ஆட்டோ எக்ஸ்போவை அலங்கரிக்கும் அட்டகாசமான 5 கான்செப்ட் கார்கள்!

இந்த முறை ஆட்டோ எக்ஸ்போவில் விதவிதமான கான்செப்ட் கார்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அதில், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அட்டகாசமான 7 கான்செப்ட் கார் மாடல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். ஆட்டோ எக்ஸ் செல்பவர்கள் இந்த கான்செப்ட் கார்களை தவறாமல் பார்த்துவிட்டு வாருங்கள்.

ஹவல் எச் கான்செப்ட்

ஹவல் எச் கான்செப்ட்

சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் தனது கீழ் செயல்படும் ஹவல் கார் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு முன்னோட்டமாக ஆட்டோ எக்ஸ்போவில் பல கார் மாடல்களை காட்சிப்படுத்தி உள்ளது. இதில், அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய ஹவல் எச் என்ற கான்செப்ட் எஸ்யூவி கார் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவை அலங்கரிக்கும் டாப் 5 கான்செப்ட் கார்கள்!

இந்த காரின் அடிப்படையில் புதிய மிட்சைஸ் எஸ்யூவி மாடலை கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டைலான டிசைன், அதிக தொழில்நுட்ப அம்சங்கள் இந்த காரின் முக்கிய அம்சங்களாக இருக்கும். இந்த கார் தயாரிப்பு நிலைக்கு உகந்த பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கிறது. எனவே, விரைவில் இதன் அடிப்படையில் புதிய எஸ்யூவி மாடலை எதிர்பார்க்கலாம்.

மஹிந்திரா ஃபன்ஸ்டர்

மஹிந்திரா ஃபன்ஸ்டர்

மஹிந்திரா நிறுவனத்தின் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஃபன்ஸ்டெர் எலெக்ட்ரிக் கான்செப்ட் கவனத்தை சுலபமாக ஈர்க்கிறது. ஏனெனில், மேலே கூரை அமைப்பு எதுவும் இல்லாமல் திறந்த அமைப்புடன் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கான்செப்ட் மாடலின் சில டிசைன் அம்சங்கள், இரண்டாம் தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆட்டோ எக்ஸ்போவை அலங்கரிக்கும் டாப் 5 கான்செப்ட் கார்கள்!

இந்த கான்செப்ட் மின்சார மாடலாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கான்செப்ட் காரில் 59.2kWh பேட்டரி தொகுப்பு உள்ளது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 520 கிமீ தூரம் வரை செல்லுமாம். இரண்டு மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 313 எச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 5 வினாடிகளில் எட்டிவிடும்.

மாருதி ஃப்யூச்சரோ இ

மாருதி ஃப்யூச்சரோ இ

ஆட்டோ எக்ஸ்போவில் முதலாவதாக நடந்த நிகழ்ச்சியில் மாருதி ஃப்யூச்சரோ இ என்ற புத்தம் புதிய கான்செப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் கூபே வடிவிலான எஸ்யூவி போன்று டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், வலிமையான வீல் ஆர்ச்சுகள் மிக கம்பீரமாக இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவை அலங்கரிக்கும் டாப் 5 கான்செப்ட் கார்கள்!

இந்த கான்செப்ட் அடிப்படையில் கியா செல்டோஸ் காரின் போட்டியாளரை மாருதி அறிமுகப்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், மாருதியின் எதிர்கால எஸ்யூவி மாடல்களில் இந்த கான்செப்ட் மாடலின் டிசைன் அம்சங்கள் பயன்படுத்தப்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.

 கியா சொனெட்

கியா சொனெட்

கியா மோட்டார் நிறுவனம் செல்டோஸ் கார் மூலமாக எஸ்யூவி மார்க்கெட்டை அதகளப்படுத்தி வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் செல்டோஸ் காரைவிட குறைவான விலை காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க உள்ளது. இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைத்துள்ளது கியா மோட்டார் நிறுவனம். கியா சொனெட் என்ற பெயரிலான இந்த புதிய கான்செப்ட் கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஆட்டோ எக்ஸ்போவை அலங்கரிக்கும் டாப் 5 கான்செப்ட் கார்கள்!

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பாரம்பரிய க்ரில் அமைப்பு, நேர்த்தியான வடிவமைப்புடன் மிடுக்கான தோற்றம், உட்புறத்தில் பெரிய தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றிருக்கிறது. இதன் தயாரிப்பு நிலை மாடல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா சியரா

டாடா சியரா

டாடா மோட்டார்ஸ் அரங்கில் எல்லோரையும் வசீகரிக்கும் மாடலாக மாறி இருக்கிறது டாடா சியரா கான்செப்ட் எஸ்யூவி. பழைய டாடா சியரா ஆஃப்ரோடு எஸ்யூவியின் டிசைனை மனதில் வைத்து புதிய டிசைன் கொள்கையில், ஏராளமான நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவை அலங்கரிக்கும் டாப் 5 கான்செப்ட் கார்கள்!

குறிப்பாக, இதன் பின்புற ஜன்னலும், கூரையும் இணைந்தாற்போல் கொடுக்கப்பட்டு இருக்கும் கண்ணாடி கூரை அமைப்பு பழைய சியரா காரை நினைவூட்டுவதாக இருக்கிறது. இந்த கார் தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்படுவதில் சந்தேகம் இருந்தாலும், ஆட்டோ எக்ஸ்போவில் தவறாமல் பார்த்துவிட வேண்டிய மாடல்களில் ஒன்றாக கூறலாம்.

Most Read Articles

English summary
Here are 5 top concept car models showcased at the 2020 Auto Expo.
Story first published: Saturday, February 8, 2020, 13:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X