டொயோட்டா கார்களுக்கான சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் புதிய கார் வாங்குவோரை கவரும் வகையில், சிறப்பு கடன் திட்டங்களை டொயோட்டா கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

டொயோட்டா கார்களுக்கான சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

கொரோனா பிடியின் நெருக்கடியில் இருந்து கார் மார்க்கெட் மெல்ல விடுபட துவங்கி இருக்கிறது. சிறப்பு சேமிப்புச் சலுகைகள், எளிய கடன் திட்டங்கள் மூலமாக வாடிக்கையாளர்களை கார் நிறுவனங்கள் கவர்ந்து வருகின்றன. மேலும், பண்டிகை காலத்தில் கார் விற்பனை அதிகம் இருக்கும் என்பதால், அதற்காக பல சிறப்பு திட்டங்களை கார் நிறுவனங்கள் அறிவித்தன. இதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.

டொயோட்டா கார்களுக்கான சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

இதனை மனதில் வைத்து தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பல சிறப்பு கடன் திட்டங்களை டொயோட்டா அறிவித்துள்ளது. இந்த சிறப்பு கடன் திட்டங்கள் புதிதாக கார் வாங்குவோரை கவரும் வகையில் அமைந்துள்ளது.

டொயோட்டா கார்களுக்கான சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

டொயோட்டா க்ளான்ஸா மற்றும் யாரிஸ் கார்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளில் குறிப்பிட்ட மறுவிற்பனை மதிப்பை பெறுவதற்கான திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆறு மாதங்களுக்கு மாதத் தவணை ஒத்தி வைப்புத் திட்டம் மற்றும் குறைவான மாதத் தவணை செலுத்தும் வசதி கொண்ட கடன் திட்டங்களும் வழங்கப்படுகின்றன.

டொயோட்டா கார்களுக்கான சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

டொயோட்டா க்ளான்ஸா மற்றும் யாரிஸ் கார்களுக்கு எக்ஸ்ஷோரூம் விலையில் 55 சதவீதத்தை திரும்ப பெறுவதற்கான மறுமறுவிற்பனை திட்டத்தை டொயோட்டா வழங்குகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு கார் மறுவிற்பனை மதிப்பு வெகுவாக குறைந்துவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் இந்த கார்களை தேர்வு செய்யலாம்.

டொயோட்டா கார்களுக்கான சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

மாதத் தவணை ஒத்தி வைப்பு திட்டம்

மாதத் தவணை ஒத்தி வைப்புத் திட்டத்தின் கீழ் முதல் மூன்று மாதங்களுக்கு விலக்கு பெறும் வசதி உள்ளது. டொயோட்டா கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இது மிகச் சிறந்ததாக இருக்கும். மேலும், உடனடியாக மாதத் தவணை செலுத்துவதில் இருந்து மூன்று மாதங்களுக்கு விலக்கும் பெறும் வாய்ப்பு இருப்பது வாடிக்கையாளர்களை கவரும்.

டொயோட்டா கார்களுக்கான சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

குறைவான மாதத் தவணை திட்டங்கள்

புதிய டொயோட்டா கார்களை வாங்குவோருக்கு முதல் ஆறு மாதங்களுக்கு மிகக் குறைவான மாதத் தவணையை கொண்ட கடன் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இது நிச்சயம் முதல் ஆறு மாதங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஆசுவாசத்தை தரும்.

டொயோட்டா கார்களுக்கான சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

இதுகுறித்து டொயோட்டா கார் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மூத்த அதிகாரி நவீன் சோனி கூறுகையில்,"டொயோட்டா கார் பிராண்டின் மீது வாடிக்கையாளர்கள் பல ஆண்டுகளாக அதீத நம்பிக்கையையும், மதிப்பையும் வைத்துள்ளனர். எங்களது கார் மாடல்கள் மீது பற்றுக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மையை தரும் வகையில் இந்த புதிய திட்டங்களை வழங்குகிறோம்.

டொயோட்டா கார்களுக்கான சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

டொயோட்டா கார் கனவுடன் காத்திருக்கும் எமது வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டங்களை மிக எளிமையாக பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது," என்று தெரிவித்துள்ளார்.

டொயோட்டா கார்களுக்கான சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

டொயோட்டா கார்களுக்கான இந்த சிறப்பு கடன் திட்டங்கள் நிச்சயம் புதிதாக கார் வாங்குவோருக்கு அதிக பயனை தரும் என்று நம்பலாம். மேலும், முதல் சில மாதங்களுக்கு அதிக சுமை இல்லாத வகையில் இப்போதை புதிய டொயோட்டா கார் மாடலை வாங்குவதற்கான வாய்ப்பையும் பெறலாம்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Kirloskar Motors (TKM) has introduced a set of new finance scheme during the ongoing festive season in India. With the new finance schemes, the company aims to reduce the commitment needed for new car purchase this Diwali.
Story first published: Thursday, November 5, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X