4 மாதங்கள் மட்டுமே ஆகின்றன... புதுமுக காரை இந்தியாவை விட்டு வெளியேற்றிய டொயோட்டா... காரணம் என்ன தெரியுமா?

அறிமுகம் செய்யப்பட்டு நான்கு மாதங்களே ஆகின்றநிலையில் டொயோட்டா நிறுவனம் அதன் புதுமுக கார் ஒன்றை இந்திய சந்தையில் இருந்து நீக்கியிருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

4 மாதங்கள் மட்டுமே ஆகின்றன... புதுமுக காரை இந்தியாவை விட்டு வெளியேற்றிய டொயோட்டா... காரணம் என்ன தெரியுமா?

டொயோட்டா நிறுவனம் அதன் பிரபல கார் மாடல்களில் ஒன்றான ஃபார்ச்சூனர் காரின் குறிப்பிட்ட வேரியண்டை இந்திய சந்தையில் இருந்து நீக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபார்ச்சூனர் டிஆர்டி எனும் வேரியண்டைய டொயோட்டா இந்தியாவில் இருந்து வெளியேற்றிருக்கின்றது. இதனால் இக்காரின் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

4 மாதங்கள் மட்டுமே ஆகின்றன... புதுமுக காரை இந்தியாவை விட்டு வெளியேற்றிய டொயோட்டா... காரணம் என்ன தெரியுமா?

இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து டொயோட்டாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி மாடலின் அனைத்து தகவல்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், இக்காரை இந்தியாவில் வாங்குவது என்பது இயலாத காரியமாக மாறியிருக்கின்றது.

4 மாதங்கள் மட்டுமே ஆகின்றன... புதுமுக காரை இந்தியாவை விட்டு வெளியேற்றிய டொயோட்டா... காரணம் என்ன தெரியுமா?

கடந்த ஆகஸ்டு மாதத்திலேயே டிஆர்டி வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது. இதனை அறிமுகம் செய்தபோதே அந்நிறுவனம் லிமிடெட் எடிசனாக மட்டுமே விற்பனைச் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. இதன்படி தற்போது இக்காரை டொயோட்டா இந்தியாவில் இருந்து நீக்கியிருக்கின்றது.

4 மாதங்கள் மட்டுமே ஆகின்றன... புதுமுக காரை இந்தியாவை விட்டு வெளியேற்றிய டொயோட்டா... காரணம் என்ன தெரியுமா?

வழக்கமான ஃபார்ச்சூனர் கார்களைக் காட்டிலும் குறிப்பிட்ட சில காஸ்மெட்டிக் மற்றும் மெக்கானிக்கல் புதுப்பித்தல்களுடன் இக்கார் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், புதிய வண்ணம், கூடுதல் கவர்ச்சியான தோற்றம் கொண்ட பம்பர், அலாய் வீல், தானாகவே மூடிக் கொள்ளும் பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள், ஸ்கஃப் பிளேட் மற்றும் பேட்டில் லேம்ப்கள் உள்ளிட்டகை இக்காருக்கு பிரத்யேகமாக கொடுக்கப்பட்டிருந்தன.

4 மாதங்கள் மட்டுமே ஆகின்றன... புதுமுக காரை இந்தியாவை விட்டு வெளியேற்றிய டொயோட்டா... காரணம் என்ன தெரியுமா?

இதுமட்டுமின்றி, இக்காரின் தனித்துவமான தோற்றத்திற்காக 'டிஆர்டி' எனும் பேட்ஜ்கள் காரின் பக்கவாட்டு பகுதி மற்றும் பின்பக்க பகுதியில் ஒட்டப்பட்டிருந்தன. மேலும், காரின் உட்புறத்திலும் இது சிறப்பு எடிசன் என்பதைத் தேற்றுவிக்கின்ற வகையில் பேட்ஜ் மற்றம் சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டிருந்தன.

4 மாதங்கள் மட்டுமே ஆகின்றன... புதுமுக காரை இந்தியாவை விட்டு வெளியேற்றிய டொயோட்டா... காரணம் என்ன தெரியுமா?

இத்தகைய பன்முக வசதிக் கொண்ட காரையே இனிமேலும் இந்தியர்கள் வாங்க முடியாத இடத்திற்கு கொண்டு சென்றுக் கொண்டிருக்கின்றது. அதேசமயம், ஃபார்ச்சூனர் காரின் வழக்கமான வேரியண்டுகள் எப்போதும்போல் விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 மாதங்கள் மட்டுமே ஆகின்றன... புதுமுக காரை இந்தியாவை விட்டு வெளியேற்றிய டொயோட்டா... காரணம் என்ன தெரியுமா?

சிறப்பு பதிப்பாக விற்பனைக்கு வந்த டிஆர்டி ரூ. 34.98 லட்சம் முதல் 36.88 லட்ச ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இது வழக்கமான ஃபார்ச்சூனர் மாடலைக் காட்டிலும் ரூ. 2.5 லட்சம் அதிகம் ஆகும். கூடுதல் பிரீமியம் வசதிகள் காரணமாக இந்த விலையுயர்வு இக்காருக்கு வழங்கப்பட்டிருந்தது.

4 மாதங்கள் மட்டுமே ஆகின்றன... புதுமுக காரை இந்தியாவை விட்டு வெளியேற்றிய டொயோட்டா... காரணம் என்ன தெரியுமா?

ஃபார்ச்சூனர் டிஆர்டி காரில் 2.8 லிட்டர் டீசல் எஞ்ஜினையே டொயோட்டா பயன்படுத்தி வந்தது. 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இயங்கும் இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 175 பிஎச்பி மற்றும் 450 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

4 மாதங்கள் மட்டுமே ஆகின்றன... புதுமுக காரை இந்தியாவை விட்டு வெளியேற்றிய டொயோட்டா... காரணம் என்ன தெரியுமா?

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை தயாரிப்பு நிறுவனம் புதிய நவீன யூகத்திற்கு ஏற்ப புதுப்பித்து வருகின்றது. இதன்படி, புதிய தோற்றம் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் இக்கார் 2021ம் ஆண்டின் மையப்பகுதியில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விலை மற்றும் பிற சிறப்பு தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Fortuner TRD Limited-Edition Discontinued In India. Read In Tamil.
Story first published: Saturday, December 12, 2020, 15:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X