இந்தியாவில் ரூ.1 கோடிக்குள் விற்பனையாகும் டாப்-5 இரு-கதவு ஸ்போர்ட்ஸ் கார்கள் இவைதான்...

இந்தியா, உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தைகளில் ஒன்று. இந்த ஒரு விஷயம் தான் மற்ற வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் நுழைய காரணமாக உள்ளது. பெரிய அளவிலான சந்தையாக இருப்பினும் வளர்ந்துவரும் நாடாக இந்தியா உள்ளதால் பெரும்பான்மையாக பட்ஜெட் ரக கார்களே அதிகளவில் விற்பனையாகுகின்றன.

அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் சாலைகளின் தரமும் சொல்லும்படியாக இல்லாததால் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் குறைவாக கொண்ட ஸ்போர்ட்ஸ் ரக கார்களை வாடிக்கையாளர்கள் கண்டு கொள்வதில்லை. இருப்பினும் இந்தியாவில் சில ஸ்போர்ட்ஸ் கார்கள் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ரூ.1 கோடிக்குள் இரு கதவுகளை மட்டுமே கொண்ட டாப்-5 ஸ்போர்ட்ஸ் கார்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் ரூ.1 கோடிக்குள் விற்பனையாகும் டாப்-5 இரு-கதவு ஸ்போர்ட்ஸ் கார்கள் இவைதான்...

1. பிஎம்டபிள்யூ இசட்4 ரோட்ஸ்டர் - ரூ.66 - 80.65 லட்சம்

இந்திய சந்தையில் தற்சமயம் மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டுவரும் ஒரே ஸ்போர்ட்ஸ் ரக காராக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இசட்4 ரோட்ஸ்டர் உள்ளது. தற்சமயம் இரு விதமான ட்ரிம்களில் விற்பனை செய்யப்பட்டு இந்த காரின் எஸ்ட்ரைவ் 20ஐ வேரியண்ட்டின் விலை ரூ.66 லட்சமாகும்.

டாப் வேரியண்ட்டான எம்40ஐ-ன் விலை ரூ.80.5 லட்சமாக உள்ளது. இதில் இசட் எஸ்ட்ரைவ் 20ஐ ட்ரிம்மில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 200 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இந்தியாவில் ரூ.1 கோடிக்குள் விற்பனையாகும் டாப்-5 இரு-கதவு ஸ்போர்ட்ஸ் கார்கள் இவைதான்...

இதன் டாப் வேரியண்ட்டில் வழங்கப்படும் சற்று பெரியதான 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 345 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. இந்த இரு வேரியண்ட்களிலும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் பின்சக்கர ட்ரைவ் செட்அப் நிலையாக வழங்கப்படுகிறது.

இந்தியாவில் ரூ.1 கோடிக்குள் விற்பனையாகும் டாப்-5 இரு-கதவு ஸ்போர்ட்ஸ் கார்கள் இவைதான்...

2. ஃபோர்டு மஸ்டங் - ரூ.74.62 லட்சம்

எக்ஸ்ஷோரூமில் ரூ.74.62 லட்சத்தை விலையாக கொண்டுள்ள ஃபோர்டு நிறுவனத்தின் மஸ்டங் மாடல் முதன்முதலாக இந்தியாவில் 2016ல் ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக காட்சிப்படுத்தப்பட்டது. அதன்பின் இந்த கார் அந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்தியாவில் ரூ.1 கோடிக்குள் விற்பனையாகும் டாப்-5 இரு-கதவு ஸ்போர்ட்ஸ் கார்கள் இவைதான்...

ஃபோர்டு நிறுவனம் மஸ்டங் மாடலை ஜிடி ஃபாஸ்ட்பேக் என்ற ஒரே ஒரு வேரியண்ட்டாக சிபியூ முறையில் சந்தைப்படுத்தி வருகிறது. அதிகப்பட்சமாக 401 பிஎச்பி பவரையும், 515 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய இதன் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின், ஆற்றலை 6-ஸ்பீடு செலக்ட்ஷிஃப்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக காருக்கு வழங்குகிறது.

நார்மல், ஸ்போர்ட், ட்ராக் மற்றும் ஸ்னோ/வெட் என்ற நான்கு விதமான ட்ரைவிங் மோட்களை கொண்டிருக்கும் ஃபோர்டு மஸ்டங் மாடல் உலக சந்தையில் சுமார் 56 ஆண்டுகளாக விற்பனையில் உள்ளது. இதன் வரலாற்றை பற்றி அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

இந்தியாவில் ரூ.1 கோடிக்குள் விற்பனையாகும் டாப்-5 இரு-கதவு ஸ்போர்ட்ஸ் கார்கள் இவைதான்...

