரவரி மாதத்தை விட 29 சதவீதம் அதிகமாகும். ஃபோர்டு நிறுவனத்தை தவிர்த்து இந்திய சந்தையில் நீண்ட வருடங்களாக வலுவாக காலூன்ற போராடி வரும் நிஸான்-ரெனால்ட் கூட்டணியின் கார்களுக்கு வெளிநாட்டு சந்தைக்களில் அமோக வரவேற்பு கிடைக்கிறது போலும்.

2020 பிப்ரவரியில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-20 கார்கள்...

ஏனெனில் இந்நிறுவனங்களின் இந்திய தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த வகையில் நிஸானின் சன்னி செடான் 6,371 யூனிட்கள் ஏற்றுமதியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

2020 பிப்ரவரியில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-20 கார்கள்...

இதன் ஏற்றுமதியும் 60 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது. நிஸானின் கூட்டணி நிறுவனமான ரெனால்ட்டின் சமீபத்திய அப்டேட் மாடலான க்விட் இந்த லிஸ்ட்டில் 10வது இடத்தில் உள்ளது. இந்த கார் 2019 பிப்ரவரியை விட இந்த பிப்ரவரியில் 199 சதவீதம் அதிகமாக 1,254 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் வெறும் 400 க்விட் கார்கள் மட்டும் தான் ஏற்றுமதியாகி இருந்தது.

2020 பிப்ரவரியில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-20 கார்கள்...

இதேபோல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வெண்டோ மற்றும் போலோ மாடல்களும் இந்த லிஸ்ட்டில் உள்ளன. இதில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள வெண்டோ மொத்தம் 5,818 யூனிட்களும், 12வது இடத்தில் உள்ள போலோ 1,127 யூனிட்களும் 2020 பிப்ரவரியில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் போலோவின் ஏற்றுமதி எண்ணிக்கை கடந்த பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் சுமார் 140 சதவீதம் அதிகரித்துள்ளது.

2020 பிப்ரவரியில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-20 கார்கள்...

இந்த டாப்-20 கார்கள் லிஸ்ட்டில் நான்காவது இடத்தில் 4,991 யூனிட்கள் ஏற்றுமதியுடன் செவ்ரோலெட் பீட் ஹேட்ச்பேக் கார் உள்ளது. நான்காவது இடத்தை பிடித்தாலும் வெளிநாட்டு சந்தைகளில் இதன் விற்பனை எண்ணிக்கை 2019 பிப்ரவரியில் பதிவு செய்த 6,674 யூனிட்களில் இருந்து குறைந்துள்ளது. இந்த விற்பனை குறைவுக்கு காரணம், ஜெனரெல் மோட்டார்ஸ் இந்தியாவில் உள்ள தனது தலேகான் தொழிற்சாலையை விற்றது தான்.

MOST READ:ஆர்சி, டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு!

2020 பிப்ரவரியில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-20 கார்கள்...

இவற்றிற்கு அடுத்து ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்று தயாரிப்பு மாடல்கள் இந்த வரிசையில் உள்ளன. க்ரெட்டா, வெர்னா, வென்யூ என்ற இந்த மூன்று மாடல்களில், லிஸ்ட்டில் ஐந்தாவது இடத்தில் உள்ள க்ரெட்டாவிற்கு 45 சதவீதம் வெளிநாட்டு தேவை அதிகரித்து 4,538 யூனிட்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகியுள்ளன.

2020 பிப்ரவரியில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-20 கார்கள்...

மற்ற இரு ஹூண்டாய் மாடல்களான வெர்னா 2,510 யூனிட்களுடன் எட்டாவது இடத்தையும், வென்யூ 1,072 யூனிட்கள் ஏற்றுமதியுடன் 14வது இடத்திலும் உள்ளன. க்ரெட்டாவிற்கு அடுத்து ஆறாவது இடத்தில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் இந்திய அறிமுக மாடலான செல்டோஸ் எஸ்யூவி 3,569 யூனிட்கள் ஏற்றுமதி எண்ணிக்கையுடன் உள்ளது.

MOST READ:தேசிய ஊரடங்கு உத்தரவு.. ஆட்டம் போடும் அரசியல்வாதிகள்... மக்களை அதிரவைத்த சம்பவம்!

2020 பிப்ரவரியில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-20 கார்கள்...

இந்த டாப்-20 லிஸ்ட்டில் அதிகளவிலான கார்களை கொண்ட நிறுவனம் என்றால் அது மாருதி சுசுகி தான். இந்நிறுவனத்தின் பலேனோ, எஸ்-பிரெஸ்ஸோ, ஸ்விஃப்ட், டிசைர், இக்னிஸ், ஆல்டோ மற்றும் எர்டிகா போன்ற மாடல்கள் இந்த டாப்-20 லிஸ்ட்டில் உள்ளன. இதில் பலேனோ மாடல் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2020 பிப்ரவரியில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-20 கார்கள்...

மீதியிருக்கும் மற்ற இரு மாடல்களாக டொயோட்டா லிவா மற்றும் எஃப்சிஏ-வின் ஜீப் காம்பஸ் கார்கள் உள்ளன. லிஸ்ட்டில் இவை இரண்டும் முறையே 18வது மற்றும் 19வது இடத்தில் பெற்றுள்ளன. கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைக்களில் விற்பனை சிறிது எழுச்சியை பெற்றுள்ளது.

MOST READ:கொரோனா வைரசுக்கு எதிரான போர்... மிகப்பெரிய உதவியை செய்து நெகிழ வைத்த ஓலா... என்னனு தெரியுமா?

2020 பிப்ரவரியில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-20 கார்கள்...

ஆனால் தற்போது ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மற்றொரு தலைவலியாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் அனைத்து தொழிற்சாலைகளும் தேதி குறிப்பிடாமல் மூடப்பட்டுள்ளன. இது கண்டிப்பாக நிறுவனங்களின் பொருளாதாரத்தை மிக பெரிய அளவில் பாதிக்க செய்யும்.

Most Read Articles

மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Top-20 Cars Exported From India In February 2020: Passenger Vehicle Export Market Registers YoY Grow
Story first published: Wednesday, April 1, 2020, 11:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X