இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் டொயோட்டா!! சேவை மையங்கள் 401ஆக அதிகரிப்பு

இந்தியாவில் வாடிக்கையாளர் சேவை மையத்தை 400-ஐ தாண்டியுள்ளதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் டொயோட்டா!! சேவை மையங்கள் 401ஆக அதிகரிப்பு

டீலர்ஷிப் மையங்கள் 400ஆக அதிகரித்துள்ளதால் டொயொட்டாவின் சந்தை இந்தியாவில் விரிவடைந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் டொயோட்டாவின் வாடிக்கையாளர்களுக்கான சேவை வழங்குதல் என்ற குறிக்கோளின் வெளிப்பாடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் டொயோட்டா!! சேவை மையங்கள் 401ஆக அதிகரிப்பு

இதன் மூலமாக இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை கவர முடியும் என இந்நிறுவனம் நம்புகிறது. இந்தியாவில் டொயோட்டாவிற்கு 401 அவுட்லெட்கள் நம் நாட்டில் உள்ளன. 401வது புதிய அவுட்லெட் பிஜேஎஸ் டொயோட்டா என்ற பெயரில் கர்நாடகா, பெல்லாரியில் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் டொயோட்டா!! சேவை மையங்கள் 401ஆக அதிகரிப்பு

இந்த புதிய டீலர்ஷிப்பிலும் மற்ற மையங்களை போல் வாடிக்கையாளர்கள் விற்பனை, சேவை மற்றும் ஸ்பேர் பாகங்கள் என்ற மூன்று அம்சங்களையும் பெறலாம். டீலர்ஷிப் மையங்களுடன் வாடிக்கையாளர்கள் தொடு மையமும் நாடு முழுவதும் உள்ளன.

இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் டொயோட்டா!! சேவை மையங்கள் 401ஆக அதிகரிப்பு

அந்த அளவிற்கு என்றால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 100க்கும் அதிகமான விற்பனை & சேவை மையங்கள் இந்நிறுவனத்தால் திறக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் பிஆர்ஒ சேவை மையங்களையும் நாடு முழுவதிலும் டொயோட்டா நிறுவனம் அதிகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் டொயோட்டா!! சேவை மையங்கள் 401ஆக அதிகரிப்பு

இந்த பிஆர்ஒ மையங்களில் இலவச சேவை, வழக்கமான கட்டண கால பராமரிப்பு, மிகவும் சிறிய அளவிலான பழுதுகள் சரிபார்ப்பு உள்ளிட்ட சேவைகள் எந்தவொரு டொயோட்டா காருக்கும் கிடைக்கும். டொயோட்டா மட்டுமின்றி மற்ற நிறுவனங்களது கார்களுக்கும் சேவைகள் டொயோட்டாவின் இந்த சேவை மையங்களில் கிடைக்கும்.

இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் டொயோட்டா!! சேவை மையங்கள் 401ஆக அதிகரிப்பு

பிஆர்ஒ மையங்களை அனைத்து சிறிய நகரங்களுக்கும் கொண்டுவர டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. டீலர்ஷிப் மையங்கள் 400-ஐ தாண்டியுள்ளதால் டொயோட்டா வாடிக்கையாளர்கள் இனி இன்னும் எளிதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Crosses 400 Customer Touchpoints Across India: New Milestone Achieved
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X