இந்தியாவின் 'டெஸ்லா'... பிரவைக் எலெக்ட்ரிக் கார் குறித்த 7 முக்கிய அம்சங்கள்!

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட பிரவைக் எலெக்ட்ரிக் கார் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. வியக்க வைக்கும் அம்சங்களுடன் வெளியிடப்பட்டு இருக்கும் இந்த மேட் இன் இந்தியா எலெக்ட்ரிக் கார் குறித்த 7 முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் டெஸ்லா... பிரவைக் எலெக்ட்ரிக் கார் குறித்த 7 முக்கிய அம்சங்கள்!

விற்பனை இலக்கு

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரவைக் டைனமிக்ஸ் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் செடான் கார் மாடலை உருவாக்கி இருக்கிறது. பிரவைக் எக்ஸ்டிங்ஷன் என்ற பெயரில் இந்த கார் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மொத்தம் 2,500 யூனிட்டுகள் மட்டுமே பிரவைக் எக்ஸ்டிங்ஷன் MK-1 மாடல் உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 250 யூனிட்டுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் டெஸ்லா... பிரவைக் எலெக்ட்ரிக் கார் குறித்த 7 முக்கிய அம்சங்கள்!

சொகுசு கார்

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கார் சொகுசு கார்களுக்கு இணையான வசதிகளையும், சிறப்பம்சங்களையும் பெற்றிருக்கிறது. குறிப்பாக, உட்புறத்தில் மிக அதிக இடவசதியையும், வசதிகளையும் இந்த கார் வழங்கும்.

இந்தியாவின் டெஸ்லா... பிரவைக் எலெக்ட்ரிக் கார் குறித்த 7 முக்கிய அம்சங்கள்!

சந்தா திட்டம்

பிரவைக் எக்ஸ்டிங்ஷன் எலெக்ட்ரிக் கார் சந்தா திட்டத்தின் கீழ் நட்சத்திர ஓட்டல்களில் விருந்தினர்கள் பயன்பாட்டிற்கு வழங்குவதற்கு பிரவைக் திட்டமிட்டுள்ளது. அதாவது, தனிநபர் பயன்பாட்டிற்கு முதலில் வழங்குவதற்கான திட்டம் பிரவைக் நிறுவனத்திடம் இல்லை. முதல்கட்டமாக டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, மும்பை, சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்தியாவின் டெஸ்லா... பிரவைக் எலெக்ட்ரிக் கார் குறித்த 7 முக்கிய அம்சங்கள்!

டிசைன்

புதிய பிரவைக் எக்ஸ்டிங்ஷன் எலெக்ட்ரிக் கார் சிறந்த ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 4 கதவுகள் கொண்ட மாடலாக இருக்கிறது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி கனெக்ட்டிங் பார் லைட் சிஸ்டம் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந் கார் 4,820 மிமீ நீளமும், 1,934 மிமீ அகலமும், 1,448 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் 3,038 மிமீ என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இதனால், சொகுசு கார்களுக்கு இணையான இடவசதியை வழங்கும்.

இந்தியாவின் டெஸ்லா... பிரவைக் எலெக்ட்ரிக் கார் குறித்த 7 முக்கிய அம்சங்கள்!

இன்டீரியர்

புதிய பிரவைக் எக்ஸ்டிங்ஷன் கார் வால்வோ எக்ஸ்சி90 எக்ஸெலென்ஸ் லான்ச் காரில் வழங்கப்படுவது போன்ற மிக சொகுசான உட்புற இடவசதியையும், வசதிகளையும் வழங்கும். இந்த காரில் பின்புற இருக்கையை 165 டிகிரி கோணத்தில் சாய்த்துக் கொள்ளும் வாய்ப்பையும் கொடுக்கும். ரோல்ஸ்ராய்ஸ் கார்களை போன்று, இந்த காரிலும் இன்டீரியரை வாடிக்கையாளர்கள் விருப்பம்போல் வடிவமைத்து பெறுவதற்கான வாய்ப்பையும் பிரவைக் டைனமிக்ஸ் நிறுவனம் வழங்க உள்ளது.

இந்தியாவின் டெஸ்லா... பிரவைக் எலெக்ட்ரிக் கார் குறித்த 7 முக்கிய அம்சங்கள்!

பேட்டரி மற்றும் ரேஞ்ச்

புதிய பிரவைக் எக்ஸ்டிங்ஷன் காரில் 96kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதன் மின் மோட்டார் 200 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும், 196 கிமீ வேகத்தில் செல்லும் வாய்ப்பையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 5.4 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காரின் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 30 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றிவிட முடியும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 504 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

இந்தியாவின் டெஸ்லா... பிரவைக் எலெக்ட்ரிக் கார் குறித்த 7 முக்கிய அம்சங்கள்!

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய பிரவைக் எக்ஸ்டிங்ஷன் எலெக்ட்ரிக் கார் 5 நட்சத்திர அந்தஸ்துக்கு இணையான பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருப்பதாக பிரவைக் டைனமிக்ஸ் தெரிவிக்கிறது. எனவே, பாதுகாப்பு அம்சங்களிலும் இந்த கார் மிகச் சிறப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Here are some top things about Pravaig extinction electric car.
Story first published: Tuesday, December 8, 2020, 10:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X