3. பிஎம்டபிள்யூ எம்2 காம்பெடிஷன் - ரூ.83.40 லட்சம்

இந்த வரிசையில் மற்றொரு பிஎம்டபிள்யூ மாடலாக உள்ள எம்2 காம்பெடிஷன் கார் மட்டும் தான் இந்நிறுவனத்தில் இருந்து எம் பேட்ஜ்ஜில் முழு-நீள செயல்திறன்மிக்க காராக உள்ளது. இதுமட்டுமின்றி இந்த காரை தவிர்த்து எம் பேட்ஜில் வேறெந்த மாடலையும் ஒரு கோடி ரூபாய்க்கு உள்ளாக வாங்க முடியாது.

இந்தியாவில் ரூ.1 கோடிக்குள் விற்பனையாகும் டாப்-5 இரு-கதவு ஸ்போர்ட்ஸ் கார்கள் இவைதான்...

இரு கதவு அமைப்பில் நான்கு இருக்கைகள் கொண்ட காராக விளங்கும் பிஎம்டபிள்யூ எம்2 காம்பெடிஷன் மாடலில் 3.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு இன்லைன் 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 416 பிஎச்பி பவரையும், 550 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

ட்ரான்ஸ்மிஷனுக்கு எம் ட்யூல்-க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷனை ட்ரைவ்லாஜிக் உடன் பெற்றுள்ள இந்த கார் 0-விலிருந்து 100 kmph என்ற வேகத்தை 4.2 வினாடிகளில் அடைந்துவிடும். இதன் அதிகப்பட்ச வேகம் 250 kmph ஆகும்.

இந்தியாவில் ரூ.1 கோடிக்குள் விற்பனையாகும் டாப்-5 இரு-கதவு ஸ்போர்ட்ஸ் கார்கள் இவைதான்...

4. போர்ஷே 718 கேமன் மற்றும் 718 பாக்ஸ்டர் - ரூ.85.95- 89.95 லட்சம்

ஸ்போர்ட்ஸ் கார்கள் தயாரிப்பில் போர்ஷே நிறுவனம் உலகளவில் பிரபலமானது. செயல்திறன் அடிப்படையில் பார்த்தால் இந்நிறுவனத்தின் 911, கயென்னே எஸ்யூவி, பனமெரா போன்ற மாடல்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் ரூ.1 கோடிக்குள் இரு-கதவு அமைப்பில் 718 கேமன் மற்றும் 718 பாக்ஸ்டர் என்ற இரு ஸ்போர்ட்ஸ் ரக கார்கள் தான் உள்ளன.

இந்தியாவில் ரூ.1 கோடிக்குள் விற்பனையாகும் டாப்-5 இரு-கதவு ஸ்போர்ட்ஸ் கார்கள் இவைதான்...

இதில் 718 கேமன், மிட்-என்ஜின்டு, 3-கதவு, இரு-இருக்கைகள் அமைப்பை கொண்ட ஃபாஸ்ட்பேக் கூபே மாடலாகும். 718 பாக்ஸ்டர், ரோஸ்டர் ரக காராகும். இந்த இரு கார்களிலும் ஒரே 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தான் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் ரூ.1 கோடிக்குள் விற்பனையாகும் டாப்-5 இரு-கதவு ஸ்போர்ட்ஸ் கார்கள் இவைதான்...

அதிகப்பட்சமாக 300 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் போர்ஷே நிறுவனத்தின் 7-ஸ்பீடு டொப்பெல்குப்பலுங் ஆட்டோமேட்டிக் என்ற இரு கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் ரூ.1 கோடிக்குள் விற்பனையாகும் டாப்-5 இரு-கதவு ஸ்போர்ட்ஸ் கார்கள் இவைதான்...

5. ஜாகுவார் எஃப்-டைப் - ரூ.95.12 - ரூ.2.42 கோடி

ஜாகுவார் நிறுவனத்தில் இருந்து மிக சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகமாகிய மாடல் தான் 2020 எஃப்-டைப். இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.95.12 லட்சத்தில் இருந்து ரூ.2.42 கோடி வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரூ.1 கோடிக்குள் விற்பனையாகும் டாப்-5 இரு-கதவு ஸ்போர்ட்ஸ் கார்கள் இவைதான்...

மூன்று விதமான என்ஜின் தேர்வுகளில் கிடைக்கும் புதிய எஃப்-டைப் மாடல், ஹார்ட்டாப் மற்றும் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றக்கூடிய என்ற இரு வெர்சன்களில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் எண்ட்ரீ-லெவல் மாடலில் 300 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு இங்கேனியம் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்தியாவில் ரூ.1 கோடிக்குள் விற்பனையாகும் டாப்-5 இரு-கதவு ஸ்போர்ட்ஸ் கார்கள் இவைதான்...

இந்த எண்ட்ரீ-லெவல் மாடலின் விலை தான் ரூ.95.12 லட்சமாகும். இதன் பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஜாகுவார் எஃப்-டைப் மாடலின் மற்ற இரு என்ஜின் தேர்வுகளை பற்றி அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Top 5 Two Door Sports Car priced under Rs.1 crore in the Indian market
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X