டொயோட்டா ஃபார்ச்சூனரையே தோற்கடிக்கும் அம்சங்களுடன் ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்டிவோ ஃபேஸ்லிஃப்ட்...!

டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்டிவோ ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்பான ஆவண படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை குறித்த விரிவாக தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டொயோட்டா ஃபார்ச்சூனரையே தோற்கடிக்கும் அம்சங்களுடன் ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்டிவோ ஃபேஸ்லிஃப்ட்...!

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யும் கார்களுள் முதன்மையானதாக ஃபார்ச்சூனர் உள்ளது. இருப்பினும் இதன் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்த மாடலில் புதியதாக டிஆர்டி ஸ்போர்டிவோ ஃபேஸ்லிஃப்ட் எடிசனை கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனரையே தோற்கடிக்கும் அம்சங்களுடன் ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்டிவோ ஃபேஸ்லிஃப்ட்...!

இந்த நிலையில் தற்போது டீம்பிஎச்பி செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்பான ஆவண படங்களின் மூலம் இது வழக்கமான ஃபார்ச்சூனரில் வித்தியாசப்படுவதற்காக புதிய வசதிகளையும், சில காஸ்மெட்டிக் மாற்றங்களையும் ஏற்றுள்ளதை அறிய முடிகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனரையே தோற்கடிக்கும் அம்சங்களுடன் ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்டிவோ ஃபேஸ்லிஃப்ட்...!

இந்த மாற்றங்களில் முன் மற்றும் பின்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய டிசைனிலான பம்பர்கள், எல்இடி ஃபாக் விளக்குகள், எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் புதிய டிசைனில் ட்யூல்-டோன் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

டொயோட்டா ஃபார்ச்சூனரையே தோற்கடிக்கும் அம்சங்களுடன் ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்டிவோ ஃபேஸ்லிஃப்ட்...!

உள்ளே ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்டிவோ கார், 9 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர் இல்லா போன் சார்ஜர், 360-டிகிரி கேமிரா சிஸ்டம் மற்றும் கை சைகை இல்லா இயக்கத்திற்காக கிக் சென்சார் உடன் பவர் டெயில்கேட் போன்றவற்றை கூடுதலாக ஏற்றுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனரையே தோற்கடிக்கும் அம்சங்களுடன் ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்டிவோ ஃபேஸ்லிஃப்ட்...!

இந்தியவில் ஃபார்ச்சூனருக்கு 2.8 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜினை டொயோட்டா நிறுவனம் வழங்கி வருகிறது. அதிகப்பட்சமாக 3,400 ஆர்பிஎம்-ல் 175 பிஎச்பி பவரையும், 1,600- 2,400 ஆர்பிஎம்-ல் 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த டீசல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனரையே தோற்கடிக்கும் அம்சங்களுடன் ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்டிவோ ஃபேஸ்லிஃப்ட்...!

பெடல் ஷிஃப்டர் உடன் வழங்கப்படுகின்ற இந்த ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் இந்த எஸ்யூவி கார் தன்னிச்சையான ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டத்தையும் கொண்டுள்ளது. ஃபார்ச்சூனரின் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாட்டு சந்தைகளில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்டது. ஆனால் இந்தியாவில் இந்த கார் இன்னும் சாலை சோதனைகளில் தான் உட்படுத்தப்பட்டு வருகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Fortuner TRD Sportivo facelift brochure leaked
Story first published: Thursday, October 1, 2020, 17:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X