Just In
- 12 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
மார்ச் மாதம் இல்லையாம்.. மோகன்லாலின் அந்த மெகா பட்ஜெட் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- News
150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன?
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் இந்தியாவில் தரிசனம்... அப்போ அது உண்மைதான்?
டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் இந்தியாவில் முதல்முறையாக தரிசனம் கொடுத்துள்ளது. இதன்மூலமாக இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது கிட்டத்தட்ட உண்மையாக இருக்கிறது.

இந்தியாவில் பிக்கப் டிரக் வகை வாகனங்கள் கட்டுமானத் துறை உள்ளிட்டவற்றில் பணியாளர்களுடன் அவர்களுக்கு தேவையான தளவாடங்களுடன் செல்வதற்கான வாகனமாகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மேலை நாடுகளில் தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற சொகுசு அம்சங்களுடன் கூடிய பிக்கப் டிரக் மாடல்களுக்கு பெரிய அளவிலான மவுசு உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவிலும் தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற சொகுசு அம்சங்களுடன் கூடிய பிக்கப் டிரக் வகை வாகனங்கள் ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களை கவர்ந்துள்ளது. இந்த வகை பிக்கப் டிரக்குகள் மொசெரோ என்ற வகையில் குறிப்பிடப்படுகிறது.

தற்போது இந்த ரகத்தில் இசுஸு டி மேக்ஸ் வி க்ராஸ் என்ற பிக்கப் டிரக் மட்டுமே சிறந்த தேர்வாக இருக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களின் கவனம் சொகுசு பிக்கப் டிரக் வகை வாகனங்கள் மீது திரும்புவதை உணர்ந்து கொண்டுள்ள பிற நிறுவனங்கள் இந்த ரகத்திலான வாகனத்தை களமிறக்குவது குறித்து பரிசீலித்து வருகின்றன.

அந்த வகையில், டொயோட்டா கார் நிறுவனம் தனது ஹைலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை இந்தியா கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் பரிசீலித்து வருவதாக அண்மையில் செய்திகள் வந்தன. இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில், இப்போது இந்தியாவில் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்குகள் முதல்முறையாக தரிசனம் கொடுத்துள்ளன.

மேற்குவங்க மாநிலம் துர்காபூர் எக்ஸ்பிரஸ் சாலையில் வாகனங்களை எடுத்துச் செல்வதற்கான டிரக் ஒன்றில் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்குகள் ஏற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது குறித்த படங்களை மோட்டோராய்ட்ஸ் தளம் மூலமாக வெளிவந்துள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் உருவாக்கப்படும் ஐஎம்வி பிளாட்ஃபார்மில்தான் புதிய ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காரில் பயன்படுத்தப்படும் எஞ்சின், கியர்பாக்ஸ், 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை இந்த பிக்கப் டிரக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

மிக வலிமையான தனி நபர் பயன்பாட்டு வகை பிக்கப் டிரக்கை விரும்புவோர் எதிர்பார்க்கும் பல்வேறு சிறப்பம்சங்களை இந்த ஹைலக்ஸ் பிக்கப் டிரக் பெற்றிருக்கும். இந்த பிக்கப் டிரக்கில் பை-பீம் எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, சாட்டிலைட் நேவிகேஷன் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் 204 எச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பிக்கப் டிரக் 0- 100 வேகத்தை 10 வினாடிகளில் எட்டும் திறன் வாய்ந்ததாக இருக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் வழங்கப்படும்.

ஆஃப்ரோடு சாகசப் பிரியர்கள் மற்றும் தனித்துவமான சொகுசு வாகனத்தை வாங்க விரும்புவோரின் எதிர்பார்ப்புகளை இந்த டொயோட்டா ஹைலக்ஸ் கச்சிதமாக பூர்த்தி செய்யும். இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கிற்கு போட்டியாக இருந்தாலும், விலை அதிகமாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. இந்த புதிய மாடல் அறிமுகம் குறித்து டொயோட்டா நிறுவனத்திடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.