லேண்ட் க்ரூஸர் எல்சி200 மற்றும் ப்ராடோ மாடல்களின் தயாரிப்பை நிறுத்தவுள்ள டொயோட்டா...

ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டா, லேண்ட் க்ரூஸர் எல்சி200 மற்றும் லேண்ட் க்ரூஸர் ப்ராடோ மாடல்களின் தயாரிப்பை நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

லேண்ட் க்ரூஸர் எல்சி200 மற்றும் ப்ராடோ மாடல்களின் தயாரிப்பை நிறுத்தவுள்ள டொயோட்டா...

வெளியாகியுள்ள தகவலில் டொயோட்டா நிறுவனம் மேற்கூறப்பட்ட மாடல்களின் தயாரிப்பை வருகிற 1ஆம் தேதி முதல் நிறுத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உலக சந்தையில் சிறந்த ஆப்-ரோடு எஸ்யூவிகளுள் ஒன்றாக விளங்கும் லேண்ட் க்ரூஸர் எல்சி200 மாடலானது 4.5 லிட்டர் இரட்டை டர்போ வி8 டீசல் என்ஜினை கொண்டுள்ளது.

லேண்ட் க்ரூஸர் எல்சி200 மற்றும் ப்ராடோ மாடல்களின் தயாரிப்பை நிறுத்தவுள்ள டொயோட்டா...

இதன் என்ஜின் அதிகப்பட்சமாக 268 பிஎச்பி பவரையும் 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. அதிகளவில் கவர்ச்சியான மற்றும் கம்பீரமான பாகங்களை இந்த எஸ்யூவி கார் கொண்டிருந்தாலும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்கள் அப்டேட்டாக இல்லை.

லேண்ட் க்ரூஸர் எல்சி200 மற்றும் ப்ராடோ மாடல்களின் தயாரிப்பை நிறுத்தவுள்ள டொயோட்டா...

லேண்ட் க்ரூஸர் எல்சி200-ன் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1.47 லட்சமாக உள்ளது. தொழிற்நுட்பங்கள் அப்டேட்டாக இல்லை என்பது மட்டுமில்லாமல் லேண்ட் க்ரூஸர் மாடல்களின் விற்பனை இந்தியா உள்பட சில முக்கிய ஆசிய நாடுகள், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற முன்னணி ஆட்டோமொபைல் சந்தைகளில் பெரும் பின்னடைவில் உள்ளது. இதுவும் இந்த கார்களின் தயாரிப்பு நிறுத்தத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

லேண்ட் க்ரூஸர் எல்சி200 மற்றும் ப்ராடோ மாடல்களின் தயாரிப்பை நிறுத்தவுள்ள டொயோட்டா...

எல்சி200 மாடலுக்கு மாற்றாக அப்டேட் செய்யப்பட்ட டிசைன் மற்றும் தொழிற்நுட்பங்களை கொண்ட எல்சி300 மாடலை இந்திய சந்தைக்கு கொண்டுவர டொயோட்டா நிறுவனம் திட்டுமிட்டு வருகிறது. அப்டேட்டான தொழிற்நுட்பங்கள் மட்டுமில்லாமல் ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜினையும் இந்த எல்சி300 மாடல் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

லேண்ட் க்ரூஸர் எல்சி200 மற்றும் ப்ராடோ மாடல்களின் தயாரிப்பை நிறுத்தவுள்ள டொயோட்டா...

தற்சமயம் லேண்ட் க்ருஸர் எல்சி200 மாடலுடன் சந்தையில் நெருக்கடி கொடுத்து வருகின்ற மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் மற்றும் நிஸான் பேட்ரோல் உள்ளிட்ட மாடல்கள் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி வரையில் போட்டியினை தரவுள்ளன.

லேண்ட் க்ரூஸர் எல்சி200 மற்றும் ப்ராடோ மாடல்களின் தயாரிப்பை நிறுத்தவுள்ள டொயோட்டா...

மற்றொரு எஸ்யூவி மாடலான லேண்ட் க்ரூஸர் ப்ராடோ மாடலின் தயாரிப்பையும் நிறுத்த டொயோட்டா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. எல்சி200 மாடலின் சிறிய அளவு வெர்சனான இந்த காரில் நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 3.0 லிட்டர் டீசல் என்ஜினை டொயோட்டா நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 170 பிஎச்பி பவரையும் 410 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

லேண்ட் க்ரூஸர் எல்சி200 மற்றும் ப்ராடோ மாடல்களின் தயாரிப்பை நிறுத்தவுள்ள டொயோட்டா...

ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்படுகிறது. இந்த எஸ்யூவி இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.96.30 லட்ச விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ப்ராடோ மாடலுக்கு போட்டியாக ஜீப் க்ராண்ட் செரோக்கி மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி போன்ற மாடல்கள் உள்ளன.

லேண்ட் க்ரூஸர் எல்சி200 மற்றும் ப்ராடோ மாடல்களின் தயாரிப்பை நிறுத்தவுள்ள டொயோட்டா...

டொயோட்டா நிறுவனத்தில் இருந்து மிக அதிக காலமாக விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலாக லேண்ட் க்ரூஸர் கார் உள்ளது. இருப்பினும் இந்த காரின் விற்பனை எண்ணிக்கை உலகம் முழுவதும் 1 மில்லியனை கூட இதுவரை தொடவில்லை. லேண்ட் க்ரூஸர் என்ற பெயர் டொயோட்டாவின் ஜீப் பிஜே ஆப்-ரோட் மாடலில் இருந்து 1950ல் பெறப்பட்டது.

லேண்ட் க்ரூஸர் எல்சி200 மற்றும் ப்ராடோ மாடல்களின் தயாரிப்பை நிறுத்தவுள்ள டொயோட்டா...

லேண்ட் க்ரூஸர் கார் மாற்றத்தக்க, ஹார்ட் டாப், நிலையான வேகன் மற்றும் கேப்-சேசிஸ் பாடி டிசைனில் உருவாக்கப்பட்டு வருகிறது. நம்பத்தன்மை மற்றும் அதிக ஆயுட் காலத்தால் இந்த கார் ஆஸ்திரேலியா மற்றும் கிழக்கத்திய நாடுகளில் பிரபலமான மாடல் காராக விளங்குகிறது.

லேண்ட் க்ரூஸர் எல்சி200 மற்றும் ப்ராடோ மாடல்களின் தயாரிப்பை நிறுத்தவுள்ள டொயோட்டா...

இருப்பினும் லேண்ட் க்ரூஸரின் தயாரிப்பு நிறுத்தப்படவுள்ளது டொயோட்டா நிறுவனத்தின் சிறந்த முடிவு என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த காரின் வெளிப்புறம், உட்புறம், தொழிற்நுட்பங்கள் மற்றும் என்ஜின் என அனைத்திலும் ஒரே நேரத்தில் அப்டேட் செய்து அறிமுகத்தினால் தான் இந்த காரின் எதிர்கால விற்பனையில் சிறிது முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியும்.

Source: Rushlane

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Land Cruiser Prado, LC200 to be discontinued
Story first published: Tuesday, January 7, 2020, 10:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X