டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் அறிமுக தேதி அறிவிப்பு... பொங்கலுக்கு டபுள் டமாக்கா!

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் லெஜெண்டர் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் அறிமுக தேதி அறிவிப்பு... பொங்கலுக்கு டபுள் டமாக்கா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களில் ஒன்றாக டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளது. மிக நீண்ட காலமாக பிரபலமாக இருந்து வரும் டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவிக்கு அறிமுகமே தேவையில்லை. ஃபோர்டு எண்டேவர் மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி க்ளோஸ்ட்டர் உள்ளிட்ட கார்களுடன் டொயோட்டா பார்ச்சூனர் போட்டியிட்டு வருகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் அறிமுக தேதி அறிவிப்பு... பொங்கலுக்கு டபுள் டமாக்கா!

நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து கொண்டே வரும் நிலையில், தற்போதைய தலைமுறை ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் ஆயுட்காலத்தை மேலும் நீட்டிக்க டொயோட்டா விரும்பியது. எனவே ஃபார்ச்சூனரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை, தென் கிழக்கு ஆசிய சந்தைகளில், கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்தது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் அறிமுக தேதி அறிவிப்பு... பொங்கலுக்கு டபுள் டமாக்கா!

இந்த வரிசையில் டொயோட்டா ஃபார்ச்சூனரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகி வந்தன. அத்துடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் லெஜெண்டர் (Legender) வேரியண்ட்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக யூகங்கள் கிளம்பின.

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் அறிமுக தேதி அறிவிப்பு... பொங்கலுக்கு டபுள் டமாக்கா!

ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பிரீமியம் வெர்ஷன்தான் லெஜெண்டர். வெளிப்புற டிசைன் மாற்றங்கள் மற்றும் அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய உட்புறம் ஆகியவற்றின் மூலமாக லெஜெண்டர் வேரியண்ட் தன்னை வேறுபடுத்தி கொள்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டபடி லெஜெண்டர் வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா? என யூகங்கள் இருந்து வந்தன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் அறிமுக தேதி அறிவிப்பு... பொங்கலுக்கு டபுள் டமாக்கா!

இந்த சூழலில் டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன், லெஜெண்டர் வேரியண்ட்டும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை டொயோட்டா நிறுவனம் தற்போது உறுதி செய்துள்ளது. வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி அவை விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளன. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை இந்த செய்தி அதிகரிக்க செய்துள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் அறிமுக தேதி அறிவிப்பு... பொங்கலுக்கு டபுள் டமாக்கா!

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும், லெஜெண்டர் வேரியண்டிலும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுதான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர டொயோட்டா பார்ச்சூனரின் ஸ்டாண்டர்டு மாடலில், 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வும் வழங்கப்படலாம். அதேசமயம் லெஜெண்டர் வேரியண்ட்டில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் அறிமுக தேதி அறிவிப்பு... பொங்கலுக்கு டபுள் டமாக்கா!

ஆனால் ஸ்டாண்டர்டு மாடலில் இதனுடன், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வும் வழங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் ஜனவரி 6ம் தேதியன்று விலை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் வருகை டொயோட்டா பார்ச்சூனருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் அறிமுக தேதி அறிவிப்பு... பொங்கலுக்கு டபுள் டமாக்கா!

அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்பட அனைத்து அம்சங்களிலும் எம்ஜி க்ளோஸ்ட்டர் கார் தலைசிறந்து விளங்குகிறது. இந்த புதுவரவின் போட்டியை, ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட், லெஜெண்டர் வேரியண்ட்கள் மூலமாக டொயோட்டா சமாளிக்கவுள்ளது. சமீபத்தில்தான் இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் விற்பனைக்கு வந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Toyota Fortuner Facelift And Legender India Launch Date Announced. Read in Tamil
Story first published: Thursday, December 24, 2020, 5:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X