10 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்... புக்கிங் தொடங்கியது

டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

10 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்... புக்கிங் தொடங்கியது

இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் மிகவும் பிரபலமான எஸ்யூவி கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலை உருவாக்கும் பணிகளில் டொயோட்டா நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும்போது பல முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது.

10 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்... புக்கிங் தொடங்கியது

பார்ச்சூனர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டொயோட்டா நிறுவனம் அனேகமாக இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்டு எண்டேவர் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உள்ளிட்ட கார்கள் ஏற்கனவே டொயோட்டா பார்ச்சூனருடன் போட்டியிட்டு வருகின்றன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

10 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்... புக்கிங் தொடங்கியது

இதுதவிர சமீபத்தில் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியும் விற்பனைக்கு வந்துள்ளது. சந்தையில் போட்டி அதிகரித்து வருவதை மனதில் வைத்து, டொயோட்டா நிறுவனம் பார்ச்சூனர் எஸ்யூவியை மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. தென்கிழக்கு ஆசிய சந்தைகளில், டொயோட்டா பார்ச்சூனரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஏற்கனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

ராயல் என்பீல்டு ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் மீட்டியோர் 350 பைக்கில் உள்ளதா? வீடியோ!

இதை தொடர்ந்து விரைவில் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த சூழலில், பார்ச்சூனர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு ஒரு சில டொயோட்டா டீலர்கள் தற்போது முன்பதிவுகளை ஏற்க தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு குறித்து, டீம்-பிஎச்பி செய்தி வெளியிட்டுள்ளது.

10 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்... புக்கிங் தொடங்கியது

அத்துடன் டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவியின் தற்போதைய மாடலின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் வேகத்தை வெறும் 10 வினாடிகளுக்கு உள்ளாக எட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

10 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்... புக்கிங் தொடங்கியது

பிடிரைவ்டிவி என்ற யூ-டியூப் சேனலில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது. டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் தோற்றத்தை காட்டுவதுடன் இந்த காணொளி தொடங்குகிறது. தற்போது இந்திய சந்தையில் கிடைக்கும் மாடலுடன் ஒப்பிடுகையில் இது பல்வேறு காஸ்மெட்டிக் மாற்றங்களை பெற்றுள்ளது.

10 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்... புக்கிங் தொடங்கியது

சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவியில், 2.8 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 201 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. ஆனால் இதே இன்ஜின் இந்தியாவிலும் வழங்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

ஆக்ஸலரேஷன் சோதனையில், டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி வெறும் 9.80 வினாடிகளில், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை தொட்டு விட்டது. இது பிரம்மாண்ட எஸ்யூவி என்பதை வைத்து பார்க்கும்போது இது உண்மையிலேயே சிறப்பான விஷயம்தான். கூடிய விரைவில் டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவிலும் நாம் பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Fortuner Facelift Bookings In India Open Unofficially - Details. Read in Tamil
Story first published: Saturday, November 21, 2020, 19:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X