டொயோட்டா கரோல்லா செடான் காரின் புதிய ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன்... ஐரோப்பிய மக்களுக்கு மட்டும் தானாம்...

ஐரோப்பிய சந்தைக்காக கரோல்லா செடான் மாடலின் புதிய ஜிஆர் ஸ்போர்ட் வெர்சனை அறிமுகப்படுத்தவுள்ளதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கரோல்லா ஜிஆர் ஸ்போர்ட் வெர்சனை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

டொயோட்டா கரோல்லா செடான் காரின் புதிய ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன்... ஐரோப்பிய மக்களுக்கு மட்டும் தானாம்...

வழக்கமான கரோல்லா மாடலில் இருந்து இந்த ஸ்போர்ட் எடிசன் பெயருக்கு ஏற்றவாறு தோற்றத்தில் மட்டும் தான் மாற்றத்தை பெற்றுள்ளது. மற்றப்படி காரின் செயல்திறனில் அப்கிரேட் எதுவும் செய்யப்படவில்லை.

டொயோட்டா கரோல்லா செடான் காரின் புதிய ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன்... ஐரோப்பிய மக்களுக்கு மட்டும் தானாம்...

ஆனால் இந்நிறுவனத்தின் மற்றொரு செடான் மாடலான யாரிஸின் ஜிஆர், செயல்திறனில் அப்கிரேட்டை பெற்றிருந்தது. ஏனெனில் அது யாரிஸின் உண்மையான ஸ்போர்ட்ஸ்-வேரியண்ட் ஆகும். புதிய கரோல்லா ஜிஆர் வெர்சன் தோற்றத்தில் மாற்றமாக வழக்கமான கரோல்லா கார் கொண்டிருக்கும் சில க்ரோம்களை இழந்துள்ளது.

டொயோட்டா கரோல்லா செடான் காரின் புதிய ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன்... ஐரோப்பிய மக்களுக்கு மட்டும் தானாம்...

அதற்கு மாற்றாக முன்புற க்ரில், ஓஆர்விஎம்கள், பக்கவாட்டு சில்ஸ் மற்றும் B-பில்லரில் கூட பியானோ-கருப்பு நிறத்தை பெற்றுள்ளது. இவற்றுடன் பம்பருக்கு மேற்புறத்தில் உள்ள ஃபாக்ஸ் ஏர் வெண்ட்களிலும் சில கருப்பு நிற கார்னஷிங் தென்படுகிறது. இவை தான் ஸ்போர்ட்டியான தோற்றத்தை காருக்கு வழங்குகின்றன.

டொயோட்டா கரோல்லா செடான் காரின் புதிய ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன்... ஐரோப்பிய மக்களுக்கு மட்டும் தானாம்...

இதன் புதிய 17-இன்ச் அலாய் சக்கரங்கள், மெஷின்-கட் மற்றும் ட்யூல்-டோனில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மாற்றாக வாடிக்கையாளர்கள் கூடுதல் ஸ்போர்ட் பண்பிற்காக 18 இன்ச் அலாய் சக்கரங்களையும் பெற முடியும். பின்புறத்தில் பூட் லிட்டை ஒருங்கிணைக்கும் வகையில் சிறிய ஸ்பாய்லர் தென்படுகிறது.

டொயோட்டா கரோல்லா செடான் காரின் புதிய ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன்... ஐரோப்பிய மக்களுக்கு மட்டும் தானாம்...

பூட்-லிலும், டெயில்லைட்களை சுற்றிலும் கருப்பு நிற கார்னிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. கருப்பு நிற மேற்கூரையுடன் கரோல்லா ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன் காருக்கு மொத்தம் 8 பெயிண்ட் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் கேபின் மொத்தமும் கருப்பு நிறத்தில் மிகவும் கவரும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா கரோல்லா செடான் காரின் புதிய ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன்... ஐரோப்பிய மக்களுக்கு மட்டும் தானாம்...

துளையுடன் பொருத்தப்பட்டுள்ள ஸ்டேரிங் சக்கரம் லெதரால் மூடப்பட்டுள்ளது. இதனுடன் ஸ்போர்ட்ஸ் ஸ்டேரிங் சக்கரம், வெள்ளை & சிவப்பு தையல்களுடன் லெதர் உள்ளமைவு மற்றும் கேபினை சுற்றிலும் விளக்குகள் உள்ளிட்டவையும் தேர்வுகளாக கொடுக்கப்பட்டுள்ளன.

டொயோட்டா கரோல்லா செடான் காரின் புதிய ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன்... ஐரோப்பிய மக்களுக்கு மட்டும் தானாம்...

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இந்த ஸ்போர்ட்ஸ் எடிசன் காரின் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்பரவில்லை. இதனால் 132 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 120 பிஎச்பி பவரை வழங்கக்கூடிய 1.8 லிட்டர் பெட்ரோல்/எலக்ட்ரிக் ஹைப்ரீட் என்ஜின்கள் தான் தேர்வுகளாக இந்த எடிசன் காருக்கும் வழங்கப்படவுள்ளன.

டொயோட்டா கரோல்லா செடான் காரின் புதிய ஜிஆர் ஸ்போர்ட் வெர்சன்... ஐரோப்பிய மக்களுக்கு மட்டும் தானாம்...

இந்த இரு என்ஜின்களுடனும் இ-சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து கரோல்லா ஜிஆர் செடான் காரின் தயாரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. டெலிவிரிகள் 2021 ஜனவரி மாதத்தில் துவங்கவுள்ளன. தற்போதைக்கு இந்த ஸ்போர்ட்ஸ் எடிசன் கார் ஐரோப்பிய சந்தைக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Sporty-Looking Toyota Corolla GR Sport Unveiled
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X