Just In
- 10 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
மார்ச் மாதம் இல்லையாம்.. மோகன்லாலின் அந்த மெகா பட்ஜெட் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!
- News
150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன?
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய கியா சொனெட் காரின் சூப்பரான 8 முக்கிய அம்சங்கள்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கியா சொனெட் கார் அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அண்மையில், இந்த காரின் பெட்ரோல் ஐஎம்டி மற்றும் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல்களை டெஸ்ட் டிரைவ் செய்து அதன் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டோம். இந்த நிலையில், இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சில குறிப்பிடத்தக்க விஷயங்களை காணலாம்.

அதிக சந்தைப் போட்டி நிறைந்த சப் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கியா சொனெட் கார் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதனால், போட்டியாளர்களைவிட அதிக மதிப்புவாய்ந்ததாக இந்த காரை நிலைநிறுத்துவதற்கான அனைத்து விஷயங்களையும் கியா மோட்டார் நிறுவனம் கொடுத்துள்ளது.

01. ஸ்மார்ட் ஏர் பியூரிஃபயர்
தொற்று நோய் பாதிப்பு அதிகம் உள்ள தற்போது உள்ள சூழலில், சுத்தமும், சுகாதாரமுமான இடத்தில் இருப்பது அவசியமாக உள்ளது. இதனை மனதில் வைத்து, கியா சொனெட் காரில் வைரஸ் தடுப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய ஏர் பியூரிஃபயர் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாக இதனை கட்டுப்படுத்த முடியும். காற்று தரம் குறித்த தகவலை காட்டும் மின்னணு திரையும் உள்ளது.

02. போஸ் சவுண்ட் சிஸ்டம்
புதிய கியா சொனெட் எஸ்யூவியில் போஸ் சவுண்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. 7 ஸ்பீக்கர்கள் மற்றும் சப் ஊஃபருடன் இந்த மியூசிக் சிஸ்டம் அதிக தரத்தில் இசையை வழங்கும்.அதற்கு தக்கவாறு ஒளிரும் மூட் லைட் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

03. பெரிய தொடுதிரை சாதனம்
இந்த காரின் இன்டீரியரின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாக இதன் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை குறிப்பிடலாம். இந்த ரக கார்களில் பெரிய தொடுதிரை சாதனம் கொண்தாக கியா சொனெட் வருகிறது. யுவோ கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

04. யுவோ கனெக்டெட் கார் தொழில்நுட்பம்
இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு நேரடி இணைய வசதியை வழங்கும் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, உரிமையாளர் தனது ஸ்மார்ட்ஃபோனில் யுவோ செயலியை தரவிறக்கம் செய்து கொண்டு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொள்ளலாம். இதன்மூலமாக கார் இயக்கம் குறித்த தகவல்களையும், பல்வேறு கட்டுப்பாட்டு வசதிகளையும் பெற முடியும்.

05. ஐஎம்டி கியர்பாக்ஸ்
அண்மையில் ஹூண்டாய் வெனியூ காரில் அறிமுகம் செய்யப்பட்ட அதே ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு கியா சொனெட் காரின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலிலும் வழங்கப்பட உள்ளது. இந்த மாடலில் க்ளட்ச் பெடல் இருக்காது. ஆனால், மேனுவல் காரில் இருப்பது போன்று லிவர் மூலமாக ஓட்டுனர் கியரை மாற்றிக் கொள்ள வேண்டும். இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கார்களின் கலவையான அனுபவத்தை இது தரும்.

06. டீசல் ஆட்டோமேட்டிக்
ஐஎம்டி தவிர்த்து, இந்த காரின் டீசல் மாடலானது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் வர இருப்பது வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும். இதன் டீசல் எஞ்சின் 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

07. டிரைவிங் மோடுகள்
கியா சொனெட் காரில் சாதாரண சாலை, பனித்தரை, சேறு, சகதி நிறைந்த சாலை மற்றும் மணற்பாங்கான சாலை ஆகியவற்றிற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் வசதியை அளிக்கும் டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 4 வீல் டிரைவ் சிஸ்டம் இல்லை என்றாலும், சாலை நிலைக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்குவது முக்கிய அம்சமாக இருக்கும்.

08. ரியர் ஏசி வென்ட்டுகள்
பின் இருக்கை பயணிகளுக்கான தனி ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், சிறப்பான குளிர்ச்சியை பின் இருக்கை பயணிகள் பெறுவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

கியா சொனெட் கார் டிசைனிலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தக்கவாறு, எஞ்சின் ஆப்ஷன்கள், கியர்பாக்ஸ் தேர்வுகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் வர இருக்கிறது. ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. செல்டோஸ், கார்னிவல் வரிசையில் இந்த காரும் நிச்சயம் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.